முகப்பு /செய்தி /வணிகம் / LIC IPO | எல்.ஐ.சி. நிறுவனத்தின் பொதுப் பங்கு விற்பனை அமோகம்..! 21,000 கோடி திரட்ட திட்டம்

LIC IPO | எல்.ஐ.சி. நிறுவனத்தின் பொதுப் பங்கு விற்பனை அமோகம்..! 21,000 கோடி திரட்ட திட்டம்

எல்.ஐ.சி

எல்.ஐ.சி

எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனையின் மூலம் மொத்தமாக சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

  • Last Updated :

எல்.ஐ.சி. பாலிசிதாரர்கள், ஊழியர்கள், சில்லரை முதலீட்டாளர்களுக்கான எல்.ஐ.சி.யின் பொது பங்கு 67 சதவித விற்பனையுடன் அமோகமாக தொடங்கியது.

இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை நேற்று தொடங்குகிறது. எல்.ஐ.சி.யின் பொதுப்பங்கீடு வெளியீட்டில் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கான பங்குகள் முழுமையாக வாங்கப்பட்டுவிட்டது. அதன் அடுத்தகட்டமாக பாலிசிதாரர்கள், எல்.ஐ.சி., ஊழியர்கள், சில்லரை முதலீட்டாளர்கள் ஆகியோருக்கான பங்கு விற்பனை மே 4-ம் தேதி தொடங்கி வரும் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

எல்.ஐ.சி.யின் ஒவ்வொரு பங்கினையும் தலா 902 ரூபாய் முதல் 949 ரூபாய் வரையான விலையில் மத்திய அரசு விற்பனை செய்கிறது. எல்.ஐ.சி.யின் பொதுப்பங்கீடு வெளியீட்டில் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கான பங்குகள் முழுமையாக வாங்கப்பட்டுவிட்டது. இதன் மூலம் 5ஆயிரத்து 627 கோடி திரட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடுத்தகட்டமாக பாலிசிதாரர்கள், எல்.ஐ.சி., ஊழியர்கள், சில்லரை முதலீட்டாளர்கள் ஆகியோருக்கான பங்கு விற்பனை நேற்று தொடங்கியது.

முதல் நாளில், எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியை விட சுமார் 2 மடங்கு செலுத்தியுள்ளனர். சில்லறை முதலீட்டாளர்களின் பங்கு 60 சதவீதமும், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் தங்கள் பங்கில் 27 சதவீதமும் செலுத்தியுள்ளனர். இந்த பங்கு விற்பனை வரும் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனையின் மூலம் மொத்தமாக சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Business, LIC, Mumbai sharemarket, Stock market, Tamil News