ஹோம் /நியூஸ் /வணிகம் /

1 லட்சம் பென்சன் வேண்டுமா? உங்களுக்காகவே எல்.ஐ.சி தரும் அருமையான வாய்ப்பு!

1 லட்சம் பென்சன் வேண்டுமா? உங்களுக்காகவே எல்.ஐ.சி தரும் அருமையான வாய்ப்பு!

எல்.ஐ.சி

எல்.ஐ.சி

எல்ஐசி சாரல் ஓய்வூதியத் திட்டம் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். சந்தாதாரர் இறந்த பிறகு, அடிப்படை பிரீமியம் நாமினிக்கு திரும்ப வழங்கப்படும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  எல்.ஐ.சியில் ஆண்டுக்கு 1 லட்சம் பென்சன் வழங்கும் சாரல் பென்சன் திட்டம் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

  இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி அறிமுகப்படுத்தி இருக்கும் தனிநபர் வருடாந்திரத் திட்டமாக சாரல் பென்சன் திட்டம் உள்ளது. இது ஒற்றை பிரீமியம் திட்டமாகும். திட்டத்தின் தொடக்கத்தில் சுமார் 5% வருடாந்திர விகிதத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இந்த எல்.ஐ.சி திட்டத்தின் கீழ், வருடாந்திரம் அல்லது உயிருடன் இருக்கும் வரை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டுக்கு தவணை செலுத்தும் வசதியை தேர்ந்தெடுக்கலாம். எல்ஐசி சாரல் ஓய்வூதியத் திட்ட விவரங்களின்படி, 40 முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் இந்த வருடாந்திர ஓய்வூதியத் திட்டத்தில் சேர தகுதியானவர்கள்.

  மிடில் கிளாஸ் மக்களும் கோடீஸ்வரர் ஆகலாம்..! - 15 ஆண்டுகளில் ரூ.1 கோடி வரை வருமானம் தரும் திட்டம்!

  எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள எல்ஐசி சாரல் ஓய்வூதியத் திட்ட விவரங்களின்படி, பாலிசிதாரர் இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ1,000 மாத ஓய்வூதியம் அல்லது ரூ 2,000 வருடாந்திர ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கு, ஒருவர் ஒரு முறை ஒரே பிரீமியமாக ரூ 2.50 லட்சம் செலுத்த வேண்டும். ஒரு முதலீட்டாளர் ரூ. 10 லட்சம் ஒற்றை பிரீமியமாக முதலீடு செய்தால் அவர் ரூ. 50,250 வருடாந்திர ஓய்வூதியத்தைப் பெறுவார். அதேபோல், ஒரு முதலீட்டாளர் இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் ஓய்வூதியம் பெற விரும்பினால், ஒருவர் முன்பணமாக ரூ. 20 லட்சம் பிரீமியம் செலுத்த வேண்டும்.

  எல்ஐசி சாரல் பென்ஷன் திட்டம் முக்கிய விவரங்கள்

  - கடன் பலன்: தொடங்கி ஆறு மாதங்கள் முடிந்த பிறகு, இந்த LIC திட்டத்தின் கீழ் கடன் வசதி கிடைக்கும்.

  - வெளியேறும் திட்டம்: எல்ஐசி சாரல் ஓய்வூதியத் திட்டத்திலிருந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு வெளியேறலாம்.

  - எல்ஐசி சாரல் ஓய்வூதியத் திட்ட வட்டி விகிதம்: வருடாந்திரத் திட்டம் சுமார் 5 சதவீதம் வரை உத்தரவாதமான வருடாந்திர வருவாயை வழங்குகிறது.

  - வாழ்நாள் ஓய்வூதியப் பலன்: எல்ஐசி சாரல் ஓய்வூதியத் திட்டம் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். இதன் பொருள் பாலிசிதாரர் தொடங்கப்பட்ட பிறகு வாழ்நாள் முழுவதும் வருடாந்திர அல்லது மாதாந்திர ஓய்வூதியத்திற்குத் தகுதியுடையவர்.

  - நாமினிக்கான இறப்பு பலன்: எல்ஐசி சாரல் பென்ஷன் திட்ட சந்தாதாரர் இறந்த பிறகு, அடிப்படை பிரீமியம் நாமினிக்கு திரும்ப வழங்கப்படும்.

  - முதிர்வுப் பலன் இல்லை: எல்ஐசி சாரல் பென்ஷன் திட்டத்தில், பாலிசிதாரர் உயிருடன் இருக்கும் வரை ஓய்வூதியம் கிடைக்கப்பெறுவதால், முதிர்வுப் பலன் இல்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: LIC, Pension Plan, Savings