Home /News /business /

KYC update : 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு.. பேங்கில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் முதலில் செய்ய வேண்டிய வேலை இதுதான்!

KYC update : 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு.. பேங்கில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் முதலில் செய்ய வேண்டிய வேலை இதுதான்!

கே . ஒய்.சி

கே . ஒய்.சி

KYC அப்டேட் செய்யாவிட்டால் வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் வாடிக்கையாளர்களின் கணக்கு முடக்கப்பட வாய்ப்பு உண்டு என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது

    வங்கி வாடிக்கையாளர்கள் KYC அப்டேட்டை டிசம்பர் 31  2021 ஆம் தேதிக்குள் செய்து முடித்து இருக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் நேற்றைய தினம் அதை செய்ய தவறியவர்களுக்கு மற்றொரு வாய்ப்பாக KYC அப்டேட்டை செய்ய மூன்று மாத காலத்திற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் KYC அப்டேட் செய்யாவிடில் அதனை மார்ச் 31, 2022 வரையில் செய்து கொள்ளலாம்.

    பேங்கில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் அனைவரும் KYC அப்டேட்டை செய்து முடிக்க வேண்டியது கட்டாயமான ஒன்று. பணப்பரிவர்த்தனை செய்பவர்கள் யார்? என்ற  விவரத்தை வங்கி தெரிந்து கொள்ளவே இந்த KYC அப்டேட். பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் வாடிக்கையாளர் பணத்திற்கு பாதுகாப்பு என்ற முறையில் கே.ஒய்.சி ஆவணங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பணப் பரிமாற்ற முறை மற்றும் இதர தன்மைகளின் அடிப்படையில், இந்த கே.ஒய்.சி புதுப்பிப்பதற்கான கால அளவு மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகள் மற்றும் 8 ஆண்டுகள்.

    SBI நகைக்கடனில் இவர்களுக்கு மட்டும் இத்தனை சலுகைகள்! ஏன் தெரியுமா?

    எனவே, KYC அப்டேட் செய்யாவிட்டால் வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் வாடிக்கையாளர்களின் கணக்கு முடக்கப்பட வாய்ப்பு உண்டு என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதை அப்டேட் செய்ய டிசம்பர் 31 2021 கடைசி தேதியாகவும் அறிவிக்கப்பட்டது. வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு இதை பற்றி அலர்ட் செய்து இருந்தனர். ஆனால் தற்போது ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு இதற்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கியுள்ளது.இதன் காரணமாக மார்ச் 31க்கு முன்னதாக KYC அப்டேஷனை செய்து கொள்ளலாம்.

    இதையும் படிங்க.. போஸ்ட் ஆபீஸில் ஜாயிண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு அடிக்கடி எழும் சந்தேகம்!

    KYC அப்டே செய்வது மிக மிக சுலபம். அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கிக்கு நேராக சென்றும் இதை செய்ய முடியும். பல வங்கிகளில் ஆன்லைனிலேயே அப்டேட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. சில வங்கிகள் வீடியோ மூலமாக கூட கே ஓய்சியை அப்டேட் செய்து கொள்ளும் வசதியை கொடுத்துள்ளது . இதுக் குறித்த கூடுதல் விவரங்களுக்கு நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி சேவை மைய எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank, KYC, Savings

    அடுத்த செய்தி