வருமான வரி ரிட்டன்(ITR) பதிவு செய்யும் போது வருமானத்தில் இருந்து சில செலவுகளை கழித்துக்கொள்ளலாம். மீதம் உள்ள தொகைக்கு மட்டும் வரி செலுத்தினால் போதும். அதற்காக ஒரு நீண்ட பட்டியலே கொடுக்கப்பட்டிருக்கும். எந்த பிரிவில் எதை கழிக்க வேண்டும் என்று தெரியாமல் பலநேரம் விட்டிருப்போம். இனி கவலை வேண்டாம். அந்த சட்டப்பிரிவு எல்லாம் உங்கள் கை நுனிக்கு கொண்டு வருகிறோம்.
வருமான வரிச் சட்டத்தின் VI A பிரிவு 80ல் பல்வேறு துணைப் பிரிவுகள் உள்ளன. இது பல்வேறு வரி சேமிப்பு முதலீடுகள், அனுமதிக்கப்பட்ட செலவுகள், நன்கொடைகள் போன்றவற்றின் மூலம் மொத்த மொத்த வருமானத்திலிருந்து கழித்து அதற்கான வருமான வரியில் இருந்து விலக்குகளைப் பெற அனுமதிக்கிறது.
80C: ஆயுள் காப்பீட்டு பிரீமியம், வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்புகள் (PF), சில ஈக்குவிட்டி பங்குகள் அல்லது கடனீட்டுப் பத்திரங்களுக்கான சந்தா போன்றவற்றின் மீதான விலக்குகளைக் குறிக்கும். பிரிவு 80CCC மற்றும் பிரிவு 80CCD(1) ஆகியவற்றுடன் சேர்த்து 1.5 லட்ச ரூபாய் விலக்கு பெறலாம்.
80CCC : குறிப்பிட்ட ஓய்வூதிய நிதிகளுக்கான பங்களிப்பைப் பொறுத்தது.
யாருக்கு எந்த ITR படிவம்? உங்களுக்கு எந்த படிவம்? விவரங்கள் இதோ..
80CCD(1): மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டத்திற்கான பங்களிப்பைப் பொறுத்தமட்டில் - ஒரு ஊழியரின் சம்பளத்தில் (அடிப்படை+டிஏ) 10% மற்றும் மற்ற தொழிலார்களுக்கு மொத்த வருமானத்தில் 20 சதவிகிதம் வரை வரி விலக்கு அளிக்கப்படும்.
80CCD(1B): மத்திய அரசின் (NPS) ஓய்வூதியத் திட்டத்திற்கான பங்களிப்பைப் பொறுத்தவரை 50,000 ரூபாய் வரை விலக்களிக்கப்படுகிறது.
80CCD(2): மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டத்திற்கான பங்களிப்பைப் பொறுத்தமட்டில் முதலாளியின் 14 சதவீத பங்களிப்பிற்கு வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. அத்தகைய பங்களிப்பை மத்திய அரசு அளிக்கும் இடத்திலும், வேறு எந்த முதலாளியால் பங்களிப்பு செய்யப்பட்டாலும், 10 சதவீதத்துக்கும் வரிச் சலுகை அளிக்கப்படும்.
80D: ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தைப் பொறுத்தவரையில் தனிநபராக இருந்தால் 25,000 வரையும்,. மூத்த குடிமக்களுக்கு ரூ. 50,000 வரையும் விளக்கி அளிக்கப்படும். u/s 80D கீழ் ஒட்டுமொத்த வரம்பு ரூ. 1 லட்சமாகும்.
80DD: ஊனமுற்ற நபரின் சார்புடைய மருத்துவ சிகிச்சை உட்பட பராமரிப்பு தொடர்பான ரூ.75,000 செலவுகளை இதில் கழிக்கலாம்.
80DDB: ஒரு நரம்பியல் நிபுணர், புற்றுநோயியல் நிபுணர், சிறுநீரக மருத்துவர், ரத்தக்கசிவு நிபுணர், நோயெதிர்ப்பு நிபுணர் அல்லது பரிந்துரைக்கப்படும் பிற நிபுணரிடம் இருந்து பெறப்படும் நோய்க்கான மருத்துவ சிகிச்சைக்கு ரூ.40,000 வரையிலான செலவினத்தை கழித்தல்.
80E: எந்த உச்ச வரம்பும் இல்லாமல் உயர்கல்விக்காக எடுக்கப்பட்ட கடனுக்கான வட்டியை கழிக்கலாம்.
80EE: வீட்டுச் சொத்துக்காக வாங்கிய கடனுக்கான வட்டி ரூ. 50,000 வரையில் விலக்கு பெறும்.
80EEA: மலிவு விலையில் வீடுகளுக்கு எடுக்கப்பட்ட கடனுக்கு ரூ. 1.5 லட்சம் வரையிலான வட்டிக்கு விலக்கு பெறும்.
80EEB: மின்சார வாகனம் வாங்குவதற்காக வாங்கிய கடனுக்கான வட்டி ரூ. 1.5 லட்சம் வரையில் விலக்கு பெறும்.
80G: குறிப்பிட்ட அரசு நிதிகள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றுக்கான நன்கொடைகள் இந்த பிரிவின் கீழ் கழியும்.
80GG: HRA பலன்களைப் பெறாத சம்பளம் வாங்கும் நபர்கள் செலுத்தும் வாடகையை மாதத்திற்கு ரூ 5,000 அல்லது ஒரு வருடத்தில் மொத்த வருமானத்தில் 25 சதவீதம், எது குறைவோ அதை உள்ளிடுக் கழித்துக் கொள்ளலாம்..
80GGA: அறிவியல் ஆராய்ச்சி அல்லது கிராமப்புற வளர்ச்சிக்கான நன்கொடைகள் தொடர்பான முழு விலக்குகள் இந்த பிரிவின் கீழ் வரும்.
நீங்களே உங்கள் ITR-1 படிவத்தை சமர்ப்பிக்கலாம் வாருங்கள்! எளிய வழிமுறை இதோ
80GGC: அரசியல் கட்சிக்கான தொடர்பான பணமில்லாத நன்கொடைகளாக இருந்தால் இந்த பிரிவின் கீழ் கழிக்கலாம்.
80TTA: குடியுரிமை பெற்ற மூத்த குடிமக்களைத் தவிர மற்ற வரி செலுத்துவோல்டருக்கு சேமிப்பு வங்கிக் கணக்குகள் மீதான வட்டியில் ரூ.10,000 வரை விலக்கு உண்டு.
80TTB: குடியுரிமை பெற்ற மூத்த குடிமக்களுக்கு வைப்புத்தொகைக்கான வட்டியில் ரூ. 50,000 வரை விலக்கு உண்டு.
80U: ஊனமுற்ற நபரின் இயலாமை வகையைப் பொறுத்து இந்தப் பிரிவின் கீழ்அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Educational Loan, Home Loan, House Tax, Income tax, Rent