ஆண் குழந்தைகளுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஆண் குழந்தைகளுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

முதலீட்டு திட்டங்கள்

ஆண் குழந்தையை பள்ளியில் சேர்ப்பதில் தொடங்கி படிப்பு முடிகின்ற வரையிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். இதற்கு சேமிப்பு மட்டுமே போதாது; அதையும் தாண்டி பலன் தரும் சில திட்டங்கள் இருக்கின்றன.

  • Share this:
குழந்தை பிறந்ததுமே அவர்களின் எதிர்காலத்தை குறித்து பெற்றோர்கள் திட்டம் தீட்டி விடுகின்றனர். ஏனெனில் இந்த காலகட்டத்தில் குழந்தையை பள்ளியில் சேர்ப்பதில் தொடங்கி படிப்பு முடிகின்ற வரையிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். இதற்கு சேமிப்பு மட்டுமே போதாது; அதையும் தாண்டி பலன் தரும் சில திட்டங்கள் இருக்கின்றன.

பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம், ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்பு திட்டத்தை அஞ்சல்துறை செயல்படுத்துகிறது. கூடுதல் வட்டி மட்டுமின்றி உயர்கல்விக்கு கணிசமான தொகை கிடைக்க உதவும் திட்டங்கள் இவை. எதிர்பாராத இழப்புக்குப் பின்னரும் குழந்தையின் கல்வி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்குப் பிளெயின் வெண்ணிலா இன்சூரன்ஸ் திட்டங்கள் உகந்தது. அந்த வகையில் ஆண் குழந்தைகளுக்கு உகந்த முதலீட்டு திட்டங்கள் குறித்து காண்போம்.

பொன்மகன் திட்டம்

பெண் குழந்தைகள் போன்றே ஆண் குழந்தைக்களுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள “பொன்மகன் சேமிப்பு திட்டம்” மூலமாக வைப்பு முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறை இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. ஆண்டுக்கு 12 முறை என குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிப்பு தொகை செலுத்தலாம். ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு, 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். இதற்கு 8.1% வட்டி அளிக்கப்படும். இந்தத் திட்டத்தில் இணைய வயது வரம்பு கிடையாது என்கிறார்கள்.

Also read: இந்தியாவில் ரூ.6000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன்கள் இதோ...

பிபிஎஃப்

பப்ளிக் ப்ராவிடன்ட் பண்ட் (பிபிஎப்) கணக்கு, வரியை சேமிக்கக்கூடிய ஒரு கருவியாகும். இந்த பிபிஎஃப் கணக்கின் கீழ் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு. மேலும், இந்த முதலீட்டுக்கான வட்டிக்கு வரி செலுத்தத் தேவையில்லை. ஒரு பிபிஎஃப் கணக்கை அஞ்சலகம், ஐசிஐசிஐ அல்லது எஸ்பிஐ போன்ற வங்கிகளில் தொடங்கலாம். ஆன்லைன் மூலம் இந்த கணக்கைத் தொடங்க வேண்டும் என்றால் அதை ஐசிஐசி வங்கியில் தொடங்கலாம்.

15 ஆண்டுகள் கொண்ட இந்தத் திட்டம் மூலம் குழந்தைகளின் கல்விக்கு ஏற்ற ஒரு தொகுப்பை பெற்றோர்களால் உருவாக்கித் தர முடியும். இந்த திட்டத்தின் வட்டி விகிதம் 7.9 சதவீதம் ஆகும். வங்கிகளில் வழங்கப்படும் 7 சதவீத வட்டி விகிதங்களில் இருந்து மிகத் தொலைவில் இருக்கிறது. இதில் கிடைக்கும் வட்டி வருவாய்க்கு வரி விலக்கு உண்டு. அது மட்டுமல்ல, ரூ.1.5 லட்சம் வரை வருமான வரியின் 80சி பிரிவில் கீழ் வரிச் சலுகை பெற முடியும். முதலீடுக்கு ஏற்ற கவர்ச்சிகரமான திட்டம் இது. குழந்தைகள் கல்வியைக் கட்டமைக்க இது சிறந்த வழியாக இருக்கும். நீண்ட நாள் திட்டம் என்பது மட்டுமே தயக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், கல்வி கட்டமைப்புக்கு பெரும் உதவியாக இருக்கும்.ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட்ஸ்

