• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ. 200 சேமிப்பு ரூ. 28 லட்சம் ரிட்டனாக மாறும்!

இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ. 200 சேமிப்பு ரூ. 28 லட்சம் ரிட்டனாக மாறும்!

முதலீடு திட்டம்

முதலீடு திட்டம்

இந்த திட்டத்தால் பயன்பெற்ற குடும்பங்கள் இங்கு ஏராளம்.

  • Share this:
    மாதம் ரூ. 200 சேமித்தால் ரூ. 28 லட்சம் ரிட்டனாக கிடைக்கும் மிகச் சிறந்த முதலீடு திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள போகிறீர்கள்.

    எல்.ஐ.சி போன்ற மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ய நினைப்பது மிகச் சிறந்த முடிவாகும். காப்பீட்டு திட்டங்கள் அல்லது பென்சன் திட்டங்கள், முதலீடு திட்டங்கள் என உங்கள் தேர்வு எதுவாக இருந்தாலும் சரி சேமிப்பு என்பது என்றுமே கைக்கொடுக்கும் அந்த வகையில் பலரின் தேர்வாக இருக்கும் எல்.ஐ.சி மிகச் சிறந்த முதலீடு திட்டங்களில் ஒன்றான ஜீவன் பிரகதி பாலிசி திட்டம் பற்றி இங்கே பார்க்கலாம். 12 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தில் இணையலாம். 45 வயதுக்கு மேல் இணைய முடியாது. குறைந்தது 12 ஆண்டுகளாவது முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சேமிக்கலாம்.

    உங்கள் ஓய்வு காலத்தில் நீங்கள் சுகமான வாழ்க்கையை வாழ இந்த திட்டம், கைக்கொடுக்கும். முதிர்வு காலத்தில் மிகப்பெரிய தொகை உங்கள் கையில் இருக்கும்.இதில் இறப்புக்கான காப்பீடு வசதியும் உண்டு. இந்த திட்டத்தால் பயன்பெற்ற குடும்பங்கள் இங்கு ஏராளம். எல்.ஐ.சி. நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டங்களில் மிக முக்கியமான திட்டமாக இந்த ஜீவன் பிரகதி பாலிசி செயல்பாட்டில் இருக்கிறது.

    ஒரு நாளைக்கு ரூ. 200 ஒதுக்குங்கள் அப்ப மாதத்துக்கு 6000 சேமிப்பீர்கள். மாதத்துக்கு 6,000 ரூபாய் முதலீடு செய்தாலே 20 ஆண்டுகளில் உங்களுக்கு ரூ.28 லட்சம் கிடைக்கும். அதுவும் வட்டி சலுகையும் உண்டு. இதுப்போல் ஏராளமான சேமிப்பு திட்டங்களை எல்.ஐ.சி அறிமுகப்படுத்தி வெற்றிக்கரமாக செயல்பாட்டில் வைத்திருக்கிறது. முடிந்தால் அதுக்குறித்து தெளிவாக விசாரித்து பணத்தை சேமிக்க தொடங்குகள்.எல்.ஐ.சியில் பல்வேறு திட்டங்கள் இருந்தாலும், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆயுள் காப்பீட்டினை அதிகரிக்கும் மற்றும் 28 லட்சம் வரை முதிர்வு தொகையினை ஜூவன் பிரகதி திட்டம் வழங்குகிறது.இத்திட்டத்தில் சிறிய தொகையை முதலீடு செய்ய முடியும்.இதில் விபத்து காப்பீடாக குறைந்த பட்சம் ரூ. 10 ஆயிரமும், அதிகபட்சம் ரூ. 1 கோடியும் க்ளைம் செய்துகொள்ள முடியும். மேலும் இந்த பாலிசிதாரர் இறந்துவிட நேரிட்டால், இறப்புக்கான அடிப்படை காப்புத்தொகை மற்றும் போனஸ் கிடைக்கும்.

    எனவே பல சிறப்பமசங்களை பெற்றிருக்கும் இந்த திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: