• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • மாதம் வெறும் ரூ.1000 சேமிப்பு... உங்கள் வாழ்வையே மாற்றும்! நம்ப முடிகிறதா?

மாதம் வெறும் ரூ.1000 சேமிப்பு... உங்கள் வாழ்வையே மாற்றும்! நம்ப முடிகிறதா?

எல்.ஐ.சி பென்சன்

எல்.ஐ.சி பென்சன்

இத்திட்டத்தின் மூலம் மாதம் 12,000 ரூபாய் வரை பென்சன் பெற முடியும்.

  • Share this:
    மாதம் ரூ. 1000 சேமியுங்கள் போதும். உங்களை வாழ்வை மாற்றும் சூப்பரான பென்சன் திட்டத்தை எல்.ஐ.சி கொண்டுள்ளது.

    வாழ்நாள் சேமிப்பு என்பது அவசியமான ஒன்று. ஓடி ஆடி சம்பாதிக்கும் வயதிலே சேமிப்பு என்பதை தொடங்கிவிடுங்கள். அதிலும் பென்சன் சேமிப்பு என்பது தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்வர்கள் கண்டிப்பாக தொடங்கினால் நன்மைகள் பெறலாம். அரசு ஊழியர்கள் என்றால் கவலை வேண்டாம் ஓய்வுதியம் வந்து விடும், ஆனால் தனியார் நிறுவன ஊழியர்களின் நிலை அப்படியில்லை, 50 வயதிற்கு மேல் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் அதற்கு ஏதுவாக மாதம் பென்சன் வரும் மாதிரியான திட்டங்களை தொடங்கி சேமிக்க ஆரம்பத்தால் குறைந்தது பிற்காலத்தில் பணப்பிரச்சனையை எண்ணி பயம் கொள்ள வேண்டாம். யாரையும் நம்பியும் பிழைக்க தேவை இருக்காது.

    பென்சன் திட்டம் என்றால் நம்பிக்கையாக இருக்குமா? முதலீடு அதிகமாக செய்ய வேண்டுமா? பீரிமியம் தொகை எப்படி இருக்கும்? இதுப்போன்ற சந்தேகங்கள் உங்களுக்கு எழலாம். பயம் வேண்டாம் நம்பிக்கையான திட்டங்கள் பல உள்ளன. அதில் ஒன்று தான் எல்.ஐ.சியின் சரல் பென்சன்.ஓய்வுக் காலத்தில் பென்ஷன் கிடைக்க வழி வகுக்கும் எளிமையான திட்டம். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச திட்ட தொகையாக மாதம் 1,000 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும்.

    also read.. இந்த 3 வங்கிகளில் இப்படியொரு வசதி இருப்பது உங்களுக்கு தெரியுமா?

    இந்தத் தொகையை மாதாந்தர தவணைகளிலோ, மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ, ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ, வருடத்திற்கு ஒரு முறையோ செலுத்தி வரலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த திட்டத்தில் ஒரே ஒரு பிரீமியம் மட்டும் செலுத்தினால் போதும். அதிகபட்சமாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் ஒருவர் செலுத்தலாம். எவ்வளவு அதிகமாக பிரீமியம் செலுத்துகிறோமோ அந்த அளவுக்கு ஓய்வு காலத்துக்குப் பிறகு, பென்ஷன் பணம் ஒருவருக்குக் கிடைக்கும்.முதலீடு செய்ய குறைந்தபட்ச வயது வரம்பு 40 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 80. இந்த திட்டத்தில் நீங்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.12,000 மாதத்துக்கு ரூ.1000 முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் மூலம் மாதம் 12,000 ரூபாய் வரை பென்சன் பெற முடியும். மேலும் விவரங்களுக்கு எல்.ஐ.சி ஆன்லைன் தளத்தில் சென்று அறியலாம் அல்லது எல்.ஐ.சி முகவரை அணுகவும். ஒரு நல்ல திட்டத்தில் சேர முயற்சி செய்யுங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: