Home /News /business /

குறைவான வட்டியில் வீட்டு கடன் வழங்கும் இரண்டு வங்கிகள்!

குறைவான வட்டியில் வீட்டு கடன் வழங்கும் இரண்டு வங்கிகள்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

எதிர்பார்க்கப்படும் பணவீக்கம் மற்றும் வளர்ச்சிப் பாதையைப் பொறுத்தவரை, இந்தக் குழு 2021க்குள் சில மாற்றங்கள் ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம் என ஐசிஐசிஐ பத்திரங்களின் பொருளாதார நிபுணர் அனகா தியோதர் (Anagha Deodhar, Economist, ICICI Securities) கூறுகிறார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), முக்கிய வட்டி கொள்கை விகிதங்களை இப்போது மாற்றவில்லை. கொரோனா லாக்டவுன் காரணமாக நடந்த நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. ஏனெனில் ரிசர்வ் வங்கி பொருளாதாரத்தினை மீட்டெடுக்கும் பொருட்டு ரெப்போ விகிதத்தினை குறைத்தது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள வங்கிகளும், கடன்களுக்கான வட்டி விகிதத்தினை இப்போது குறைத்துள்ளது. அதுவும் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி விகிதத்தினை குறைந்துள்ளது. இதன் காரணமாக வீட்டை பற்றி கனவு காண்போருக்கு இது மிக நல்ல வாய்ப்பு. ஏனெனில் நடுத்தர மக்கள் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் ஒரு நல்ல வீடு, குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுத்து விட வேண்டும் என்றுதான் நினைப்பர். 

வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு, இது ஒரு நல்ல காலம். இருப்பினும், இதன் பொருள் என்னவென்றால், விகிதக் குறைப்பு மேலும் சாத்தியமில்லை என்பதாகும். 

கொள்கை விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க ரிசர்வ் வங்கியின் MPC எடுத்த முடிவு எதிர்பார்த்தபடி இருந்தது. “விகிதக் குறைப்பு சுழற்சி இப்போது இல்லை” என்று கோடக் நிறுவன பங்குகளின் துணைத் தலைவரும் மூத்த பொருளாதார நிபுணருமான சுவோதீப் ரக்ஷித் (Suvodeep Rakshit, Vice-president and Senior Economist, Kotak Institutional Equities) கூறினார். எதிர்பார்க்கப்படும் பணவீக்கம் மற்றும் வளர்ச்சிப் பாதையைப் பொறுத்தவரை, இந்தக் குழு 2021க்குள் சில மாற்றங்கள் ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம் என ஐசிஐசிஐ பத்திரங்களின் பொருளாதார நிபுணர் அனகா தியோதர் (Anagha Deodhar, Economist, ICICI Securities) கூறுகிறார்.

குறைந்த வட்டியில் வீட்டு கடன் (Lowest Interest Rate):-

கையில் காசு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. வங்கிகளில் கடன்  வாங்கியாவது அவரவருக்கு ஏற்ப, ஒரு நல்ல வீடு கட்டிவிட வேண்டும் என்பது பலரின் பெரும் கனவாகவே இருக்கின்றது. ஏனெனில், இன்றைய காலகட்டத்தில் வீடு கட்டுவது என்பது, நிச்சயம் கையில் பணத்தினை வைத்துக் கொண்டு செய்யும் காரியமாக இல்லை. ஏனெனில் விற்கிற விலைவாசி அப்படி இருக்கின்றது. ஆனால், அப்படியானவர்களுக்கு வரனாக உள்ளது தான் வீட்டுக்கடன். 

