ஹோம் /நியூஸ் /வணிகம் /

குழந்தைகளுக்கு பாலிசி எடுக்க திட்டமா! எல்ஐசியின் அருமையான திட்டம்

குழந்தைகளுக்கு பாலிசி எடுக்க திட்டமா! எல்ஐசியின் அருமையான திட்டம்

எல்ஐசி

எல்ஐசி

LIC's Jeevan Tarun Policy | எல்ஐசி குழந்தைகளுக்காக ஜீவன் தருண் என்ற ஒரு காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த பாலிசி பற்றிய அம்சங்கள், இதில் கிடைக்கும் பலன்கள் என்று அனைத்து விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

காப்பீடு என்று வரும் பொழுது பெரும்பாலானவர்கள் எல்ஐசி நிறுவனத்தையே இப்போது வரை தேர்வு செய்கிறார்கள். பல தரப்பட்ட மக்களுக்கு தேவையான, சேமிப்பு, முதலீடு மற்றும் பாதுகாப்பு என்று பலவிதமான நோக்கங்களை எல்ஐசி காப்பீட்டு திட்டங்கள் வழங்குகின்றன. சமீபத்தில் எல்ஐசி குழந்தைகளுக்காக ஜீவன் தருண் என்ற ஒரு காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு என்ற இரண்டு அம்சங்களின் கலவையாக அறிமுகம் ஆகியுள்ளது. இது குழந்தைகளின் எதிர்கால கல்விக்கு தேவையான நிதி உதவியையும் வழங்குகிறது. இந்த பாலிசி பற்றிய அம்சங்கள், இதில் கிடைக்கும் பலன்கள் என்று அனைத்து விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.

ஜீவன் தருண் காப்பீடு – வயது, தகுதி, கால அளவு, காப்பீட்டுத் தொகை

ஜீவன் தருண் பாலிசியில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ₹75,000 ஆகும். ஆனால் அதிகபட்சமாக இவ்வளவுதான் என்று எந்தத் தொகையும் நிர்ணயிக்கப்படவில்லை. காப்பீட்டுத் தொகை ₹1,00,000 வரை ₹5000 என்ற அடிப்படையில் அதிகரித்துக்கொள்ளலாம். ₹1,00,000 க்கு மேற்பட்டு போனால் ₹10,000 என்ற அடிப்படையில் காப்பீட்டுத் தொகையை அதிகரித்துக்கொள்ளலாம்.

காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதற்கான குறைந்தபட்ச வயது - 90 நாட்கள்

காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதற்கான அதிகபட்ச வயது - 12 ஆண்டுகள்

காப்பீட்டு தொகையின் முதிர்வு காலம் - 25 வயது

பாலிசியின் அதிகபட்ச கால அளவு - 25 ஆண்டுகள்

அதிகபட்ச பிரீமியம் செலுத்தும் காலம் - 20 ஆண்டுகள்

பிறந்த குழந்தை முதல், 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு, அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என்று யார் வேண்டுமானாலும் இந்த பாலிசியை வாங்கலாம்.

ஜீவன் தருண் காப்பீட்டின் சர்வைவல் அம்சங்கள் மற்றும் நன்மைகள்

ஜீவன் தருண் காப்பீடு வாங்குபவர்களுக்கான ஆயுள் காப்பீடாகவும், வாங்குபவர்களின் குழந்தைக்கான எதிர்காலத்திற்கு நிதி ரீதியான பாதுகாப்பை வழங்கும் கல்வி காப்பீடாகவும் செயல்படுகிறது. எனவே ஆயுள் காப்பீடாக பயன்படும் பொழுது காப்பீட்டை வாங்கியவர் எதிர்பாராத விதமாக இறந்து போனால் காப்பீட்டின் நன்மைகள் குழந்தைகளுக்கு கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் சர்வைவல் அம்சங்களும் உள்ளன. அதாவது காப்பீட்டாளர் காப்பீட்டு முதிர்வு அடைந்த பின்னும் உயிருடன் இருக்கிறார் என்ற பட்சத்தில் அதற்கான நன்மைகளும் கிடைக்கும். எனவே இது டெர்ம் பாலிசி போல அல்லாமல், காப்பீட்டாளர் உயிருடன் இருந்தாலும் இல்லை என்றாலும் அதற்கான நன்மைகள் கிடைக்கும்.

