காலாவதியான எல்.ஐ.சி., பாலிசிகளை, வரும் அக்டோபர் 21 வரை புதுப்பித்துக் கொள்ளலாம் என எல்.ஐ.சி அறிவித்துள்ளது. இதை செய்ய எல்.ஐ.சி. நிறுவனம் நடத்தும் சிறப்பு முகாமுக்கு செல்லாம்.
பாதுகாப்பான எதிர்காலத்தை விரும்பும் இந்தியர்களுக்கு பணத்தைச் சேமிப்பதற்கான மிகவும் பிரபலமான வழிகளில் ஒன்று எல்ஐசி (லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) . எல்ஐசி பாலிசியில் முதலீடு செய்வது என்பது குறைந்த அளவிலான அபாயம் கொண்டதாகவும், உத்தரவாதமான வருமானத்தைப் பெறுவதற்கான வழிமுறையாகவும் உள்ளது. இது ஒரு சேமிப்பு முறையாக உள்ளதால் பல இந்தியர்கள் எல்ஐசி-யில் சேமிப்பு கணக்கை துவங்குகின்றனர்.அதே போன்று குறிப்பிட்ட நபர்களுக்கு குறிப்பிட்ட திட்டங்களை எல்ஐசி வகுத்துள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வயதுடைய மக்களுக்கும் காப்பீட்டுத் திட்டங்களைக் கொண்டுள்ளதால் இது மிகவும் பிரபலமான வழியாக உள்ளது.
பெண்களுக்கான முதலீடு.. தங்கம் அல்லது ரியல் எஸ்டேட் எது பெஸ்ட்?
நீங்கள் ஏற்கெனவே எல்.ஐ.சியில் பாலிசி திட்டம் தொடங்கி அதை தொடராமல் பாதியில் மிஸ் செய்து விட்டு இருந்தால் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தை அந்த திட்டத்தை புதுப்பித்து கொள்ளுங்கள். யுலிப் பாலிசி'கள் தவிர, மற்ற அனைத்து காலாவதியான பாலிசிகளை, அக்டோபர் 21-ம் தேதி வரை, நிபந்தனைகளுக்கு உட்பட்டு புதுப்பித்து கொள்ளலாம். அதுமட்டுமில்லை ஒரு லட்சம் ரூபாய் வரை 'பிரீமியம்' செலுத்தியிருந்தால், தாமத கட்டணத்தில் 25 சதவீதம், அதிகபட்சமாக 2,500 ரூபாய்; 3 லட்சம் ரூபாய் வரை பிரீமியம் செலுத்தியிருந்தால், 25 சதவீதம், அதிகபட்சமாக 3,000 ரூபாய் சலுகை பெறலாம்.மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் பிரீமியம் செலுத்தியிருந்தால், 30 சதவீதம், அதிகபட்சமாக 3,500 ரூபாய் தள்ளுபடி சலுகை பெறலாம்.
கடன் வாங்கியவர்களை டார்ச்சர் செய்ய கூடாது..விதியை கடுமையாக்கிய ஆர்.பி.ஐ!
எல்.ஐ.சி சார்பில் நடத்தப்படும் இந்த முகாமில் முதல் பிரீமியத்தின் தேதியிலிருந்து, ஐந்து ஆண்டுகளுக்குள் உள்ள பாலிசிகளை, இந்த சிறப்பு திட்டத்தில் புதுப்பிக்கலாம். மிஸ் செய்யாமல் உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்தி காலாவதியான எல்.ஐ.சி., பாலிசிகளை புதுப்பித்து கொள்ளுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Govt Scheme, LIC