இன்றைய உலகில் ஒவ்வொருவரும் பொருளாதார ரீதியாக பாதுகாப்பான எதிர்காலத்தை விரும்புகிறார்கள். இதற்காக முறையாகவும், சீராகவும் சேமிப்பைத் தொடங்க வேண்டும் என்றே பலர் ஆசைப்படுவார்கள். அதே போன்று சேமிப்பு தான் எதிர்கால பிரச்சனைகளை சமாளிக்க கூடிய உறுதியை கொடுக்கிறது என்பதால் இது எல்லோரின் வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, எல்ஐசி போன்ற நிறுவனங்கள் பல வித திட்டங்களை மக்களுக்காக அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், எல்ஐசி தற்போது புதிய பென்ஷன் பிளஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த செப்டம்பர் 5 அன்று இந்த புதிய திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தனிநபர் ஓய்வூதியத் திட்டமானது, முறையான மற்றும் ஒழுக்கமான சேமிப்பின் மூலம் ஒரு நல்ல தொகையை எதிர்காலத்துக்காக சேர்த்து வைக்க முடியும். இதில் வழக்கமான பிரீமியம் செலுத்தும் ஆப்ஷனும், அல்லது ஒரு முறை மட்டும் செலுத்தும் பிரீமியம் ஆப்ஷனும் கிடைக்கிறது.
இதில் பாலிசிதாரர்கள் தாங்கள் செலுத்த விரும்பும் பிரீமியம் தொகையைத் தேர்ந்தெடுக்க கூடிய விருப்பம் உள்ளது. குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச பிரீமியம் வரம்புகள், பாலிசி கால அளவு மற்றும் வயதுக்கு ஏற்ப பாலிசி காலத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பமும் இதில் உள்ளது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பாலிசிதாரர் அதே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் பாலிசிக்கான கால அளவை நீடிக்கலாம்.
நான்கு வெவ்வேறு வகையான ஃபண்டுகளில், பிரீமியங்களை முதலீடு செய்வதற்கான வசதியும் பாலிசிதாரருக்கு வழங்கப்படுகிறது. மேலும், பாலிசிதாரரிடம் அவர்கள் செலுத்தும் ஒவ்வொரு பிரீமியத்திற்கும் பிரீமியம் ஒதுக்கீடு கட்டணம் வசூலிக்கப்படும். இதில் மீதமுள்ள தொகை, ஒதுக்கீடு விகிதம் என குறிப்பிடப்படுகிறது. இது பாலிசிதாரர் தேர்ந்தெடுத்த நிதியின் யூனிட்களை வாங்கப் பயன்படுத்தப்படும் பிரீமியத்தின் பகுதியாகும் என்று குறிப்பிட்டுள்ளனர்.ஒருவர் பிரீமியம் திட்டங்களை முகவர் மூலமாகவோ அல்லது எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்றோ வாங்கலாம்.
Also Read : இந்த வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்கியுள்ளீர்களா.? வட்டி விகிதம் உயர்ந்துள்ளதாம் - எவ்வளவு தெரியுமா.?
இந்தியாவில் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனமானது, ரூ. 5,53,721.92 லட்சம் கோடி மதிப்புள்ள சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் ஐந்தாவது பெரிய நிறுவனமாக உயர்ந்தது. எல்ஐசி-இன் பங்குகள் செவ்வாய்க்கிழமை அன்று 8.61%-இல் இருந்தது. மேலும் ஒரு பங்கிற்கு ரூ 867.20 என்று பங்குகள் தொடங்கப்பட்டது. இதன் மூலம் எல்ஐசி எந்த அளவிற்கு இந்தியாவில் மிக முக்கிய சேமிப்பு நிறுவனமாக உருவாகி உள்ளது என்பதை உணரலாம். எல்ஐசி நடுத்தர மக்களின் வாழ்வில் பல மாற்றங்களை கொண்டு வர உதவ கூடிய ஒரு மைய புள்ளியாகவும் இருந்து வருகிறது. அதே போன்று இறுதி காலத்தை கவலை இல்லாமல் போக்கவும் எல்ஐசி பெரிய அளவில் உதவுகிறது என்றே சொல்லலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: LIC, Pension Plan