முகப்பு /செய்தி /வணிகம் / LIC - ல் சிங்கிள் பிரீமியம் செலுத்தினால் ரூ.12,000 மாதாந்திர ஓய்வூதியம்!

LIC - ல் சிங்கிள் பிரீமியம் செலுத்தினால் ரூ.12,000 மாதாந்திர ஓய்வூதியம்!

எல்ஐசி ஜீவன் சாரல் திட்டம்.

எல்ஐசி ஜீவன் சாரல் திட்டம்.

40 வயது முதல் 80 வயது வரை உள்ளவர்கள் இந்த Jeevan Saral திட்டத்திற்குத் தகுதி உடையவர்கள். இந்த திட்டத்தின் கீழ், முதலீட்டாளர்கள் சிங்கிள் பிரீமியம் செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.12,000 வரை நிதி பலன்களை பெறலாம்.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

இன்ஷுரன்ஸ் பாலிசி எடுக்க நினைக்கும் பெரும்பாலான இந்தியர்களுக்கு பல சிறந்த திட்டங்களை வழங்குகிறது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் என்னும் எல்ஐசி. கோவிட்-19 தொற்றுக்கு பிறகு காப்பீடு செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை பலரும் உணர்ந்து உள்ளனர்.

LIC ல் பல திட்டங்கள் இருந்தாலும் குடும்பத்தின் நிதி பாதுகாப்பு என்று வரும் போது, LIC -யின் ஜீவன் சாரல் பிளான் (Jeevan Saral Plan) மிகவும் பாதுகாப்பான மற்றும் சிறந்த விருப்பமாக இருக்கிறது.

LIC Jeevan Saral என்பது ஒரு எண்டோவ்மென்ட் பிளான் ஆகும். இதில் இன்ஷுரன்ஸ் வாங்குபவர் பிரீமியம் செலுத்தும் தொகை மற்றும் செலுத்தும் முறை ஆகியவற்றை தேர்வு செய்யலாம். எல்ஐசி ஜீவன் சாரல் திட்டம் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி செயல்படுத்தப்பட்டு வரும் நிலையான உடனடி வருடாந்திர திட்டமாகும்.

இந்த திட்டம் அனைத்து ஆயுள் காப்பீட்டாளர்களுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கொண்டுள்ளது. 40 வயது முதல் 80 வயது வரை உள்ளவர்கள் இந்த Jeevan Saral திட்டத்திற்குத் தகுதி உடையவர்கள்.

இந்த திட்டத்தின் கீழ், முதலீட்டாளர்கள் சிங்கிள் பிரீமியம் செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.12,000 வரை நிதி பலன்களை பெறலாம். வாழ்நாள் ஓய்வூதிய பலன்களைப் பெற முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் வருடாந்திர தொகையை மாதாமாதம், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் என செலுத்தலாம்.

ஜீவன் சாரல் பென்ஷன் திட்டத்தின் கீழ் இரண்டு வகையான வருடாந்திர விருப்பங்கள் (annuity options) உள்ளன. முதல் விருப்பத்தின் கீழ், வருடாந்திர பேமென்ட்ஸ் பணம் செலுத்துபவர் உயிருடன் இருக்கும் வரை நிலுவைத் தொகையில் செய்யப்படும்.

இந்த திட்டத்தில் ஒருவர் குறைந்தபட்சம் மாதம் ரூ.1000 அல்லது வருடத்திற்கு ரூ.12,000 செலுத்த தேர்வு செய்யலாம். இந்த திட்டத்தில் ஒருவர் எவ்வளவு அதிகமாக முதலீடு செய்கிறார்களோ, அவ்வளவு அதிக பென்ஷன் பலனை பெறுவார்கள்.

இந்த பிளானை எல்ஐசி-யின் இணையதளமான www.licindia.in மூலம் ஆஃப்லைனிலும் ஆன்லைனில் வாங்கலாம் என்று எல்ஐசி தெரிவித்துள்ளது. இந்த ஓய்வூதிய திட்டமானது முதலீட்டாளர்கள் ஒரு பிரீமியம் செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.12,000 பெற அனுமதிக்கிறது.

பாலிசிதாரர் அல்லது நாமினி 60 வயதை அடைந்தவுடன் இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் கிடைக்கும். மேலும் முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் தங்கள் முதலீடுகளின் மீது கடன் பெறலாம். திட்டத்தில் முதலீடு செய்து 6 மாதங்களுக்குப் பிறகு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகள் மீது கடன் பெற எல்ஐசி அனுமதிக்கிறது.

பாலிசி எடுக்க விரும்புபவர் முகவரி சான்று மற்றும் பிற KYC ஆவணங்களுடன் துல்லியமான மருத்துவ விவரங்களுடன் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். மேலும் காப்பீட்டுத் தொகை மற்றும் நபரின் வயதைப் பொறுத்து குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மருத்துவப் பரிசோதனைகள் தேவைப்படலாம்.

பாலிசி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அவசரநிலைக்கு உங்கள் பாலிசியை ஒப்படைக்க முடிவு செய்தால், மொத்த நிதி மதிப்பில் 95% பெறலாம். இருப்பினும் பாலிசிக்கு எதிராக கடன் வாங்கியிருந்தால், வாங்கிய கடனுக்கான வட்டியைக் கழித்து மீதமுள்ள தொகையை முதலீட்டாளர் பெறுவார்.

First published:

Tags: LIC, Pension Plan