Union Budget 2021 | Economic Survey 2021-இன் முக்கியஸ்தராக திகழும் கே.வி.சுப்பிரமணியன்.. இவர் யார் தெரியுமா?

இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன்

சிகாகோ-பூத்திலிருந்து PhD மற்றும் ஐ.ஐ.டி-ஐ.ஐ.எம் களின் டாப் ரேங்கிங் முன்னாள் மாணவரான சுப்பிரமணியன் வங்கி, கார்ப்பரேட் ஆளுகை மற்றும் பொருளாதாரக் கொள்கையில் உலகின் முன்னணி நிபுணர்களில் ஒருவராகவும் உள்ளார்.

  • Share this:
மத்திய பட்ஜெட்டுக்கு களம் அமைக்கும் பொருளாதார கணக்கெடுப்பு 2021-ஐ ஜனவரி 29 அன்று அரசாங்கம் முன்வைக்கும். அரசாங்கத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி சுப்ரமணியன் இந்த அறிக்கையின் முக்கிய பொறுப்பாளர் ஆவார், இது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு முந்தைய நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தின் முக்கிய கூறுகளை மதிப்பாய்வு செய்கிறது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் பொருளாதார கணக்கெடுப்பை அட்டவணைப்படுத்திய பின்னர், ஜனவரி 29 மதியம் 2.30 மணிக்கு கணக்கெடுப்பு குறித்து விவாதிக்க தலைமை பொருளாதார ஆலோசகரான கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த உள்ளார்.

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படவுள்ள இந்த அறிக்கை, கடந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்கிறது. இது தொகுதி I, தொகுதி II மற்றும் புள்ளிவிவர பின் இணைப்பு (statistical appendix) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பாராளுமன்றத்தில் 2021 பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அட்டவணைப்படுத்துவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், பொருளாதார கணக்கெடுப்பு 2021 ஐ வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, பொருளாதார கணக்கெடுப்பு பொருளாதார விவகாரங்கள் துறையின் பொருளாதார பிரிவால் தயாரிக்கப்படுகிறது, இதில் CEA சுப்பிரமணியன் மற்றும் அவரது குழுவும் அடங்கும்.


நிர்மலா சீதாராமனுடன் கே.வி.சுப்பிரமணியன்


KV சுப்பிரமணியன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது :

KV சுப்பிரமணியன் தனது CEA பதவியை 2018 டிசம்பரில் ஏற்றுக்கொண்டார். அரவிந்த் சுப்பிரமணியன் சில "தனிப்பட்ட காரணங்களால்" தனது பதவியை ராஜினாமா செய்தபின் இவர் அந்த பதவியை ஏற்றுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள நாட்டின் முதன்மையான வணிகப் பள்ளி, இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் (ISB) நிதித்துறை இணை பேராசிரியராகவும் Analyticalநிதி மையத்தின் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார்.

இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன்


சிகாகோ-பூத்திலிருந்து PhD மற்றும் ஐ.ஐ.டி-ஐ.ஐ.எம் களின் டாப் ரேங்கிங் முன்னாள் மாணவரான சுப்பிரமணியன் வங்கி, கார்ப்பரேட் ஆளுகை மற்றும் பொருளாதாரக் கொள்கையில் உலகின் முன்னணி நிபுணர்களில் ஒருவராகவும் உள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் வங்கிகளின் நிர்வாகம் குறித்த பிஜே நாயக் கமிட்டி மற்றும் செபியின் உதய் கோடக் கார்ப்பரேட் கவர்னன்ஸ் கமிட்டி உள்ளிட்ட பல நிபுணர் குழுக்களிலும் பணியாற்றியுள்ளார்.

இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன்


பந்தன் வங்கியில் (2015-2018) ஸ்தாபக வாரிய உறுப்பினராகவும் இருந்தார். சுப்ரமணியன் தாலினோமிக்ஸ் (Thalinomics) என்ற அவரது ஐடியாவிற்கு பெயர் பெற்றவர், ஒரு வெஜிடேரியன் அல்லது நான்-வெஜிடேரியன் தாலிக்கு ஒரு பொதுவான நபர் என்ன செலுத்துகிறார், என்பது இந்திய பிக் மேக் குறியீடாக (Indian Big Mac Index) பாராட்டப்பட்டது. கல்வி சார்ந்த முந்தைய பதவிகளில், சுப்பிரமணியன் அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகத்தில் உள்ள Goizueta Business School-ல் finance faculty-யாக பணியாற்றினார்.

சுப்ரமணியன் தனது கல்வி வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு, நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற ஜே.பி மோர்கனில் ஆலோசகராக பணியாற்றினார். ICICI லிமிடெட் நிறுவனத்தின் Elite Derivatives Research குழுவின்நிர்வாக பொறுப்பிலும் பணியாற்றினார், அந்த நேரத்தில் அது இந்தியாவின் சிறந்த திட்ட நிதி நிறுவனமாக இருந்தது. சுப்பிரமணியனின் கல்வித் தகுதிகளில் சிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் PhD யும் (நிதி பொருளாதாரம்) அடங்கும் மற்றும் 1999ம் ஆண்டில் கல்கத்தாவின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (IIM)ல் MBA மற்றும் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIT) பி. டெக் (எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்) பட்டமும் பெற்றுள்ளார்.
Published by:Arun
First published: