2022-23 நிதியாண்டுக்கான வரி கணக்குகளை பார்க்கும் நேரம் வந்துவிட்டது. 2022-23 நிதியாண்டிற்கான வருமான வரியில் விலக்கு பெற எந்தத்த இடத்தில் எப்படி சேமிப்புகளை சேர்க்கலாம், எப்படி அதை வைத்து வரிவிலக்கு பெறலாம் என்ற எல்லாரும் மண்டையை உருட்டிக்கொண்டு இருப்பார்கள். விலக்குகள் பெற ஈஸியான வழிகளில் ஒன்று தேசிய ஓய்வூதிய திட்டம். அது எப்படி எல்லாம் வரி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
மார்ச் 31 வரை விலக்குகளைப் பெறுவதற்காக, PPF, NPS, 5 ஆண்டு FD போன்ற சில வரிச் சேமிப்புக் கணக்குகளில் முதலீடு செய்யலாம். அவற்றில் பெரும் வரிச் சலுகைகளுக்கான திட்டம் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) தான். இது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) கட்டுப்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது தனிநபர்களுக்குப் போதுமான ஓய்வூதியத் தொகை பெறுவதற்கும் ஏற்பாடு செய்கிறது. மேலும், கட்டுப்பாட்டாளரின் கூற்றுப்படி, NPS முறையான ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் வரிச் சலுகைகளுடன் ஓய்வூதிய கார்பஸை உருவாக்குகிறது.
"இன்றைய காலகட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சாதகமான மற்றும் நெகிழ்வான ஓய்வூதியத் திட்டங்களில் NPS ஒன்றாகும். இது ஒழுங்குபடுத்தப்பட்ட, தொழில்ரீதியாக நிர்வகிக்கப்படும், வெளிப்படைதன்மை கொண்ட ஓய்வூதியத் திட்டமாகும். எந்தவொரு தனிநபருக்கும் மிகவும் பொருத்தமானது" என்று PFRDA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வரிச்சலுகை என்று எடுக்கும் பொது பழைய வரி-முறையை பயன்படுத்துபவர்களுக்கு இது பெரிதளவில் கைகொடுக்கும். பிரிவு 80C இன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை உள்ள முதலீட்டிற்கு விலக்கு பெற முடியும். தனிநபர் NPSல் சேமிக்கும் தொகையானது, சம்பளத்தின் 10% உச்சவரம்புக்கு உட்பட்டு (சம்பளம் பெறாதவர்களுக்கு மொத்த வருமானத்தில் 20%) இருந்தால் மொத்த தொகையையும் விலக்காகக் கோரலாம்.
50,000 கூடுதல் முதலீட்டில் வரிச் சலுகை
பிரிவு 80C இன் கீழ் மட்டுமல்லாது அதை தாண்டி NPS சந்தாதாரர்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக கிடைக்கும் ஒரு தனி சலுகையையும் கோற முடியும். இதன் மூலம் 1.5 லட்சத்தோடு சேர்த்து 50,000 ரூபாய் வரை கூடுதல் வரிச் சலுகையையும் பெறலாம். இதனால் மொத்த வரி சலுகை என்பது ரூ.2.00 லட்சமாக மாற்றப்படுகிறது.
பிரிவு 80CCD(2) இன் கீழ் வரிச் சலுகைகள்
ஒரு பணியாளரின் NPS கணக்கிற்கு ஒரு முதலாளி பங்களித்தால், பிரிவு 80C இன் கீழ் கிடைக்கும் வரிச் சலுகைகளுடன், பிரிவு 80 CCD(2) இன் கீழ் பணியாளர் விலக்குகளைப் பெறலாம். இருப்பினும், இந்த விலக்கு சம்பளத்தில் 10% அல்லது ரூ.7.50 லட்சத்திற்கு உட்பட்டது.
வருமானம் மற்றும் முதிர்வுத் தொகைக்கு வரி இல்லை
EEE எனப்படும் விலக்கு-விலக்கு-விலக்கு - வரி முறைமை மூலம் வழங்கும் சில நிதி தயாரிப்புகளில் NPS திட்டங்களும் ஒன்று என்று PFRDA கூறுகிறது. எனவே NPS சந்தாதாரர்கள் தங்கள் முதலீடுகளுக்கு மட்டும் வரிச் சலுகையைப் பெறுவது மட்டும் அல்லாமல் இந்தத் திட்டத்தின் கீழ் வரும் வருமானம் மற்றும் முதிர்வுத் தொகைக்கும் வரி விலக்கு பெற முடியும்.
இதையும் படிங்க: 2023இல் இந்தியாவில் தொழில்நுட்ப துறையினர் 10% சம்பள உயர்வைப் பெறலாம்- ஆய்வில் தகவல்
குறைந்த விலை திட்டம்
NPS என்பது உலகின் மிகக் குறைந்த விலை ஓய்வூதியத் திட்டங்களில் ஒன்றாகும். வேலை செய்யும் போது தொடர்ச்சியாக சிறிய அளவு முதலீடு செய்வதன் மூலம் இறுதியாக பெரிய அளவில் அனுகூலத்தாய் பெரும் வாய்ப்பாக இந்த பென்ஷன் திட்டம் உள்ளது.
முதலீடு செய்வது எளிது
NPS இல் முதலீடு செய்வது எளிதானது மற்றும் ஒரு சந்தாதாரர் எந்த நேரத்திலும் 500 ரூபாய்க்கு மேல் எந்த தொகையையும் பங்களிப்பதற்கான நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளது. மேலும், ஒரு வருடத்தில் ஒருவர் மேற்கொள்ளக்கூடிய பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.