இன்ஷுரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் என்று நினைக்கும் பல இந்தியர்களின் விருப்பம் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் அதாவது LIC வழங்கும் பாலிசிகளாக இருக்கின்றன.
LIC பாலிசிகள் பாலினம், வயது மற்றும் பொருளாதாரப் பின்னணி ஆகியவற்றின் அடிப்படையில் நிர்வகிக்கப்பட்ட பாலிசிகளுடன் வெளிவருகிறது. அரசு ஆதரவுடன் கிட்டத்தட்ட அனைத்து வயது மற்றும் வகை மக்களுக்குமான காப்பீட்டு திட்டங்களைக் LIC கொண்டுள்ளது. மிடில் அல்லது லோயர் கேட்டகிரி வகுப்பினருக்கான சிறந்த காப்பீட்டு கொள்கைகளைத் தவிர, உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்களுக்கு (High Net Worth Individuals) ஏற்ற வகையிலான சில பாலிசிகளை LIC கொண்டுள்ளது.
HNI பிரிவு மக்களிடம் அதிக செல்வம் இருந்தாலும் கூட குடும்பத்தை கவனிக்கும் நபர் இல்லாத நிலையில் அந்த குடும்பத்திற்கு நிலையான வாழ்க்கையை வழங்குவதே இப்பிரிவினருக்கான ஆயுள் காப்பீடு அறிமுகப்படுத்தப்பட காரணம் ஆகும். எனவே HNI-க்கள் தங்கள் குடும்பத்தினர் எதிர்கொள்ள நேரிடும் நிச்சயமற்ற காலங்களை சமாளிக்க ஒரு நல்ல காப்பீட்டுக் கொள்கையை வைத்திருப்பது அவசியம். இவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பயனுள்ள பாலிசிகளில் ஒன்று தான் எல்ஐசி ஜீவன் ஷிரோமணி பாலிசி (LIC Jeevan Shiromani Policy).
எல்ஐசி ஜீவன் சிரோமணி பாலிசி என்றால் என்ன?
LIC ஜீவன் ஷிரோமணி பாலிசி என்பது நான்-லிங்க்ட், பார்ட்டிசிபேட்டிங், இன்டிவிஜுவல் ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இது குறைந்தப்பட்ச அடிப்படைத் தொகையான ரூ. 1 கோடியுடன் கூடிய வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் பணத்தைத் மணி பேக் லைஃப் இன்ஷுரன்ஸ் பிளான் ஆகும், குறிப்பாக ஹை நெட்-வொர்த் இன்டிவிஜுவல்ஸ் பிரிவினருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ALSO READ | உக்ரைன் போரால் ஏற்படும் பணவீக்கத்தை சமாளிக்க ஆசிய நாடுகள் தயாராகவேண்டும் - ஐ.எம்.எப்.
இந்த திட்டத்தின் கீழ் உத்தரவாத சேர்த்தல்கள் ( Guaranteed Additions) முதல் 5 ஆண்டுகளுக்கு ஆயிரம் அடிப்படைத் தொகைக்கு ரூ.50 வீதம் மற்றும் 6-வது பாலிசி ஆண்டு முதல் பிரீமியம் செலுத்தும் காலம் முடியும் வரை ரூ.55/- அடிப்படை தொகையாக கிடைக்கும்.
தகுதி:
எல்ஐசி ஜீவன் சிரோமணி பிளானை பொறுத்தவரை பாலிசி காலத்தைப் பொறுத்து குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 55 வயது ஆகும். பாலிசி காலம் 14, 16, 18 மற்றும் 20 ஆண்டுகள். பாலிசி காலமான 14 ஆண்டுகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 55, 16 ஆண்டு பாலிசி காலத்திற்கு வயது வரம்பு 51 , 18 ஆண்டு பாலிசி காலத்திற்கு வயது வரம்பு 48, 20 ஆண்டு பாலிசி காலத்திற்கு வயது வரம்பு 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பாலிசி மூலம் ரூ.1 கோடி பெறுவது எப்படி?
இந்த பாலிசியானது ரூ.1 கோடிக்கான அடிப்படைத் தொகையை வழங்குகிறது மற்றும் பாலிசிதாரர் இந்த பாலிசியில் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். பின் அவர் வருமானத்தைப் பெறுவார். எல்ஐசி ஜீவன் சிரோமணி பாலிசி 14, 16, 18 மற்றும் 20 ஆண்டுகளில் 4 வெவ்வேறு விதிமுறைகளில் முதிர்ச்சியடைகிறது.இந்த பாலிசியின் பலன்களை பெற பாலிசிதாரர் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.94,000 மாதாந்திர பிரீமியம் செலுத்த வேண்டும். இந்த பாலிசியின் கீழ் குறைந்தபட்சம் 1 முழு வருட பிரீமியத்திற்கான பிரீமியத்தை செலுத்தி, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரு பாலிசி ஆண்டை முடித்தவுடன் கடன் வசதியும் பாலிசிதாரருக்கு கிடைக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: LIC