லட்சுமி விலாஸ் வங்கியில் முதலீடு செய்தவர்கள், டெபாசிட் செய்தவர்களின் நிலை என்ன?

லட்சுமி விலாஸ் வங்கியில் முதலீடு செய்தவர்கள், டெபாசிட் செய்தவர்களின் நிலை என்ன?

ரிசர்வ் வங்கி

இன்னும் ஒரு மாதத்திற்குள் DBS வங்கியுடன் லட்சுமி விலாஸ் வங்கி இணைக்கப்பட்டு, பிரச்னை சரிசெய்யப்படும்.

  • Share this:
லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கான வேலைகளில் ரிசர்வ் வங்கி இறங்கியுள்ளது. தற்போது வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு காலம் முடிவதற்குள், இந்த இணைப்பு நடவடிக்கை முடிவுக்குக் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லட்சுமி விலாஸ் வங்கியில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நிலைமையை சமாளிப்பதற்காகவே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக, ஒரு வங்கியில், வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த மொத்த தொகை 100 ரூபாய் என்றால், அந்த தொகையில் 4 சதவீதத்தை ரிசர்வ் வங்கியிடம் கொடுத்து வைக்க வேண்டும். அதாவது, 100 ரூபாயில் 4 ரூபாய் ரிசர்வ் வங்கிக்கு, வங்கிகள் கொடுக்க வேண்டும். இதுபோக, மேலும் 22 சதவீத பணத்தை வங்கிகள் அரசு கடன் பத்திரத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்த கடன் பத்திரங்களுக்கு வட்டி உண்டு.

Also read: குஜராத்தில் லாரிகள் மோதி விபத்து: 11 பேர் உயிரிழப்பு,17-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.. பிரதமர், குடியரசுத் தலைவர் இரங்கல்..

மொத்தம் உள்ள 100 ரூபாயில் 26 ரூபாய், ரிசர்வ் வங்கியிடமும், அரசு கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படும். ஒரு வேலை, வங்கிகளிடம் பணம் இல்லாதபோது, அல்லது திவால் ஆகும் நிலையை எட்டும்போது, இந்த தொகையைக் கொண்டுதான் அந்த குறுகிய காலத்தை ரிசர்வ் வங்கி சமாளிக்கும்.

இதன் ஒரு கட்டம்தான், 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது என்ற அறிவிப்பு. இன்னும் ஒரு மாதத்திற்குள் DBS வங்கியுடன் லட்சுமி விலாஸ் வங்கி இணைக்கப்பட்டு, பிரச்னை சரிசெய்யப்படும். இதில் லட்சுமி விலாஸ் வங்கி பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்குத்தான் நஷ்டமே தவிர, அதில் டெபாசிட் வைத்திருப்பவர்கள் அச்சப்பட வேண்டியது இல்லை.லட்சுமி விலாஸ் வங்கி பங்குகளில், 46.7 சதவிதம் தனியார் முதலீட்டாளர்களிடமும், 1.6 சதவிதம் LICயின் வசமும் உள்ளது. சர்வதேச முதலீட்டாளர் வசம் 8.65 சதவித பங்குகள் உள்ளன. லட்சுமி விலாஸ் வங்கி PROMOTERகளிடம் 6.8 சதவித பங்குகள் மட்டுமே உள்ளன. மீதமுள்ள 93.2 சதவிதம் பங்குகள் வெளிநபர்களிடம்தான் உள்ளன.

லட்சுமி விலாஸ் வங்கி DBS வங்கியுடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் இணைப்பு என்பது புதிதல்ல. 1991ம் ஆண்டு வெளியான பொருளாதாரக் கொள்கைகளுக்குப் பின், TIMES BANK, HDFC உடன் இணைக்கப்பட்டதுதான் புதிய இந்தியாவில் நடைபெற்ற முதல் வங்கி இணைப்பு. பின்னர் BANK OF MADURA, ICICI வங்கியுடன் இணைக்கப்பட்டது. அண்மையில், யெஸ் வங்கி திவால் ஆகாமல் இருக்க, அனைத்து வங்கிகளும் அதில் முதலீடு செய்தது தொடங்கி, பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டது வரை, தற்போதைய காலத்தில் வங்கிகள் திவால் ஆக அரசு விடாது என்பதற்கான உதாரணங்களாக உள்ளன.
Published by:Rizwan
First published: