சேமிப்பு என்பது கண்டிப்பாக ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான பழக்கங்களில் ஒன்று.
இன்றைய சேமிப்பு நளைய வருவாய். இதை மனதில் கொண்டு நல்ல லாபம் தரக்கூடிய எதிர்பார்க்கும் வட்டி, பணத்திற்கு முழு பாதுகாப்பு தரக்கூடிய திட்டத்தை தேர்ந்தெடுத்தல் சிறப்பான ஒன்று. அந்த வகையில் LICயில் முதலீடு செய்ய திட்டமிடுதல் நல்ல முடிவாகும். பணத்திற்கு பாதுகாப்புடன் நல்ல முதிர்வு தொகையும் கையில் வரும். பல்வேறு சேமிப்பு திட்டங்கள், மியூச்சுவல் ஃபண்டுகளை எல்.ஐ.சி நிறுவனம் செயல்பாட்டில் வைத்துள்ளது. அதில் ஒன்று தான் இந்த ஜீவன் பிரகதி பாலிசி திட்டம்
நீங்கள் முதலீடு செய்ய இருப்பது நீண்ட ஆண்டுகளாக மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்து பல சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கும் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியில்.இதில் இருக்கும் ஜீவன் பிரகதி பாலிசி திட்டம் கண்டிப்பாக உங்கள் சேமிப்பின் அங்கமாக இருந்து வருவாயை பெருக்கும். இதுப்போல் எண்ணற்ற சேமிப்பு திட்டங்கள் வங்கிகள், அஞ்சலகத்திலும் உள்ளது. இருப்பினும் குறைவான முதலீட்டில் ஒரு சூப்பரான சேமிப்பு திட்டம் என்றால் இந்த ஜீவன் பிரகதி பாலிசி திட்டத்தை கூறலாம். அப்படி என்ன ஸ்பெஷல் என கேட்கிறீர்களா? இதோ விவரம்.
இத்திட்டத்தில் சிறிய தொகையை முதலீடு செய்ய முடியும். அதாவது தினமும் ரூ. 200 முதிர்வு தொகையாக உங்கள் கைகளுக்கு கிடைப்பது கண்டிப்பாக பெரிய தொகையாக இருக்கும்.கூடுதல் சிறப்பு என்னவென்றால் இத்திட்டத்தில் இறப்புக்கான காப்பீடு வசதியும் உள்ளது. தினமும் ரூ. 200 அல்லது மாதம் ரூ. 6000 முதலீடு செய்தால் 20 ஆண்டுகளில் உங்களுக்கு ரூ.28 லட்சம் கிடைக்கும். நல்ல வட்டியுடன் லாபம் பெறலாம். 12 ஆண்டுகளாவது முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சேமிக்கலாம் மற்றும் 45 வயதுக்கு மேல் இந்த திட்டத்தில் சேர முடியாது. இது மட்டும் தான் தகுதியாக உள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja Sreeja
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.