• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • வெறும் ரூ. 200 ஒதுக்குங்கள்.. ரூ 28 லட்சம் உங்களுக்கு சொந்தமாகும்!

வெறும் ரூ. 200 ஒதுக்குங்கள்.. ரூ 28 லட்சம் உங்களுக்கு சொந்தமாகும்!

எல்.ஐ.சி சேமிப்பு திட்டம்

எல்.ஐ.சி சேமிப்பு திட்டம்

மாதத்துக்கு 6,000 ரூபாய் முதலீடு செய்தாலே 20 ஆண்டுகளில் உங்களுக்கு ரூ.28 லட்சம் கிடைக்கும்.

  • Share this:
    எல்.ஐ.சி ஜீவன் பிரகதி திட்டத்தின் கீழ் தினமும் ரூ 200 சேமித்தால் போது நீங்கள் ரூ. 28 லட்சத்திற்கு அதிபதி ஆவீர்கள்.

    பணத்தை சம்பாதிச்சா மட்டும் போதாது. அதை பக்குவமா சேமிக்கவும் தெரியணும். அப்ப தான் வயசான காலத்துல நம்ம பேர்ல நாலு காசு இருக்கும்.. யாரையும் நம்பி இருக்க வேணாம். யாரு தயவையும் நாடி போக வேணாம். எனக்கு சம்பளம் ரொம்ப கம்மி. ஆனா எதிலாவது பணத்தை போட்டு சேமிக்க வேணும் அப்படின்னு எண்ணம் இருக்கிறதா? இதோ இந்த தகவல் உங்களுக்கு தான்.

    also read வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் முதலில் இதை செய்யுங்கள்!

    எல்.ஐ.சி நிறுவனத்தின் ஜீவன் பிரகதி பாலிசி பற்றி கேள்விபட்டிருக்கிறார்களா? உங்கள் ஓய்வு காலத்தில் நீங்கள் சுகமான வாழ்க்கையை வாழ இது கைக்கொடுக்கும். முதிர்வு காலத்தில் மிகப்பெரிய தொகை உங்கள் கையில் இருக்கும்.இதில் இறப்புக்கான காப்பீடு வசதியும் உண்டு. இந்த திட்டத்தால் பயன்பெற்ற குடும்பங்கள் இங்கு ஏராளம். எல்.ஐ.சி. நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டங்களில் மிக முக்கியமான திட்டமாக இந்த ஜீவன் பிரகதி பாலிசி செயல்பாட்டில் இருக்கிறது.

    ஒரு நாளைக்கு ரூ. 200 ஒதுக்குங்கள் அப்ப மாதத்துக்கு 6000 சேமிப்பீர்கள். குறைந்தது 12 ஆண்டுகளாவது முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சேமிக்கலாம். மாதத்துக்கு 6,000 ரூபாய் முதலீடு செய்தாலே 20 ஆண்டுகளில் உங்களுக்கு ரூ.28 லட்சம் கிடைக்கும். அதுவும் வட்டி சலுகையும் உண்டு. இதுப்போல் ஏராளமான சேமிப்பு திட்டங்களை எல்.ஐ.சி அறிமுகப்படுத்தி வெற்றிக்கரமாக செயல்பாட்டில் வைத்திருக்கிறது. முடிந்தால் அதுக்குறித்து தெளிவாக விசாரித்து பணத்தை சேமிக்க தொடங்குகள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: