கால் காசுனாலும் அரசு உத்தியோகமாக இருக்க வேண்டும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் மாறி வரும் பொருளாதாரச் சூழலில் அரசு வேலையைவிட, தனியார் வேலையில் அதிகச் சம்பளம் வாங்க முடியும் என்ற நிலை உருவானது. ஆனால் இதில் இருந்த ஒரு முரன் தனியார் வேலையில் பென்ஷன் கிடைக்காது என்பதுதான்.
தற்போது அரசு உத்தியோகத்தில் இருந்தாலும் NPS (National Pension System) திட்டம் மூலமாகத் தான் பென்ஷன் பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. என்பிஎஸ் திட்டம் பங்குச்சந்தை சார்ந்த ஒரு முதலீடு என்பதால் அதில் தனியார் ஊழியர்கள் பலருக்கும் விருப்பம் இல்லை.
ஆனால் NPS இல்லாமல் PPF (Public Provodent Fund, பிபிஎப் - பொது வருங்கால வைப்பு நிதி) மற்றும் எல்ஐசியின் ஜீவன் சாந்தி திட்டத்தின் கீழ் மாதம் 35,000 ரூபாய் பென்ஷன் பெற முடியும் என்று பலருக்கும் தெரியவில்லை.
ஓய்வு காலத்திற்காக சேமிப்பதை எவ்வளவு வேகமாகச் செய்யத் தொடங்குகிறோமோ அவ்வளவு நல்லது. தற்போது உங்கள் வயது 25, நல்ல வேலையில் இருக்கிறீர்கள். அப்படியானால் மாதம் 5,000 ரூபாய் முதலீட்டை ஓய்வு காலத்திற்காகச் செய்ய முடிவு செய்யத் திட்டமிட்டுள்ளீர்களா? PPF திட்டத்தில் ஆண்டுக்கு 8 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கிறார்கள். இதே வட்டி விகித லாபத்தில் தொடர்ந்து 15 வருடங்களுக்கு முதலீடு செய்தால் 19,40,141 ரூபாயாக திரும்பக் கிடக்கும்.
அதனுடன் கூடுதலாக 59,859 ரூபாய் சேர்த்து எல்ஐசியின் ஜீவன் சாந்தி திட்டத்தில் 20 லட்சம் ரூபாயாக முதலீடு செய்யும் போது 20 வருடங்களுக்குப் பிறகு மாதம் 35,000 ரூபாயாக பென்ஷன் கிடைக்கும்.
இதுபோன்று பல்வேறு வகையில் பென்ஷன் திட்டங்கள் உள்ளன. மேலே கூறியது அவற்றில் உள்ள எளிமையான ஓர் உதாரணம் மட்டுமே. 15 வருடங்களுக்கு மாதம் 10,000 ரூபாய் முதலீடு செய்யும் போதும் மிகப் பெரிய அளவிலான தொகையைப் பென்ஷனாகப் பெறமுடியும்.
PPF திட்டத்தில் முதலீடு செய்யும் போது வட்டி விகித லாபம் மட்டுமல்லாமல் வருமான வரி விலக்கு உள்ளிட்ட நன்மையும் கிடைக்கும்.
எல்ஐசியின் ஜீவன் சாந்தி திட்டம் ஒற்றைப் பிரீமியம் திட்டம். மொத்தமாக ஒரு தொகையை இதில் முதலீடு செய்யும் போது 20 வருடங்களுக்குப் பிறகு மாதம் அல்லது ஆண்டு பென்ஷன் போன்றவற்றைப் பெறலாம்.
இதேபோன்று என்பிஎஸ் + ஜீவன் சாந்தி திட்டத்தில் முதலீடு செய்து மாதம் 50,000 ரூபாய் பென்ஷன் பெறுவது எப்படி என்று அடுத்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம். இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற j.tamilarasu@nw18.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கேள்வி மற்றும் ஆலோசனைகளை அனுப்புங்கள்.
மேலும் பார்க்க: அடுத்த பிரதமர் யார்?: பாபா ராம்தேவ் பதில்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pension Plan, PPF