முகப்பு /செய்தி /வணிகம் / பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் எல்.ஐ.சியில் இந்த பாலிசியை எடுப்பது அவ்வளவு நல்லது!

பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் எல்.ஐ.சியில் இந்த பாலிசியை எடுப்பது அவ்வளவு நல்லது!

எல்.ஐ.சி

எல்.ஐ.சி

பெற்றோர் இறந்தால், குழந்தையின் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்தவும், குழந்தையின் கல்வியை முடிக்கவும் இது உதவும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக பெண் குழந்தைகள் தினமான இன்று எல்.ஐ.சியில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் மிகச் சிறந்த காப்பீடு திட்டம் குறித்து பார்க்க போகிறோம்.

சரியான காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது பெரியவர்களுக்கு மட்டும் கைக்கொடுப்பதில் சில சமயங்களில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் கைக்கொடுக்கும். இதுப்போன்ற திட்டங்கள் எதிர்பாராத சிரமங்களிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது. பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் கட்டாயம் இதுப்போன்ற திட்டங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அது அவர்களின் எதிர்காலத்தை சிறப்பானதாக்கும். அதே போல் பெண் குழந்தைக்கான பாலிசியைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​சரியான காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

PM KISAN : 12வது தவணை இந்த விவசாயிகளுக்கு கிடைக்காது.. ஏன் தெரியுமா?

பெண் குழந்தையின் எதிர்கால செலவு அது படிப்பு அல்லது திருமணம் எதுவாக இருந்தாலும் அதை சிறப்பாக மாற்றும் கடமை பெற்றோருக்கு உள்ளது. இதனால் தான் இந்தியாவின் மிகச் சிறந்த காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி பெண் குழந்தைகளுக்கான சில சிறந்த எல்ஐசி பாலிசிகளை செயல்பாட்டில் வைத்துள்ளது. அதுக் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெண் குழந்தைகளுக்கான எல்ஐசி திட்டத்தின் பலன்கள்:

பெற்றோர் இறந்தால், குழந்தையின் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்தவும், குழந்தையின் கல்வியை முடிக்கவும் இது உதவும். இதன் மூலம் பெண்கள் உயர்கல்வி எந்த சூழ்நிலையிலும் தொடரலாம். எதிர் காலத்தில் திருமணம் போன்ற பிற முயற்சிகளை

எடுக்கும் போது மொத்தப் பணத்தை வழங்குவதால் இந்த திட்டம் மிகவும் உதவியாக இருக்கும். இந்த திட்டத்தில் விண்ணப்பதாரர் பல்வேறு கூடுதல் சலுகைகளுடன் நேராக மொத்தத் தொகையைப் பெறும் முறையையும் செய்யலாம். இந்த காப்பீட்டில் இருந்து கடன் வாங்குவதும் சாத்தியம்,

எல்ஐசி ஜீவன் தருண்

எல்.ஐ.சி ஜீவன் தருண் என்பது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி இருவராலும் பெறக்கூடிய ஒரு பாலிசி ஆகும், இதில் உங்கள் பெண் குழந்தையின் எதிர்காலத் தேவைகளுக்கு உதவுவதற்கும் பாதுகாப்பதற்கும் பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக உங்கள் குழந்தையின் கல்வி மற்றும் எதிர்கால பாதுகாப்பிற்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் வளரும் குழந்தையின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.

இது பிரீமியம் அம்சத்தைக் கொண்டுள்ளது.முதிர்வுத் தொகை 10 (10D) வரி இல்லாதது. 80C இன் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.பாலிசி தொடங்கப்பட்டதிலிருந்து இரண்டு வருடங்கள் அல்லது குழந்தை 8 வயதை எட்டும்போது அந்த பெண் குழந்தைக்கு ரிஸ்க் கவரேஜ் கிடைக்கும். பெற்றோரின் மரணத்தின் போது, ​​ செலுத்தப்பட்ட அனைத்து பிரீமியங்களில் 105% அல்லது மொத்த காப்பீட்டில் 125% பெறலாம்.

தவறான அக்கவுண்டிற்கு பணம் அனுப்பி விட்டீர்களா? 48 மணி நேரத்தில் புகாருக்கு தீர்வு!

பாலிசி குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகையானது ரூ. 75,000 மற்றும் அதிகபட்ச தொகை கட்டுப்பாடு இல்லை.குறைந்தபட்ச நுழைவு வயது குழந்தை பிறந்து 90 நாட்கள் முதல் 12 வயது வரை.

பிரீமியம் செலுத்தும் காலம்:  குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 20 ஆண்டுகள் ஆகும். இருப்பினும், 5 வயது குழந்தை விஷயத்தில் 15 ஆண்டுகள் வரை செலுத்தலாம்.  கூடுதல்  விவரங்களுக்கு எல்ஐசி ஜீவன் தருண் பாலிசி குறித்து ஆன்லைனில் செக் செய்யவும்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Girl Child, LIC, Savings