ஹோம் /நியூஸ் /வணிகம் /

PPF முதல் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் வரை - தற்போது வழங்கப்படும் வட்டி என்ன?

PPF முதல் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் வரை - தற்போது வழங்கப்படும் வட்டி என்ன?

கோப்புப் படம்

கோப்புப் படம்

மத்திய அரசு எப்ரல் 1ம் தேதி முதல் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைப்பதாக அறிவித்தது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைப்பதாக மத்திய அரசு வெளியிடப்பட்ட அறிவிப்பாணை திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில், தற்போது வழங்கப்படும் வட்டிவிகிதங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட மத்திய அரசு எப்ரல் 1ம் தேதி முதல் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைப்பதாக அறிவித்தது. அதில், வங்கி சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக குறைக்கப்படுவதாக தெரிவித்திருந்த மத்திய அரசு, பி.பி.எப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 7.1 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாக குறைப்பதாகவும் தெரிவித்திருந்தது.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி 7.4 சதவீதத்தில் இருந்து, 6.5 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும், ஓராண்டு வைப்பு தொகைக்கான வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும் கூறியிருந்தது. தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கான வட்டி, 6.8-லிருந்து 5.9 சதவீதமாகவும், கிசான் விகாஸ் பத்திரம் மீதான வட்டி 6.9-லிருந்து 6.2 சதவீதமாக குறைப்பதாகவும் அறிவித்தது. மேலும், அஞ்சல் நிலைய சேமிப்பு வட்டி விகிதம் 0.40 முதல் 1.10 சதவீதம் வரை குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

ஒருவேளை மத்திய அரசின் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்திருந்தால் 1974 ஆம் ஆண்டுக்கு பின்னர் வழங்கப்படும் மிக குறைவான வட்டி விகிதமாக இருந்திருந்திருக்கும். மத்திய அரசின் புதிய அறிவிப்பாணை நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் முயற்சியில் இருக்கும் மத்திய அரசு ஏழை மக்களின் சேமிப்புகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தியிருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டின.

Also read... ஏப்.,1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய மாற்றங்கள் - தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

நாடு முழுவதையும் தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய பா.ஜ.க அரசு ஈடுபட்டிருப்பதாகவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து, இந்த அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திரும்ப பெறுவதாக அறிவித்துவிட்டார். மேலும், சேமிப்பு திட்டங்களுக்கு முந்தைய காலாண்டில் வழங்கப்படும் வட்டி விகிதம் தொடரும் என்றும் அறிவித்தார். அதன்படி, வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு 4 சதவீதம், பி.பி.எப்-க்கு 7.1 விழுக்காடு சதவீதம் வழங்கப்படும்.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதம் 7.4 சதவீதம், ஓராண்டு வைப்பு தொகைக்கான வட்டி விகிதம் 5.5 சதவீதம், தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கான வட்டி 6.8 சதவீதம், கிசான் விகாஸ் பத்திரம் மீதான வடி 6.9 சதவீதம் வழங்கப்படும். அதேபோல், ஏற்கனவே அஞ்சல் நிலையங்களில் உள்ள சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்திலும் மாற்றம் இல்லை. சேமிப்பு பணத்துக்கு பழைய வட்டி விகிதம் கொடுக்கப்படும்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: PPF