• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • கஷ்டப்பட்டு தினமும் ரூ. 200 சேமித்து விடுங்கள்.. அதை ரூ. 28 லட்சமாக மாற்றுவது ரொம்ப சுலபம்!

கஷ்டப்பட்டு தினமும் ரூ. 200 சேமித்து விடுங்கள்.. அதை ரூ. 28 லட்சமாக மாற்றுவது ரொம்ப சுலபம்!

சேமிப்பு திட்டம்

சேமிப்பு திட்டம்

உங்களுக்கு ரூ.28 லட்சம் கிடைக்கும். நல்ல வட்டியுடன் லாபம் பெறலாம்.

  • Share this:
    எல்.ஐ.சியில் இருக்கும் ஜீவன் பிரகதி பாலிசி திட்டம் தான் உங்களின் ரூ. 200 சேமிப்பை ரூ. 28 லட்சமாக மாற்றப்போகிறது.


    எல்.ஐ.சியில் பல்வேறு திட்டங்கள் இருந்தாலும், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆயுள் காப்பீட்டினை அதிகரிக்கும் மற்றும் 28 லட்சம் வரை முதிர்வு தொகையினை ஜூவன் பிரகதி திட்டம் வழங்குகிறது.இத்திட்டத்தில் சிறிய தொகையை முதலீடு செய்ய முடியும். அதாவது தினமும் ரூ. 200. முதிர்வு தொகையாக உங்கள் கைகளுக்கு கிடைப்பது கண்டிப்பாக பெரிய தொகையாக இருக்கும்.கூடுதல் சிறப்பு என்னவென்றால் இத்திட்டத்தில் இறப்புக்கான காப்பீடு வசதியும் உள்ளது.

    12 ஆண்டுகளாவது முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சேமிக்கலாம் மற்றும் 45 வயதுக்கு மேல் இந்த திட்டத்தில் சேர முடியாது. இது மட்டும் தான் தகுதியாக உள்ளது.இதோடு ஜூவன் பிரகதி பாலிசியில் செலுத்தும் பிரீமியம் தொகையினை ஆண்டு பிரீயமாக தேர்ந்தெடுத்தால் 2 சதவீத தள்ளுபடியும், அரையாண்டுக்கு ஒரு முறை பிரீமியம் செலுத்தினால் உங்களது பிரீமியத்தில் 1 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது. ஒரு வேளை இந்த பாலிசியின் மூலம் முதிர்வுத்தொகை ரூ. 2 லட்சம் எனில், 12 வயதில் ரூ.9663ம், 20 வயதில் ரூ.9741ம், 30 வயதில் ரூ.9947ம் மற்றும் 40 வயதில் ரூ.10,662 பிரீமியம் செலுத்த வேண்டும். இதேப்போல் முதிர்வுத்தொகை ரூ. 5 லட்சம் எனில், 12 வயதில் ரூ. 23,157 ம், 20 வயதில் 23,353 ரூபாயும், 30 வயதில் 23 ஆயிரத்து 868 ரூபாய், மற்றும் 40 வயதில் ரூ. 25, 656 பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.

    மேலும் இத்திட்டத்தின் மூலம் ரூ. 28 லட்சம் முதிர்வு தொகை பெற வேண்டும் எனில், தினசரி 200 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.தினமும் ரூ. 200, அப்ப மாதம் ரூ. 6000 முதலீடு செய்தால் 20 ஆண்டுகளில் உங்களுக்கு ரூ.28 லட்சம் கிடைக்கும்.  கூடுதலாக இந்த திட்டத்தில் 15ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கும். இதில் விபத்து காப்பீடாக குறைந்த பட்சம் ரூ. 10 ஆயிரமும், அதிகபட்சம் ரூ. 1 கோடியும் க்ளைம் செய்துகொள்ள முடியும். மேலும் இந்த பாலிசிதாரர் இறந்துவிட நேரிட்டால், இறப்புக்கான அடிப்படை காப்புத்தொகை மற்றும் போனஸ் கிடைக்கும்.இப்படி எண்ணி எண்ணி எத்தனை நாளுக்கு தான் சேமிப்பு என்பதையே தொடங்கலாம் இருக்க போகிறீர்கள்? நல்லா யோசிங்க. ஒரு சூப்பரான முதலீடு திட்டம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் இந்த ஜீவன் பிரகதி பாலிசி திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: