மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு கோடக் மஹிந்திரா வங்கி சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதுக் குறித்து பார்க்கலாம்.
முன்பெல்லாம் வங்கியில் அக்கவுண்ட் ஓபன் செய்வது எவ்வளவு கடினம் என்பது எல்லாருக்கும் தெரியும். அதிலும் சரியான முகவரி ஆவணம், பெயர் ஆவணம் இல்லையென்றால் அக்கவுண்டை கடைசி வரை ஓபன் செய்யவே முடியாது.ஆனால், இன்று அப்படி இல்லை. அதிலும் கோடக் வங்கி பற்றி கேட்கவே வேண்டாம். இந்த வங்கியில் அக்கவுண்ட் ஓபன் செய்வது மிக மிக சுலபம். வீட்டுக்கே வந்து அக்கவுண்ட் ஓபன் செய்து விட்டு, டெபிட் கார்டு, பாஸ் புக், என அக்கவுண்டுக்கு தேவையான அனைத்தையும் ஊழியர்கள் வழங்கிவிட்டு செல்வார்கள். வங்கியின் இந்த சேவை வாடிக்கையாளர்களை பெரிதளவில் கவர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது வங்கி நிர்வாகம் அரசு ஊழியர்களுக்காக மற்றொரு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமேசான் நிறுவனத்துக்கு ரூ.200 கோடி அபராதம்: உத்தரவை உறுதிப்படுத்திய தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம்
மத்திய அரசு அல்லது மாநில அரசு ஊழியர்களுக்கு சலுகைகளுடன் கூடிய சேமிப்பு கணக்கை அறிமுகம் செய்துள்ளது. ’கோடக் நேஷன் பில்டர்ஸ்’ என்ற சம்பள கணக்கை அரசு சம்பளம் பெறும் பொத்துறை ஊழியர்கள் ஓபன் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அவர்களுக்கு பல்வேறு சலுகைகளுடன் கூடிய சேவை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதில் வாழ்நாள் முழுவதும் ஜீரோ பேலன்ஸ் வைத்துக்கொள்ளும் வசதி உண்டு .அதேபோல் சேவை கட்டணம் இல்லாத லாக்கர் வசதி, மாதம் இரண்டு லட்ச ரூபாய் வரை இலவச ரொக்க வைப்பு மற்றும் ஒரு மாதத்திற்கு 30 இலவச பரிவர்த்தனை ஆகிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக கோடக் வங்கி தெரிவித்துள்ளது.
பேடிஎம் மூலமாக உங்கள் அக்கவுண்ட் பேலன்ஸ் தெரிந்து கொள்ளலாம்!
இலவசமாக ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு வழங்கப்படும், அக்கவுண்ட் வைத்திருப்பவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இலவச ஆட்-ஆன் கார்டு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 50 லட்சம் வரை தனிப்பட்ட விபத்து காப்பீடு திட்டமும் இதில் கூடுதலாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேலரி கணக்கை ஓபன் செய்யும் ஊழியர்களுக்கு ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டில் 5 சதவீதம் வரை கேஷ்பேக் வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank accounts, Current Account, Savings