முகப்பு /செய்தி /வணிகம் / LIC : ரூ. 5 லட்சம் சேர்க்க மாதம் ரூ. 800 இருந்தால் போதுமாம்! சூப்பரோ சூப்பர்!

LIC : ரூ. 5 லட்சம் சேர்க்க மாதம் ரூ. 800 இருந்தால் போதுமாம்! சூப்பரோ சூப்பர்!

பிக்சட் டெபாசிட்

பிக்சட் டெபாசிட்

LIC ஜீவன் லாபம் திட்டத்தில் ரூ. 800 சேமித்தால் 5 லட்சம் வரை லாபம் பார்க்கலாம்.

  • Last Updated :

மாதம் ரூ. 800 சேமித்தால் 5 லட்சம் வரை லாபம் பார்க்கக்கூடிய LIC திட்டம் குறித்து தான் இங்கு பார்க்க போகிரோம்.

ரிஸ்க் இல்லாத முதலீடுக்கு கைகொடுக்கும் எல்.ஐ.சியின் ஜீவன் லாபம் திட்டம். 8 முதல் 59 வயது வரையிலானவர்கள் அனைவரும் இந்த பாலிசியில் முதலீடு செய்ய முடியும். பாலிசிதாரர் இறந்துவிட்டால் நாமினிக்கு பலன்கள் கிடைக்கும் எனவே நாமினி தேர்வு செய்வது மிகவும் முக்கியம். மூன்று ஆண்டுகள் பிரீமியம் செலுத்திய பிறகு அவசர தேவைக்கு கடன் வாங்க முடியும். 16 முதல் 25 ஆண்டுகள் வரை இந்த பாலிசியை தேர்வு செய்ய முடியும். மாதம் இந்த திட்டத்தில் ரூ. 800 சேமித்தால் போதும் 25 ஆண்டுகள் கழித்து உங்கள் கைக்கு வரும் பணம் 5.25 லட்சம் ரூபாய்.

ஜீவன் லாபம் ஒரு தனி பாலிசி திட்டம் ஆகும். முதலீட்டாளர்கள் விருப்பம் இருந்தால் நேரடியாகவே இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். பங்குச் சந்தை உயர்ந்தாலும், சரிந்தாலும் சரி உங்களை அது எந்த வகையில் பாதிக்காது. அதனால் ரிஸ்க் என்பதே இங்கு கிடையாது. குழந்தைகளின் எதிர்காலம், திருமணம், கல்வி செலவு போன்ற காரணங்களுக்காக இந்த திட்டத்தை தேர்ந்தெடுத்தால் பயன் நிச்சயம். காரணம், முதலீடு காலம் 25 ஆண்டுகள். நீண்ட காலம் என்பதால் அதற்கான வட்டியும் கிடைக்கும். சரியான நேரத்தில் பணம் பயன்படும்.எல்.ஐ.சியில் இருக்கும் பல்வேறு சேமிப்பு திட்டங்கள், முதலீடு திட்டங்கள், பென்சன் திட்டங்கள், டெபாசிட் திட்டங்கள் குறித்து இதுவரை பார்த்து இருக்கிறோம். அந்த வகையில் ஜீவன் லாபம் திட்டம் மிக மிக முக்கியமானது. அதுமட்டுமில்லை இந்த திட்டத்தில் போனஸூம் உண்டு. மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் இந்த திட்டத்தில் ரூ. 1000க்கு கீழ் தான் முதலீடு. ஆனால் 5 லட்சம் வரை உங்களால் லாபம் பார்க்க முடியும்.

மாதம் 800. ரூ என்று நீங்கள் சேமித்தால் வட்டி, போனஸ் எல்லாம் சேர்த்து உங்களுக்கு மெச்சூரிட்டியின்போது 5.25 லட்சம் வழங்கப்படும். எப்போதுமே எல்.ஐ.சியில் முதலீட்டாளர்களுக்கு பெரியளவில் லாபம் கிடைக்கும் என்பது உண்மை தான். இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு எல்.ஐ.சி முகவரை அணுகவும் அல்லது எல்.ஐ.சி ஆன்லைன் தளத்தில் ஜீவன் லாபம் திட்டம் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளவும்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: LIC