ஈக்விட்டி ஃபண்டுகள் ஒரு திறந்த-இறுதி அல்லது மூடிய-இறுதி நிதிகள் ஆகும். அவை முதன்மையாக நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்கின்றன. ஈக்விட்டி நிதி முதலீட்டாளர்கள் தனிப்பட்ட பத்திரங்களை வாங்குவதை விட எளிதாக ஒரு கூடை பங்குகளை வாங்க அனுமதிக்கின்றன. இந்த நிதிகளில் யாராவது முதலீடு செய்யும்போது, நிதியின் ஒவ்வொரு யூனிட்டிற்கும் அவர்கள் செலுத்தும் விலை நிகர சொத்து மதிப்பு (இல்லை). நிதியின் NAV ஐ கணக்கிடுவதன் மூலம் நிகர சொத்து மதிப்பு வந்து சேரும். பங்குச் சந்தையில் விலை ஏற்ற இறக்கங்களால் NAV நேரடியாக தொடர்புடையது.

ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட் நீண்ட காலத்திற்கு ஒரு சிறந்த முதலீடாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், குழந்தைகளுக்குச் சொத்து சேர்க்க அனைவரும் இதை நாடி செல்லும் நிலை உள்ளது. ஆனால், இதில் சில அபாயம் இருக்கிறது. குழந்தைக்குத் தேவைப்படும்போது அதை மீட்கும் சமயத்தில் அதன் தொகைக்கு உத்தரவாதம் கிடையாது. சந்தைக்கு ஏற்ப தான் இதன் நிலைப்பாடு இருக்கும். நீங்கள் நீண்ட கால முதலீட்டாளர் என்றால் இதைவிட அதிக முதிர்வு தொகை தரக்கூடிய திட்டங்கள் இல்லை. குழந்தை கல்விக்குச் சேமிப்பு மற்றும் இதர திட்டங்களுக்காக முதலீடு செய்பவராக இருந்தால் இதைத் தேர்வு செய்துக் கொள்ளலாம்.

கடன் பரஸ்பர நிதிகள்

இது ஒரு வகையான மியூச்சுவல் ஃபண்ட். குறைந்த அபாயங்களுடன் நிலையான வருமானத்தை எதிர்பார்க்கிறவர்களால் இது விரும்பப்படுகிறது. எனினும் இதில் சிறிய அளவில் அபாயம் இருப்பதால் தொழில் வல்லுனர்களின் ஆலோசனை பெறுவது அவசியமாகிறது. கடன் பரஸ்பர நிதிகள் ஏஏஏ செக்யூரிட்டீஸ் என்ற தலைப்பின் கீழ் வருகிறது.

பங்குச் சந்தை வீழ்ச்சியின்போது இதில் சற்று இடைவெளி ஏற்படும். இது வங்கி டெபாசிட்கள் மற்றும் நிறுவன டெபாசிட்களைக் கலந்து செய்த கலவையாகும். குழந்தைகள் பாதுகாப்புக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தால் நிறுவன நிரந்தர முதலீடு மற்றும் வங்கிகளின் நிரந்தர முதலீட்டுகள் இணைந்த உயர்தரமான திட்டங்களுக்குச் செல்லலாம்.

உதாரணமாக, வங்கிகளில் டெபாசிட்டுக்கு வழங்கப்படும் 6 முதல் 6.5 சதவீதத்துக்கு எதிராகக் கேடிடிஃஎப்சி நிறுவனத்தின் நிரந்தர முதலீட்டில் 8.25 சதவீத வட்டி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது கேரள அரசின் ஆதரவுடன் உள்ள டெபாசிட் திட்டம். அதனால் இது மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. உங்களது குழந்தைக்காகச் சேமிக்கும்போது பாதுகாப்பு என்பது முக்கியக் காரணியாக உள்ளது.

டியூட்ஸ்சி வங்கி

டியூட்ஸ்சி வங்கியின் 5 ஆண்டுகள் கொண்ட டெபாசிட் திட்டம் ஒன்று உள்ளது. இதில் ஆண்டுக்கு 7.75 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. இதில் வட்டி விகிதம் குறைவு.
Published by:Rizwan
First published: