அரசு வேலை செய்பவர்களுக்கு தான் ஓய்வு காலத்தில் பென்சன் கிடைக்கும் என்ற ஈர்ப்பு இருந்ததால் தான் பலரும் அரசு வேலையை தேடி செல்கின்றனர். இருப்பினும் தற்போது சில தனியர் கம்பெனிகளிலும் பென்சன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் அது எல்லா தனியார் நிறுவனங்களிலும் நடைமுறையில் இருக்கிறதா? என்றால் பதில் இல்லை. இதனால் தான் அனைவருக்கும் பென்சன் என்ற நோக்கில் எல்.ஐ.சி நிறுவனம் சரல் பென்சன் திட்டத்தை செயல்பாட்டில் வைத்துள்ளது. இதன் மூலம் வாழும் போதும் உங்கள் வாழ்க்கைக்கு பிறகு ரூ. 12,000 பென்சன் பெற முடியும் தெரியுமா?
அதாவது நீங்கள் உயிருடன் இருக்கும் வரைக்கும் உங்கள் கைக்கு பென்சன் வழங்கப்படும். இறந்த பிறகு நமினிக்கு பிரீமியம் தொகை வழங்கப்படும். இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியில் (LIC) முதலீடு செய்ய கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பல தரப்பினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்போது இந்த
திட்டம் குறித்து முழு விவரங்களையும் பார்க்கலாம்.
இதையும் படிங்க. வீட்டில் பெண் குழந்தை இருக்கா? அப்ப இந்த திட்டங்கள் குறித்து கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
இந்த சரல் பென்சன் திட்டத்தில் பாலிசி எடுக்கும் போது மட்டுமே பிரீமியம் செலுத்த வேண்டும்.இதில் 12000 ரூபாய் வரை பென்சன் கிடைக்கும். உங்களின் 40 வயது முதலே நீங்கள் பென்சன் பெற தகுதியானவர்கள் தான்.
இதையும் படிங்க.. வெறும் 5 ஆண்டுகளில் 14 லட்சத்தை திரட்ட போஸ்ட் ஆபீஸ் வழங்கும் வாய்ப்பு!
இத்திட்டத்தின் கீழ் கணவன், மனைவி இருவரும்
பென்சன் பெறலாம். அதாவது இந்த திட்டத்தில் ஜாயிண்ட் அக்கவுண்ட் வசதியும் உள்ளது.இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் பென்சன் கிடைக்கும். இருவரும் இறந்தபின் நாமினிக்கு பிரீமியம் தொகை கிடைக்கும்.இத்திட்டத்தில் ஆண்டுக்கு 12000 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை. ன்லைனிலும், நேரடியாக எல்ஐசி அலுவலகத்திலும் சரல் பென்சன் பாலிசியில் முதலீடு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு எல்.ஐ.சி முகவரை அணுகலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.