தனியார் காப்பீட்டு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி எல்.ஐ.சி. சாதனை

News18 Tamil
Updated: August 16, 2019, 9:30 PM IST
தனியார் காப்பீட்டு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி எல்.ஐ.சி. சாதனை
எல்ஐசி
News18 Tamil
Updated: August 16, 2019, 9:30 PM IST
தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய ஆயுள் காப்பீட்டு பிரீமியம் தொகை, கடந்த ஜூலை மாதத்தில் 3 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யின் புதிய காப்பீட்டு பாலிசிகளுக்கான பிரீமிய வசூல் தொகை 3.10 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 14,851 கோடி ரூபாயாக இருந்த எல்.ஐ.சி., பிரிமீய வசூல் தொகை நடப்பாண்டு ஜூலை மாதத்தில் 15 ஆயிரத்து 311 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், மற்ற 24 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் 6,197 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


First published: August 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...