Home /News /business /

LICக்கு இப்படியொரு பெருமையா? ஆய்வறிக்கை வெளியீடு!

LICக்கு இப்படியொரு பெருமையா? ஆய்வறிக்கை வெளியீடு!

எல்.ஐ.சி

எல்.ஐ.சி

lic : எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்பது ரூ.43.40 லட்சம் கோடியாக இருக்கும் அல்லது 59.21 பில்லியன் டாலராக இருக்கும்.

    நாட்டில் எத்தனையோ இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இருந்தாலும், லைப் இன்சூரன்ஸ் என்றாலே நம் எல்லோர் மனதிலும் உடனடியாக நினைவுக்கு வருவது எல்ஐசி தான்.

    உள்நாட்டில் மிக பெரிய ஷேர் சேல் வேல்யூக்களை கொண்டது இந்நிறுவனம். சுமார் 8.656 பில்லியன் டாலர் மதிப்புடன் நாட்டிலேயே மிகவும் பலம் பொருந்திய மற்றும் மிக பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமாக எல்ஐசி இருக்கிறது. அதேசமயம், உலக அளவில் உள்ள இன்சூரன்ஸ் பிராண்ட் நிறுவனங்களில் எல்ஐசி-க்கு 3ஆம் இடம் கிடைத்திருக்கிறது என்று பிராண்ட் பைனான்ஸ் என்ற அறிக்கை தெரிவிக்கிறது. லண்டனைச் சேர்ந்த பிராண்ட் பைனான்ஸ் என்ற கன்சல்டன்சி நிறுவனம் சார்பில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இதன்படி, 2022ஆம் ஆண்டு முடிவில் எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்பது ரூ.43.40 லட்சம் கோடியாக இருக்கும் அல்லது 59.21 பில்லியன் டாலராக இருக்கும். அதுவே 2027ஆம் ஆண்டுக்குள் இந்நிறுவனத்தின் மதிப்பு ரூ.58.9 லட்சம் கோடி அல்லது 78.63 பில்லியன் டாலராக உயரும். கடந்த 2020 ஆண்டில், உலக அளவிலான பிராண்ட் வேல்யூ மதிப்பீடு குறித்த பட்டியலில் 238ஆவது இடத்தில் இருந்த எல்ஐசி நிறுவனம், ஒரே ஆண்டில் 32 இடங்கள் முன்னேறி தற்போது 206ஆம் இடத்துக்கு வந்துள்ளது.

    இதையும் படிங்க.. குடும்பத்திற்காக ஒரு நல்ல பாலிசியை தேடுகிறீர்களா? இதை கொஞ்சம் பாருங்க!

    அதேசமயம், இந்த மதிப்பீட்டின் படி, இந்தியாவில் வலிமையான மற்றும் முதன்மையான பிராண்ட் நிறுவனமாக எல்ஐசி உருவெடுத்துள்ளது. இதன் பிராண்ட் வேல்யூ மதிப்பு 8.655 பில்லியன் டாலராகும். இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 6.8 சதவீதம் அதிகமாகும். சர்வதேச அளவில் முதல் 100 இடங்களில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பிராண்ட் மதிப்பு 6 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ள நிலையில், எல்ஐசி நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு உயர்ந்திருப்பது மிகுந்த சிறப்புக்குரிய விஷயமாக இருக்கிறது.

    உள்நாட்டு அளவில் கணக்கீடு செய்யப்பட்ட பிராண்ட் வேல்யூ குறித்த பட்டியலில் 84.1 மதிப்பெண்களுடன் எல்ஐசி நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது. சர்வதேச அளவில், இத்தாலியில் உள்ள போஸ்டே இத்தாலியனே இன்சூரன்ஸ் நிறுவனம் முதல் இடத்தையும், ஸ்பெயின் நாட்டில் உள்ள மேப்ரே நிறுவனம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.

    ithaiyum padingka.. போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் இருக்கும் அனைவருக்கும் இது பொருந்தும்... வந்திருக்கும் புதிய மாற்றங்கள்!

    உலக அளவில் முதல் 10 இடங்களை பெற்றுள்ள நிறுவனங்களில் சீனாவின் 5 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. அமெரிக்காவில் இருந்து 2 நிறுவனங்களும், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இந்தியாவில் இருந்து தலா ஒரு நிறுவனமும் முதன்மையான பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

    கடந்த 2014ஆம் ஆண்டில் எல்ஐசி நிறுவனம் பெற்றிருந்த வளர்ச்சியை காட்டிலும் தற்போது 151 சதவீத வளர்ச்சியை அந்நிறுவனம் எட்டியுள்ளது. குறிப்பாக, ஆண்டுக்கு 14 சதவீத வளர்ச்சியை எல்ஐசி நிறுவனம் அடைந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: LIC, Savings

    அடுத்த செய்தி