• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை வாங்கியது எல்ஐசி!

ஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை வாங்கியது எல்ஐசி!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஐடிபிஐ வங்கிக்கு 800 கிளைகளும் 1.5 கோடி வாடிக்கையாளர்களும், 18,000 ஊழியர்களும் உள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஐடிபிஐ வங்கியின் 51 சதவீத பங்குகளை வாங்குவதற்கான பரிவர்த்தனை முடிவடைந்துள்ளதாக எல்ஐசி தெரிவித்துள்ளது.

    நஷ்டத்தில் சிக்கித் தவித்து வந்த ஐடிபிஐ வங்கியின் பெரும்பான்மையான பங்குகளை எல்ஐசி வாங்க உள்ளதாக 2018 ஜூன் மாதம் அறிவித்திருந்தது.

    தொடர்ந்து இரண்டு நிறுவனங்களும் இணைய மத்திய அமைச்சகம் ஆகஸ்ட் மாதம் அனுமதியை வழங்கியது. தற்போது ஐடிபிஐ வங்கியின் பெரும்பான்மையான பங்குகளைக் கைப்பற்றியுள்ளதால் காப்பீடு, வீட்டுக் கடன் மட்டுமல்லாமல் வங்கி துறையிலும் எல்ஐசி தங்களது ஆதிக்கத்தைச் செலுத்த தொடங்கியுள்ளது.

    ஐடிபிஐ வங்கி 2018-2019 நிதியாண்டில் செப்டம்பர் மாதம் வரையில் மட்டும் 3,602.49 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது. இப்படிப்பட்ட  வங்கியை எல்ஐசி ஏன் வாங்க வேண்டும்? என்று மிகப் பெரியளவில் விமர்சிக்கப்பட்டது.

    ஐடிபிஐ வங்கிக்கு 800 கிளைகளும் 1.5 கோடி வாடிக்கையாளர்களும், 18,000 ஊழியர்களும் உள்ளனர். இந்நிலையில் ஐடிபிஐ வங்கி கிளைகளின் மூலமாகவும் வாடிக்கையாளர்களைக் கவர முடியும் என்று எல்ஐசி கருதுகிறது. இந்த நடவடிக்கை மூலம் தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் இழந்துவரும் சந்தையைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்றும் எல்ஐசி நம்புகிறது.

    மேலும் பார்க்க: விழா மேடையிலேயே நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த அதிமுக அமைச்சர்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: