முகப்பு /செய்தி /வணிகம் / இவ்வளவு சலுகைகளா..! - புத்தம் புதிய பாலிசியை சந்தையில் இறக்கிய எல்.ஐ.சி

இவ்வளவு சலுகைகளா..! - புத்தம் புதிய பாலிசியை சந்தையில் இறக்கிய எல்.ஐ.சி

எல்.ஐ.சி

எல்.ஐ.சி

எல்.ஐ.சி நிறுவனம் புதிய பாலிசி திட்டத்தை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31க்குள் இணையலாம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி, 'தன் வர்ஷா' எனும் புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் முதலீட்டாளர்களுக்கு பல சலுகைகளை வாரி வழங்குகிறது.

இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. பல்வேறு காப்பீடு திட்டங்கள் மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்பாட்டில் வைத்துள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வயதுடைய மக்களுக்கும் காப்பீட்டுத் திட்டங்களைக் கொண்டுள்ளதால் இது மிகவும் பிரபலமான வழியாக உள்ளது. எல்ஐசி பாலிசியில் முதலீடு செய்வது என்பது குறைந்த அளவிலான அபாயம் கொண்டதாகவும், உத்தரவாதமான வருமானத்தைப் பெறுவதற்கான வழிமுறையாகவும் உள்ளது. இது ஒரு சேமிப்பு முறையாக உள்ளதால் பல இந்தியர்கள் எல்ஐசி-யில் சேமிப்பு கணக்கை துவங்குகின்றனர்.

போஸ்ட் ஆபீஸ் கணக்கின் பேலன்ஸை தெரிந்து கொள்வது இவ்வளவு ஈஸியா!

அந்த வகையில் முதலீட்டாளர்களை கவரும் வகையில் எல்.ஐ.சி நிறுவனம் புதிய பாலிசி திட்டத்தை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. எல்.ஐ.சி., சார்பில், 'தன் வர்ஷா' எனும் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது, பாதுகாப்பு மற்றும் சேமிப்பு என, இரு அம்சங்களையும் சேர்த்து வழங்குகிறது. இந்த திட்டத்தில், அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31க்குள் இணையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன் வர்ஷா பாலிசி. பாலிசி எண் 866 திட்டம் பல சலுகைகளை வழங்குகிறது. பாலிசி எடுத்தவர் எதிர்பாராமல் இறந்து விட்டால், நிதி உதவி கிடைக்கும். அவரின் மறைவுக்கு பிறகு குடும்பத்தில் நிதி ரீதியான பிரச்னை ஏற்படாதிருக்க வழிவகுக்கும். பாலிசி முதிர்வு காலத்திலும், ஒரு கணிசமான தொகை கிடைக்கும். 3 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இந்த பாலிசியை எடுக்கலாம். இந்த பாலிசிக்கான குறைந்தபட்ச முதிர்வு வயது 18. அதேபோல, அதிகபட்ச முதிர்வு வயது 75. இத்திட்டத்தின் கீழ்ச் குறைந்தபட்ச உறுதித் தொகையாக ரூ.1.25 லட்சம் கிடைக்கும்.

கிரெடிட் கார்டு பில்லை சரியான தேதியில் கட்ட முடியவில்லையா? இனிமேல் பயம் வேண்டாம்!

இந்த பாலிசியை ஆன்லைனில் எடுக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்களுக்கு எல்.ஐ.சி ஆன்லைன் தளத்தை செக் செய்யவும் அல்லது உதவி எண்ணை 91-02268276827 அழைத்தும் தகவல்களை பெறலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: LIC, Life Insurance