தினமும் ரூ. 200 சேமிப்பு உங்களை லட்சாதிபதி ஆக்க போகிறது தெரியுமா?

லட்சாதிபதி ஆக்கும் திட்டம்

45 வயதுக்கு மேல் இந்த திட்டத்தில் சேர முடியாது. இது மட்டும் தான் தகுதியாக உள்ளது.

 • Share this:
  தினசரி ரூ 200 ரூபாய் முதலீட்டில் ரூ 28 லட்சம் சம்பாதிக்கும் சூப்பரான திட்டம் தான் எல்.ஐ.சியில் இருக்கும் ஜீவன் பிரகதி திட்டம்.

  பணம் எவ்வளவு சம்பாதித்தாலும் செலவாகி விடும். வருவதும் தெரியாது போவதும் தெரியாது. ஆனால், சேமிக்கலாம் என்று திட்டமிட்டும் போது தான் அந்த செலவு, இந்த செலவு என வரிசைக்கட்டி நிற்கும். இப்படி எண்ணி எண்ணி எத்தனை நாளுக்கு தான் சேமிப்பு என்பதையே தொடங்கலாம் இருக்க போகிறீர்கள்? நல்லா யோசிங்க. ஒரு சூப்பரான முதலீடு திட்டம் இங்கே படியுங்கள். பிறகு உங்கள் முடிவை எடுங்கள்.

  அதிலும் நீங்கள் முதலீடு செய்ய இருப்பது நீண்ட ஆண்டுகளாக மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்து பல சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கும் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியில்.இதில் இருக்கும் ஜீவன் பிரகதி பாலிசி திட்டம் கண்டிப்பாக உங்கள் சேமிப்பின் அங்கமாக இருந்து வருவாயை பெருக்கும். இதுப்போல் எண்ணற்ற சேமிப்பு திட்டங்கள் வங்கிகள், அஞ்சலகத்திலும் உள்ளது. இருப்பினும் குறைவான முதலீட்டில் ஒரு சூப்பரான சேமிப்பு திட்டம் என்றால் இந்த ஜீவன் பிரகதி பாலிசி திட்டத்தை கூறலாம். அப்படி என்ன ஸ்பெஷல் என கேட்கிறீர்களா? இதோ விவரம்.

  also read..ஆண்டுக்கு ரூ. 12 போதும்... நீங்கள் 2 லட்சத்திற்கு தகுதி பெறுவீர்கள்! அப்படி ஒரு ஸ்கீம் இருக்கு

  இத்திட்டத்தில் சிறிய தொகையை முதலீடு செய்ய முடியும். அதாவது தினமும் ரூ. 200. முதிர்வு தொகையாக உங்கள் கைகளுக்கு கிடைப்பது கண்டிப்பாக பெரிய தொகையாக இருக்கும்.கூடுதல் சிறப்பு என்னவென்றால் இத்திட்டத்தில் இறப்புக்கான காப்பீடு வசதியும் உள்ளது. தினமும் ரூ. 200, அப்ப மாதம் ரூ. 6000 முதலீடு செய்தால் 20 ஆண்டுகளில் உங்களுக்கு ரூ.28 லட்சம் கிடைக்கும். நல்ல வட்டியுடன் லாபம் பெறலாம். 12 ஆண்டுகளாவது முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சேமிக்கலாம் மற்றும் 45 வயதுக்கு மேல் இந்த திட்டத்தில் சேர முடியாது. இது மட்டும் தான் தகுதியாக உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: