'முதலீட்டாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது..' லஷ்மி விலாஸ் வங்கி நிர்வாகி மனோகரன் உறுதி..

வங்கிகள் திவால் ஆகும் நிலையை எட்டும் போது, ரிசர்வ் வங்கி தலையிடுவதன் காரணம் என்ன? லட்சுமி விலாஸ் வங்கியில் முதலீடு செய்தவர்கள் மற்றும் டெபாசிட் செய்தவர்களின் நிலை என்ன? 

'முதலீட்டாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது..' லஷ்மி விலாஸ் வங்கி நிர்வாகி மனோகரன் உறுதி..
லக்ஷிமி விலாஸ் வங்கி
  • News18 Tamil
  • Last Updated: November 19, 2020, 10:52 AM IST
  • Share this:
1926-ஆம் ஆண்டு கரூரை சேர்ந்த தொழிலதிபர் ராமலிங்க செட்டியாரால் தொடங்கப்பட்ட லஷ்மி விலாஸ் வங்கி, திவால் ஆகக்கூடிய அளவுக்கு நிதி நெருக்கடியைச் சந்தித்தது. இதனால், லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கான வேலைகளில் ரிசர்வ் வங்கி இறங்கியுள்ளது. வாடிக்கையாளர்களின் முதலீடுகளை பாதுகாக்கும் நோக்குடன், டிசம்பர் 16ஆம் தேதி வரை அனைத்து சேமிப்பு, நடப்புக் கணக்குகளில் இருந்து அதிகபட்சமாக 25,000 ரூபாய் மட்டுமே எடுக்கலாம் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெபாசிட் பணம் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளதாக வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

அதேநேரம், வங்கிகள் இணைப்பு என்பது வழக்கமான நடைமுறை என்றும் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட டிபிஎஸ் வங்கியுடன் லக்ஷ்மி விலாஸ் வங்கியை இணைப்பதற்கும் வாடிக்கையாளர்கள் ஒருதரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

லட்சுமி விலாஸ் வங்கி பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு தான் நஷ்டமே தவிர, அதில் டெபாசிட் வைத்திருப்பவர்கள் அச்சப்பட தேவையில்லை என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


இதனிடையே, லஷ்மி விலாஸ் வங்கியில் முதலீடு செய்தவர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கிறது என்ற உத்தரவாத்ததை அளிப்பதே தங்கள் முன்னுரிமை என்று அந்த வங்கியின் நிர்வாகி டி.என். மனோகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க.. சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் படித்த மாணவிகள் 5 பேருக்கு மருத்துவ சீட்..இந்தியாவை பொறுத்தவரை 1991ஆம் ஆண்டு வெளியான பொருளாதார கொள்கைகளுக்கு பின், TIMES BANK, HDFC உடன் இணைக்கப்பட்டதுதான், புதிய இந்தியாவில் நடைபெற்ற முதல் வங்கி இணைப்பு. அண்மையில், யெஸ் வங்கி திவால் ஆகாமல் இருக்க அனைத்து வங்கிகளும் அதில் முதலீடு செய்தது தொடங்கி பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டது வரை தற்போதைய காலத்தில் வங்கிகள் திவால் ஆக அரசு விடாது என்பதற்கான உதாரணங்களாக உள்ளன.
First published: November 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading