பிஎஃப் வட்டி விகிதத்தை அதிகரித்த தொழிலாளர் நல அமைச்சகம் - 6 கோடி பேருக்கு லாபம்!

வட்டி அதிகரித்து இருப்பதன் மூலம் 6 கோடி பிஎஃப் கணக்கு வைப்பாளர்களுக்கு 54ஆயிரம் கோடி ரூபாய் லாபமாகக் கிடைக்கும்.

பிஎஃப் வட்டி விகிதத்தை அதிகரித்த தொழிலாளர் நல அமைச்சகம் - 6 கோடி பேருக்கு லாபம்!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: September 25, 2019, 10:19 PM IST
  • Share this:
2018-19 நிதியாண்டுக்கான பிஎஃப் வட்டி விகிதத்தை 8.65 சதவிகிதமாக உயர்த்துவதாக தொழிலாளர் நல அமைச்சகம் அறிவித்துள்ளது.

உயர்த்தப்பட்ட வட்டி விகிதத்தால் சுமார் 6 கோடி பேர் பயன் பெற உள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் வெளியிட்டுள்ளார். 2017- 18 நிதியாண்டுக்கான பணத்தை பயனாளர்கள் எடுக்க நினைத்தால் அவர்களுக்கு 8.55 சதவிகித வட்டியுடனும் 2018-19 நிதியாண்டில் பணத்தை வெளியில் எடுக்க ஒப்புதல் கிடைத்தோருக்கு 8.65 சதவிகித வட்டியுடன் பணம் வழங்கப்படும்.

கடந்த நிதியாண்டைவிட 2018-19 நிதியாண்டில் தொழிலாளர் வைப்பு நிதி வட்டி விகிதம் 0.10 புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் துறையின் இந்த முடிவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் மத்திய போர்டு உறுப்பினர்களிடமிருந்து ஒப்புதல் கிடைத்தது. இந்த ஒப்புதலை தற்போது அமைச்சகம் நடைமுறைபடுத்தியுள்ளது.


வட்டி அதிகரித்து இருப்பதன் மூலம் 6 கோடி பிஎஃப் கணக்கு வைப்பாளர்களுக்கு 54ஆயிரம் கோடி ரூபாய் லாபமாகக் கிடைக்கும்.

மேலும் பார்க்க: கிளைகளை அதிகரிக்கும் ஐசிஐசிஐ வங்கி... புதிதாக 3,500 பேருக்கு வங்கிப்பணி வாய்ப்பு!

15 ஆண்டுகளுக்குப் பின் முதல்வர்கள் சந்திப்பு!
First published: September 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading