காப்பீட்டுத் தொகையில் குறைந்தது 1 கோடிக்கு உத்திரவாதம் கிடைக்கும் எல்ஐசியின் ஜீவன் சிரோமணி திட்டம் பற்றி தெரியுமா?
காப்பீட்டு திட்டங்களில் முதலீடு என்பது எப்போதுமே நன்மை பயக்கும். அதிலும் குறிப்பாக எல்.ஐ.சி மிகச் சிறந்த காப்பீட்டு திட்டங்களை கொண்டுள்ளது. நல்ல லாபம் தரக்கூடிய, பாதுகாப்பான காப்பீட்டுத் திட்டங்களில் ஜீவன் சிரோமணியும் ஒன்று. பாதுகாப்பு மற்றும் சேமிப்பு இரண்டையும் இந்த திட்டம் வழங்குகிறது. இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் ஜீவன் சிரோமணி திட்டம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தது 1 கோடிக்கு உத்திரவாதம் அளிக்கிறது. இந்த திட்டம் குறித்த முழு விவரத்தையும் பார்க்கலாம் வாங்க.
ஜீவன் ஷிரோமணி திட்டம் இணைக்கப்படாத, வரையறுக்கப்பட்ட பிரீமியம் பணம் திரும்பப் பெறும் திட்டம். இதன் மூலம் பாலிசிதாரர்கள் பணத்தை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பெற்றுக் கொள்ளலாம். முக்கியமாக இது இது சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ள திட்டமாகும். முக்கியமான மருத்துவ சிகிச்சைகளுக்கும் இந்த பாலிசியை பயன்படுத்திக் கொள்ளலாம். கூடவே 3 விருப்ப ரைடர்களும் வழங்கப்பட்டுள்ளது.பாலிசி காலத்தின் போது இறப்பு ஏற்பட்டால் அதற்கான நிதியை வழங்குகிறது. இது தவிர, முதிர்ச்சியின் போது ஒரு மொத்த தொகை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தை தொடங்குவது மற்றும் முதலீடு செய்வதற்கான வழி முறைகள் மற்றும் விதிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த பாலிசியின் சிறப்பு என்னவென்றால், பாலிசி காலத்தின் போது, வாடிக்கையாளர் பாலிசியின் சரண்டர் மதிப்பின் அடிப்படையில் கடன் பெறலாம். இந்த கடன் எல்ஐசியின் நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும். பாலிசி கடன் அவ்வப்போது முடிவு செய்யப்படும் வட்டி விகிதத்தில் கிடைக்கும்.இந்த திட்டத்தின் குறைந்தபட்ச காப்பீடு தொகை ரூ .1 கோடி ஆகும். அதிகபட்ச காப்பீடு தொகைக்கு உச்ச வரம்பு இல்லை.
பாலிசி காலம் 14, 16, 18 மற்றும் 20 ஆண்டுகள் வரை செயல்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இந்த பாலிசியில் இணையலாம். பிரீமியம் செலுத்த வேண்டிய காலம் 4 ஆண்டுகள் என நிர்ணியிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணைவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 14 வருட பாலிசிக்கு 55 ஆண்டுகள், 16 வருட பாலிசிக்கு 51 ஆண்டுகள், 18 வருட பாலிசிக்கு 48 ஆண்டுகள், 20 வருட பாலிசிக்கு 45 ஆண்டுகள் என நிர்ணியிக்கப்பட்டுள்ளது. இந்த பாலிசி குறித்த மேலும் விவரங்களுக்கு எல்.ஐ.சி ஆன்லைன் தளத்தில் சென்று பார்க்கலாம் அல்லது எல்.ஐ.சி முகவரை அணுகலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.