Also Read : No Cost EMI – வட்டியில்லாமல் தவணை முறையில் பொருட்கள் வாங்குகிறீர்களா? இந்த தகவல் உங்களுக்கே!

சர்வைவல் அம்சங்கள் :

காப்பீட்டாளர் உயிருடன் இருக்கும் பட்சத்தில், சர்வைவல் நன்மைகளில் நான்கு ஆப்ஷன்கள் உள்ளன.

விருப்பத் தேர்வு ஒன்றில், எந்தவிதமான சர்வைவல் நன்மையும் கிடையாது. ஆனால் பாலிசி வைத்திருப்பவர்களுக்கு, எவ்வளவு தொகைக்கு பாலிசி எடுக்கப்பட்டு இருக்கிறதோ அந்த தொகை முழுவதுமாக வழங்கப்படும்.

இரண்டாவது விருப்பத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 5% என்ற வீதம் பாலிசி எடுக்கப்பட்ட தொகையில் இருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும். முதிர்வு நன்மையாக 75% ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு வழங்கப்படும்.

மூன்றாவது விருப்பத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 10% என்ற வீதம் பாலிசி எடுக்கப்பட்ட தொகையில் இருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும். முதிர்வு நன்மையாக 50% ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு வழங்கப்படும்.

நான்காவது விருப்பத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 15% என்ற வீதம் பாலிசி எடுக்கப்பட்ட தொகையில் இருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும். முதிர்வு நன்மையாக 25% ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு வழங்கப்படும்.

Also Read : போஸ்ட் ஆபிசில் சூப்பரான சேமிப்பு திட்டம்! வட்டி விகிதங்கள் உயர்வு; குஷியில் முதலீட்டாளர்கள்!

பாலிசிதாரர் இறந்து போனால் கிடைக்கும் நன்மைகள் :

பாலிசிதாரர், பாலிசி முடிவடையும் காலத்திற்கு முன்பே இறந்து போனால் பின்வரும் கணக்கீடுகளில் அடிப்படையில் பிரீமியம் செலுத்தப்பட்டு, முதிர்வு தொகை வழங்கப்படும்.

பிரீமியம் செலுத்தப்பட்ட தொகைக்கான ரிஸ்க் ரீபண்டு காலம் தொடங்கும் முன்னரே பாலிசிதாரர் இறந்து போனால், வரி தவிர்த்து, பாலிசிதாரர் செலுத்திய அனைத்து பிரீமியம் தொகையுமே திருப்பி வழங்கப்படும்.

ரிஸ்க் தொடங்கிய பிறகு பாலிசிதாரர் இறந்து போனால், காப்பீட்டுத் தொகை மற்றும் அதற்குரிய போனஸ், கூடுதல் போனஸ் என்று அனைத்துமே காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படும்.

Also Read : விரைவில் டிஜிட்டல் கரன்சி... ரிசர்வ் வங்கி அறிவிப்பு

செலுத்தப்பட்ட மொத்த பிரீமியத்தின் 105 சதவிகிதத்தை விட செட்டில்மெண்ட் தொகை குறைவாக இருக்கக் கூடாது. பாலிசிதாரர் இறந்து போனால் செட்டில் செய்யக்கூடிய தொகையாக ஓர் ஆண்டு பிரீமியத்தின் ஏழு மடங்கு தொகை அல்லது காப்பீட்டு தொகையில் 125% இவற்றில் எது அதிகமாக இருக்கிறதோ அது வழங்கப்படும்.

Published by:Selvi M
First published:

Tags: Children, Insurance, LIC