• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • LIC பாலிசி காலாவதியாகிவிட்டதா? கவலை வேண்டாம்... உங்களுக்காக சூப்பர் அறிவிப்பு

LIC பாலிசி காலாவதியாகிவிட்டதா? கவலை வேண்டாம்... உங்களுக்காக சூப்பர் அறிவிப்பு

எல்.ஐ.சி

எல்.ஐ.சி

காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக எல்ஐசி அறிவித்துள்ளது.

  • Share this:
    இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க ஒரு சிறப்பு பிரச்சாரத்தை அறிவித்துள்ளது. கொரோனா பேரிடர் நீடிக்கும் நிலையில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழலில், வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான இடர் காப்பீட்டை வழங்கும் முயற்சியாக, காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக எல்ஐசி அறிவித்துள்ளது. நேற்று முதல் துவக்கப்பட்டுள்ள இந்த தனிநபர் பாலிசி புதுப்பிப்பு முகாம் 2 மாதங்களுக்கு அதாவது அக்டோபர் 22 வரை நடைபெறும் என்றும் எல்ஐசி குறிப்பிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டே காலாவதியான தனிநபர் பாலிசிகளுக்காக 2 மாத காலத்திற்கு இந்த சிறப்பு முகாம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக LIC கூறி இருக்கிறது. தவிர்க்க முடியாத சூழலால் சரியான நேரத்தில் பிரீமியம் செலுத்த முடியாமல் போன பாலிசிதாரர்களின் நலனுக்காக இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது என்று எல்ஐசி தெரிவித்துள்ளது.

    இந்த சிறப்பு பிரச்சாரத் திட்டத்தின் கீழ் சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு முதல் செலுத்தப்படாத பிரீமியம் தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் குறிப்பிட்ட தகுதியுள்ள சில திட்டங்களின் பாலிசிகளை புதுப்பித்து கொள்ளலாம். இந்த சிறப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பாலிசிதாரர்கள் தங்கள் காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் தாமதமாக செலுத்தப்படும் கட்டணத்திற்கு (late fees) எல்ஐசி சலுகையை அறிவித்துள்ளது.

    Also Read : உங்களை லட்சாதிபதி ஆக்க போக்கும் அந்த 3 திட்டங்கள்... முதலீடு செய்ய நீங்க தயாரா?

    LIC-ன் சிறப்பு பிரச்சாரம் எவ்வாறு செயல்படுகிறது?

    இது தொடர்பாக LIC வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மேற்கூறியது போல குறிப்பிட்ட தகுதியுள்ள திட்டங்களின் பாலிசிகள் சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு முதல் செலுத்தப்படாத பிரீமியத்தின் தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரீமியம் செலுத்தும் காலத்தின் போது காலாவதியான நிலையில் உள்ள பாலிசிகள் மற்றும் பாலிசி காலத்தை முடிக்காத பாலிசிகள் இந்த சிறப்பு பிரச்சாரத்தில் புதுப்பிக்க தகுதியுடையவை என்றும் LIC வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் கால உத்தரவாதம் (term assurance) மற்றும் அதிக ஆபத்துள்ள திட்டங்கள் (high-risk plans) இந்த சிறப்பு பிரச்சார திட்டத்தின் கீழிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. தற்போது நிலவும் நெருக்கடி சூழல்களை கருத்தில் கொண்டு, செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்களைப் பொறுத்து, டெர்ம் அஷ்யூரன்ஸ் மற்றும் ஹை-ரிஸ்க் பிளான்கள் தவிர மற்றவற்றுக்கு தாமதமாக செலுத்தபடும் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படும். தகுதிவாய்ந்த உடல்நலம் மற்றும் மைக்ரோ காப்பீட்டு திட்டங்களும் (Health and Micro Insurance plans ) தாமதமாக செலுத்தப்படும் கட்டணத்தில் சலுகை பெற தகுதி உடையவை" என்றும் எல்ஐசி தெரிவித்துள்ளது.

    Also Read : நல்ல வட்டி.. கை நிறைய லாபம்! நீங்க எப்ப இந்த திட்டத்தில் சேர போறீங்க?

    தாமத கட்டணத்திற்கான சலுகை எவ்வளவு?

    1 லட்சம் வரையிலான மொத்த பிரீமியத்திற்கு, தாமதமாக செலுத்தப்படும் கட்டணத்தில் 20% சலுகை வழங்கப்படும். இருப்பினும் அதிகபட்ச சலுகை தொகை ரூ.2,000 மட்டுமே வழங்கப்படும். அதே போல ரூ.1-3 லட்சம் முதலான பிரீமியத்திற்கு ரூ.2500-க்கு மிகாமல் தாமத கட்டணத்தில் 25% சலுகை வழங்கப்படும். ரூ.3 லட்சத்திற்கு மேல் இருக்கும் பிரீமியம்களுக்கு ரூ3,000 மிகாமல் தாமதக் கட்டணத்தில் 30% சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: