Home /News /business /

4 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகலாம்.. எல்.ஐ.சி தரும் அருமையான வாய்ப்பு!

4 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகலாம்.. எல்.ஐ.சி தரும் அருமையான வாய்ப்பு!

எல்.ஐ.சி

எல்.ஐ.சி

இந்த பாலிசியில் சேருவதற்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்

    இன்சூரன்ஸ் திட்டங்களில் சேர வேண்டும் என்கிற போது, இந்தியர்கள் பெரும்பாலும் எல்ஐசி நிறுவனத்தின் பாலிசிக்களைத் தான் தேர்வு செய்கின்றனர். இதன் விளைவாக குறிப்பிட்ட சில மக்கள் குழுவுக்காக சிறப்புவாய்ந்த உத்திகளை எல்ஐசி நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.

    அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிறப்பு வாய்ந்த பாலிசிகளை எல்ஐசி செயல்படுத்தி வருகிறது. பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கங்களுக்கு ஏற்ப, எல்ஐசி வழங்கும் வட்டி மாறுவதில்லை என்பதும், நிலையான வட்டி வழங்கப்படுகிறது என்பதும் பலர் இதை தேர்வு செய்ய காரணமாக உள்ளது.

    தற்போதைய சூழலில் பெரும்பாலான நபர்கள் தேர்வு செய்யும் பாலிசியாக ஜீவன் சிரோமணி பாலிசி இருக்கிறது. இது சிறப்பானதொரு சேமிப்பு திட்டமாக இருக்கிறது. இந்த பாலிசியில் குறைந்தபட்ச உத்தரவாதத் தொகை ரூ.1 கோடி ஆகும்.

    இனி அதிக தொகைக்கு ஆயுள் காப்பீடு எடுப்பது எளிதல்ல.. பிடியை இறுக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்

    முதல் ஐந்து ஆண்டுகளில் அடிப்படை உத்தரவாதத் தொகையில் கூடுதல் உத்தரவாத பலன் (Guaranteed additional Benefits) என்பது தலா ஆயிரத்துக்கு ரூ.50 என்ற வகையில் வழங்கப்படும். ஆறாம் ஆண்டில் இருந்து ஆயிரத்துக்கு ரூ.55 என்ற வகையிலும் வழங்கப்படும் தொகையானது, பாலிசியின் இறுதி ப்ரீமியம் காலம் வரையிலும் கிடைக்கும். இது மட்டுமல்லாமல் இந்த பாலிசியில் லாயல்டி அடிசன் போன்ற பலன்களும் வழங்கப்படுகின்றன.

    எத்தனை ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும்?

    ஜீவன் சிரோமணி திட்டத்தின் கீழ் வாடிக்கையாளருக்கு அடிப்படை உத்தரவாத தொகை ரூ.1 கோடி என்ற அளவில் வழங்கப்படுகிறது. உங்களுக்கான பலன்களை பெறுவதற்கு 4 ஆண்டுகள் வரையில் நீங்கள் முதலீடு செய்தால் போதுமானது.

    நான்கு விதமான மெச்சூரிட்டி காலங்கள் இந்த பாலிசியில் வழங்கப்படுகிறது. அதாவது 14, 16, 18 மற்றும் 20 ஆண்டுகள் என்ற கால அளவில் மெச்சூர்ட்டியை தேர்வு செய்து கொள்ளலாம். பாலிசிதாரர் மாதந்தோறும் ரூ.94,000 ப்ரீமியம் தொகையாக செலுத்த வேண்டும்.

    போஸ்ட் ஆபீஸில் இருக்கும் இந்த 3 திட்டத்தில் இவ்வளவு லாபமா! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

    பாலிசி காலத்தின் ஒவ்வொரு வரையறுக்கப்பட்ட கால அளவிலும், பாலிசிதாரரின் சர்வைவல் பலனாக குறிப்பிட்ட தொகை இந்தத் திட்டத்தில் வழங்கப்படுகிறது.

    * 14 ஆண்டு கால வரையறை கொண்ட பாலிசிக்கு - 30 சதவீத அடிப்படை உத்தரவாத தொகையானது பாலிசியின் 10 மற்றும் 12ஆம் ஆண்டுகளில் வழங்கப்படும்.
    * பாலிசி கால வரம்பு 16 ஆண்டுகள் என்றால் - பாலிசியின் 12ஆவது மற்றும் 14ஆவது ஆண்டுகளில் அடிப்படை உத்தரவாத தொகையில் 35 சதவீதம் வழங்கப்படும்.
    * பாலிசி கால வரம்பு 18 ஆண்டுகள் என்றால் - பாலிசியின் 14ஆவது மற்றும் 16ஆவது ஆண்டுகளில் அடிப்படை உத்தரவாத தொகையில் 40 சதவீதம் வழங்கப்படும்.
    * பாலிசி கால வரம்பு 20 ஆண்டுகள் என்றால் - பாலிசியின் 16ஆவது மற்றும் 18ஆவது ஆண்டுகளில் அடிப்படை உத்தரவாத தொகையில் 45 சதவீதம் வழங்கப்படும்.

    பாலிசியில் யாரெல்லாம் சேரலாம்?

    இந்த பாலிசியில் சேருவதற்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உங்கள் பாலிசியின் கால வரம்பு 14 ஆண்டுகள் என்றால் உங்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 55 ஆகும். உங்கள் பாலிசியின் கால வரம்பு 16 ஆண்டுகள் என்றால் உங்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 51 ஆகும்.

    உங்கள் பாலிசியின் கால வரம்பு 18 ஆண்டுகள் என்றால் உங்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 48 ஆகும். உங்கள் பாலிசியின் கால வரம்பு 20 ஆண்டுகள் என்றால் உங்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும். ஆக, மெச்சூரிட்டி பெறும் பாலிசிதாரர்களின் அதிகப்பட்ச வயது என்பது 69ஆக இருக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: LIC, Life Insurance, Savings

    அடுத்த செய்தி