தபால் நிலையத்தில் செல்வமகள் திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்ட லட்சக்கணக்கான பணம் மாயம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்

மாதிரிப்படம்

செல்வமகள் திட்டத்தில் தபால்நிலையத்தில் சேமிப்பு மேற்கொண்டவர்களின் கணக்கில் பணம் இல்லாததைக்கண்டு பயணாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 • Share this:
  தபால் நிலையத்தில் செல்வமகள் திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் மாயமானது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்கென கொண்டுவரப்பட்ட செல்வமகள் திட்டமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் 10 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாப்பாளரின் உதவியுடன் கணக்கு தொடங்க முடியும். இந்தியாவில் உள்ள எந்த தபால் நிலையத்தில் இந்த திட்டத்தினை தொடங்கலாம் என்பதால் கிராமப்புறங்களிலும் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த கணக்குக்கான வட்டி விகிதம் 7.6 சதவிகிதம் என்பதால் மக்கள் இந்த திட்டத்தில் ஆர்வமுடன் முதலீடு செய்தனர்.

  Also Read:  துரோகம் செய்த அண்ணாமலை.. பொங்கும் மதன் ரவிச்சந்திரன்..

  இந்நிலையில் தபால் நிலையத்தில் தொடங்கப்பட்ட இந்த செல்வமகள் திட்டத்தில் உத்தரப்பிரதேச பகுதியில் மோசடி நடந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பக்பத் பகுதியில்தான் மோசடி நடந்துள்ளது. செல்வமகள் திட்டத்தில் தபால்நிலையத்தில் சேமிப்பு மேற்கொண்டவர்களின் கணக்கில் பணம் இல்லாததைக்கண்டு பயணாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  பாஸ்புக் புத்தகத்தில் மாதம் மாதம் பணம் செலுத்தியதாக உள்ளூர் தபால்காரர் வரவு வைத்துள்ளார். கம்ப்யூட்டரில் பரிசோதனை செய்ததில் சேமிப்பு கணக்கில் பணம் இருப்பு இல்லாததை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மாயமான பணம் குறித்து கிராம மக்கள் உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்ததன்பேரில் செல்வமகள் திட்டத்தின் மூலம் சுமார் 18 லட்சம் வரையில் உள்ளூர் போஸ்மாஸ்டர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட போஸ்மாஸ்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

  Also Read:  தங்க செயினை விழுங்கிய திருடன் - பத்திரமாக மீட்ட போலீசார்!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

   மோசடி செய்தது எப்படி?
  பெண் குழந்தைகளின் நலனில் அக்கறைக்கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த திட்டத்தில் பக்பத் பகுதியைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் முதலீடு செய்யத் தொடங்கினார். கல்வி அறிவு இல்லாத பாமர மக்கள் பணத்தை செலுத்தவும், பாஸ்புக்கில் பதிவு செய்யவும் உள்ளூர் போஸ்ட்மாஸ்டர் உதவியை நாடியுள்ளனர். இதனைப் பயன்படுத்திக்கொண்ட அந்த போஸ்ட் மாஸ்டர், கிராம மக்களிடம் இருந்து பணத்தை பெற்று அதனை தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். பாஸ்புக் புத்தகத்தில் கம்ப்யூட்டரில் எண்டரி போடாமல் தனது கையால் பணத்தை வரவு வைத்தது போல் எழுதிக்கொடுத்துள்ளார்.

  கிராம மக்கள் சிலர் பாஸ்புக்கை கம்ப்யூட்டரில் எண்டரி போடும் போது அவர்களது கணக்கில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கிராம மக்களிடம் பணத்தை வாங்கி அவர்களது கணக்கில் செலுத்தாமல் சுமார் 18 லட்சத்து 50 ஆயிரம் வரையில் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: