• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • டயர்-II என்பிஎஸ் கணக்குகளில் இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்ற LIC, HDFC வங்கிகள்!

டயர்-II என்பிஎஸ் கணக்குகளில் இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்ற LIC, HDFC வங்கிகள்!

கோப்புப்படம்.

கோப்புப்படம்.

பரஸ்பர நிதி கண்காணிப்பு நிறுவனமான மதிப்பு ஆராய்ச்சியின் தரவுகளின்படி, இந்த வருடம் டிசம்பர் 3 ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்று மற்றும் ஐந்தாண்டு வருவாய் காலங்களில், அடுக்கு- II கணக்குகளில் எல்.ஐ.சி(LIC) ஓய்வூதியம் முதலிடம் வகிக்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (National Pension Scheme- NPS) முதலீடு செய்வது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபம்  அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். இந்த திட்டத்தில் கணக்குத் தொடங்கிய சந்தாதாரர்கள் தங்களுடைய வசதிக்கு ஏற்ப முதலீடு செய்யவும் அதனைத் திருப்பப் பெறவும் முடியும். இதில் சந்தாதாரர்கள் அடுக்கு -I ல் ஓய்வூதியக் கணக்குத் தொடங்கியிருந்தால் மட்டுமே அடுக்கு - IIல் கணக்குத் தொடங்க முடியும். இவ்வகையான கணக்கில் ஒரு நிதி ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 1000 ரூபாய் பங்களிப்பாகச் செலுத்த வேண்டும்.

இந்த நிலையில், இந்த திட்டங்களை வழங்கி வரும் வங்கிகளான LIC மற்றும் HDFC அடுக்கு-II கணக்குகளில் அதிக வருவாயை ஈட்டியுள்ளன. பரஸ்பர நிதி கண்காணிப்பு நிறுவனமான மதிப்பு ஆராய்ச்சியின் தரவுகளின்படி, இந்த வருடம் டிசம்பர் 3 ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்று மற்றும் ஐந்தாண்டு வருவாய் காலங்களில், அடுக்கு- II கணக்குகளில் எல்.ஐ.சி(LIC) ஓய்வூதியம் முதலிடம் வகிக்கிறது. இந்த இரண்டு காலக்கெடுவில் எல்.ஐ.சி ஓய்வூதிய திட்டம் முறையே 10.42% மற்றும் 10.22% வருவாயை ஈட்டியுள்ளது. 

அதைத் தொடர்ந்து எச்.டி.எஃப்.சி(HDFC) ஓய்வூதிய திட்டம் முறையே மூன்று மற்றும் ஐந்தாண்டு வருவாய் காலங்களில் முறையே 10.09% மற்றும் 10.12% வளர்ச்சியை எட்டியுள்ளது. இருப்பினும், சி.சி.ஐ.எல் பாண்ட் பிரோட் டி.ஆர்.ஐ (CCIL Bond Broad TRI) வங்கி தனது மூன்று ஆண்டு காலப்பகுதியில்10.43% வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த வளர்ச்சி முதல் இரண்டு இடங்களை பிடித்த எல்ஐசி மற்றும் எச்டிஎப்சி வங்கிகளை விட அதிகம். ஆனால் ஐந்து ஆண்டுகளில் சி.சி.ஐ.எல் 9.9 சதவிகிதம் வருவாய் மட்டுமே பெற்றுள்ளது. 

இரு வங்கிகளை தவிர வேறு எந்த ஓய்வூதிய நிதி திட்டமும் இந்த காலங்களில் இரட்டை இலக்க வருமானத்தை பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுக்கு- II கணக்குகள், அடிப்படையில் அடுக்கு -I கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டன முதலீட்டு கணக்குகள். ஊரடங்கு தற்போது இல்லாததால், தேவை ஏற்படும் போது நீங்கள் இதனை திரும்பப் பெறலாம். அடுக்கு- II கணக்கைத் திறக்கும் போது நீங்கள் அளிக்க வேண்டிய குறைந்தபட்ச பங்களிப்பு ரூ.1,000 ஆகும். அதன் பிறகு ஒவ்வொரு குறைந்தபட்ச பங்களிப்பும் ரூ.250 ஆக இருக்க வேண்டும். 

Also read... RTGS-ல் 24 மணிநேரமும் பணம் அனுப்பலாம்- ரிசர்வ் வங்கி அசத்தல் அறிவிப்பு!



அடுக்கு -I மற்றும் அடுக்கு -II கணக்குகளுக்கு வெவ்வேறு ஓய்வூதிய நிதி மேலாளர்களை நீங்கள் தேர்வு செய்யலாம். அடுக்கு -1 ஐப் போலவே, உங்கள் கார்பஸை நிர்வகிக்க ஆக்ட்டிவ் மற்றும் ஆட்டோ சாய்ஸ் முதலீட்டு விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். இருப்பினும், அடுக்கு -2 முதலீடுகளை செய்யும் மத்திய அரசு ஊழியர்கள் பிரிவு 80 இன் கீழ் வரி விலக்கினை பெறுவார்கள். ஆனால் இந்த நன்மை தனியார் துறை ஊழியர்களுக்கு கிடைக்காது. உங்கள் ஓய்வுக்கான கார்பஸைக் குவிப்பதற்காக அடுக்கு -I கணக்குகள் உள்ளன. 

இந்த தொகையை நீங்கள் முதுமையடையும் போது அதாவது நீங்கள் 60 வயதை எட்டும்போது அணுகலாம் . முதிர்ச்சிக்கு முன்னரே இருந்து நீங்கள் திட்டத்தில் இருந்து விலகினால், 20 சதவீதத்தை மட்டுமே மொத்த தொகையாகப் பெறுவீர்கள். மீதமுள்ளவை கட்டாயமாக வருடாந்திரமாக மாற்றப்படும். எவ்வாறாயினும், சில செலவினங்களுக்கு நிதியளிப்பதற்காக 25 சதவிகிதம் வரை பகுதி தொகையை நீங்கள் திரும்பப் பெறலாம். உதாரணமாக, குழந்தைகளின் உயர் கல்வி, அவர்களின் திருமணம்,வீடு வாங்குவது மற்றும் சிக்கலான நோய்களுக்கான சிகிச்சை போன்ற விஷயங்களுக்கு 25% ஓய்வூதிய தொகையில் இருந்து நீங்கள் பெறமுடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: