குழந்தைகளின் படிப்பு மற்றும் எதிர்கால செலவுக்காக ஒரு சிறந்த சேமிப்பு திட்டத்தை தேடி கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் தான் இந்த பதிவை கட்டாயம் படிக்க வேண்டும்.
காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சியில் பல வகையான சேமிப்பு, முதலீடு, காப்பீடு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதில் ஒன்றுதான் ஜீவன் தருண் பாலிசி . இந்த திட்டத்தில் குழந்தைகள் பிறந்த 90 நாள் முதல் 12 வயதுக்குள் முதலீடு செய்ய வேண்டும். உங்கள் பிள்ளைகளின் வயது 20 ஆகும் வரை முதலீடு செய்யலாம். பிள்ளைகளின் வயது 25 ஆகும் போது பாலிசி முதீர்வடையும்.ஜீவன் தருண் திட்டத்தில் அதிகபட்ச வரம்பு என்று ஏதுமில்லை.
கிரெடிட் கார்டு வாங்க ஆசைப்படுறீங்களா? அதுக்கு முன்னாடி இதை தெரிஞ்சுக்கோங்க!
20 முதல் 24 வயது வரையிலான வருடாந்திர சர்வைவல் பெனிபிட் மற்றும் 25 வயதில் முதிர்வுப் பலன்கள் மூலம் வரும் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற நிதித் தேவைகளை இந்தத் திட்டம் பூர்த்தி செய்யும். குறைந்தபட்ச வயது 90 நாட்கள், மற்றும் நுழைவதற்கான அதிகபட்ச வயது 12 ஆண்டுகள். திட்டத்தின் அதிகபட்ச முதிர்வு 25 ஆண்டுகள். பாலிசி கால அளவு 25 ஆண்டுகள், பிரீமியம் செலுத்தும் காலம் (PPT) 20 ஆண்டுகள்.
வட்டியை உயர்த்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.. இனி லாபம் அதிகமா கிடைக்கும்!
உங்கள் குழந்தைகளின் வயது 12 ஆகும் போது நீங்கள் முதலீட்டை செய்ய தொடங்கினால் 13 வருடங்களுக்கு பிறகு பாலிசி முதிர்ச்சியடையும். இந்த பாலிசியில் தினமும் 150 ரூபாய் முதலீடு செய்தால் ஒரு வருடத்திற்கு 55,000 ரூபாய் பிரீமியாமாக செலுத்துவீர்கள். இப்படி தினமும் ரூ. 150 என வருடத்திற்கு ரூ. 55,000 முதலீடு செய்து வந்தால் பிள்ளைகளுக்கு 25 வயது ஆகும் போது பாலிசி முதீர்வடையும்.
பாலிசி முதிர்வடையும் போது போனஸ் தொகை, குறைந்தபட்ச உறுதித் தொகை, லாயல்ட்டி தொகை ஆகியவை சேர்த்து உங்களின் சேமிப்பு தொகை உயரும். இந்த பாலிசியில் முதலீடு செய்யும் போது கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 5, 10, 15 சதவீத தொகையை இடையில் பெறவும் முடியும். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு எல்.ஐ.சி முகவர்களை அணுகலாம். எல்.ஐ.சி ஆன்லைன் போர்டல் தளத்திலும் பார்வையிடலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Govt Scheme, LIC, Savings