Home /News /business /

LIC : ஐபிஓ பங்கு உங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதா? நீங்களே ஆன்லைனில் பார்க்கலாம்!

LIC : ஐபிஓ பங்கு உங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதா? நீங்களே ஆன்லைனில் பார்க்கலாம்!

எல்.ஐ.சி

எல்.ஐ.சி

LIC life insurance corporation: எல்ஐசி ஐபிஓவில் உங்களுக்கும் பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதா? என்பதை அறிய வேண்டுமா?

    இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமாக எல்ஐசி 1.2 கோடிக்கு மேலான முகவர்கள் மற்றும் 25 கோடிக்கும் மேலான பாலிசிகளை கொண்டுள்ளது. உலகிலேயே 3வது இடத்தில் உள்ள மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யின் நிகர சொத்து மதிப்பு மட்டும் 5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.இந்நிலையில் .எல்ஐசி பங்குகளில் 5 சதவீதத்தை விற்பனை செய்து ரூ.78 ஆயிரம் கோடி நிதி திட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியிடம் பொது பங்கு வெளியீட்டிற்கான வரைவு அறிக்கையை (DRHP) எல்ஐசி தாக்கல் செய்தது. பொது பங்குகளை விற்க அரசும் அனுமதி வழங்கியது. 

    பங்குகள் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு, மே 12ம் தேதி பங்கு ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் எல்ஐசியின் ஐபிஓ பங்குகள்  யாருக்கெல்லாம் ஓதுக்கீடு செய்யப்படும், ஒதுக்கீடு செய்யப்படும் ஐபிஓ நிலை என்ன? என்பதை தெரிந்து கொள்வதில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர். இதில் ஒரு ஈக்விட்டி பங்கின் ஐபிஓ விலை 902-949 ரூ வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிலும் . எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு ரூ.60 தள்ளுபடியும், சில்லறை முதலீட்டாளர்கள் ரூ.40 தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒதுக்கீடு செய்யப்பட்ட எல்ஐசி ஐபிஓவில் உங்களுக்கும் பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதா? என்பதை அறிய வேண்டுமா? அதை ஆன்லைனிலே செக் செய்யலாம் .

    PPF : 15 வருட சேமிப்பு முடிந்த பின்பும் வட்டி கிடைக்க இதுதான் பெஸ்ட் சாய்ஸ்!

    ஆன்லைனில் தெரிந்து கொள்ளும் முறை:

    நீங்கள் எல்ஐசி பாலிசிதாரராக இருந்தால்,ஐபிஓவில் கலந்து கொள்ள நினைத்தால் அதற்கு முதலில் உங்களின்  டிமேட் கணக்கு ஆக்டிவாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதுமட்டுமில்லை உங்களுடைய டிமேட் கணக்கு விவரங்கள் மற்றும் பான் கணக்கின் தகவலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். இதன் பின்பு தான் தகுதிகள் அடிப்படையில்பாலிசிதாரர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பணியாளர்கள் “பாலிசிதாரர் முன்பதிவுப் பகுதிக்கு” விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். இங்கு 3 வகைகளில் ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவீர்கள்.

    1. https://www.bseindia.com/investors/appli_check.aspx இந்த இணைப்பிற்குள் சென்று ஈக்விட்டி என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

    2. பின்பு அங்கு லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா என்பதை தேர்வு செய்து, ஐபிஓ விண்ணப்ப எண் அல்லது பான் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

    போஸ்ட் ஆபீஸ் திட்டம் குறித்து சந்தேகமா? இந்த நம்பருக்கு ஃபோன் செய்தாலே போதும்!

    3. இப்போது, உங்களுக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்க முடியும்.

    இந்த எல்ஐசி ஐபிஓ-வில் பங்குகள் கிடைக்காதவர்களின் பணம் இன்று ( மே 13-ம் தேதி) ரீஃபண்ட் செய்யப்படும்.அது வரும் மே 16-ம் தேதி டீமேட் கணக்கில் பங்குகள் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: LIC, Life Insurance

    அடுத்த செய்தி