அதுவும் கொரோனா கொடுத்த வரத்தினால், குறைவான வட்டியில் கடன் கிடைக்கிறது. எனவே, நீங்கள் ஒரு வீட்டை வாங்குவது குறித்து சிந்திக்கிறீர்கள் என்றால், முன்பு சுட்டிக்காட்டியபடி, உங்கள் முடிவை தாமதப்படுத்தாமல், உங்கள் வங்கியின் வட்டி விகிதங்கள் தற்போதைய இலாபகரமான சலுகைகளை விட அதிகமாக இருந்தால் கடன் வழங்குநர்களை மாற்றுவதற்கான நல்ல தருணம் இது. ரூ .75 லட்சம் வீட்டுக் கடனுக்கான வட்டி 6.75 சதவீதமாகத் தொடங்குகிறது, 

கோட்டக் மஹிந்திரா (Kotak Mahindra) மலிவான கடன் வழங்குபவர். பேங்க் பஜாரின் தரவுகளின்படி, கோட்டக் மஹிந்திராவைத் தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank),  5 அடிப்படை புள்ளிகளை பெற்றுள்ளது. வீட்டு நிதி நிறுவனங்களில், எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் டாடா கேபிடல் (LIC Housing Finance, Bajaj Finserve, and Tata Capital ) ஆகியவை 6.9 சதவீத வீட்டுக் கடன் விகிதங்களை வழங்குகின்றன. இது தவிர கொரோனாவால் முடங்கிபோன டெபவலப்பர்களின் வணிகத்தினை ஊக்குவிக்க, அவர்களும் இந்த நேரத்தில் பற்பல சலுகைகளை வாரி வழங்கி வருகின்றனர். ஆக இதெல்லாம் சேர்த்து உங்களது வீட்டுக்கனவை நிறைவேற்ற சரியான வாய்ப்பாக அமையும். 

கோடக் மகேந்திரா + பஞ்சாப் நேஷனல் வங்கி +மற்ற பிற வங்கிகளின் வட்டி விகிதங்கள்:-

கோடக் மகேந்திரா வங்கியினை பொறுத்த வரையில், வீட்டுக்கடன் வாடிக்கையாளர்கள் வருடத்திற்கு 6.75% முதல் வட்டியினை பெறலாம். மற்ற வங்கியில் இருந்து கடன் தொகையை கோடக் வங்கிக்கு மாற்றினால், அவர்கள் பல லட்சம் ரூபாயை கூட சேமிக்க முடியும் என்கிறது கோடக் மகேந்திரா வங்கி. குறிப்பாக பெண் வாடிக்கையாளர்களுக்கு, கடனுக்கு சிறப்பு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 

Also read... Gold Rate | தொடர்ச்சியாக உயர்ந்த நிலையில் இன்று குறைந்தது தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.192 குறைவு!பஞ்சாப் நேஷனல் வங்கியில் (pnb) வருடத்திற்கு 6.80% வட்டி விகிதமும், பேங்க் ஆப் இந்தியாவில் (BOI) வருடத்திற்கு 6.85% வட்டி விகிதமும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் 6.85% வட்டி விகிதமும், இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடாவில் வருடத்திற்கு 6.85% வட்டி விகிதமும் வசூலிக்கப்படுகிறது. கனரா வங்கியில் (Canara Bank) வருடத்திற்கு 6.90% வட்டிவிகிதமும்,  பஞ்சாப் & சிந்த் வங்கியில் வருடத்திற்கு 6.90% வட்டிவிகிதமும், யூனியன் வங்கியில் வருடத்திற்கு 6.90% வட்டிவிகிதமும், தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியில் (Axis Bank) வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் வருடத்திற்கு 6.9%ல் இருந்தும் ஆரம்பிக்கிறது. 

எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸில் (LIC Housing finance) வருடத்திற்கு 6.90% வட்டிவிகிதமும், பஜாஜ் பின்செர்வில் (Bajaj Finserve) வருடத்திற்கு 6.90% வட்டிவிகிதமும், டாடா கேப்பிட்டலில் (Tata Capital) வருடத்திற்கு 6.90% வட்டிவிகிதமும், பேங்க் ஆஃப் மஹாராஷ்டிராவில் வருடத்திற்கு 6.50% வட்டிவிகிதமும், இதே போல HDFCயிலும் வாடிக்கையாளார்களுக்கு வருடத்திற்கு 7.00% வட்டி விகிதத்தில் இருந்தும் கிடைக்கும். இதே போல ICICI வங்கியிலும் வீட்டுக்கடன் வட்டி விகிதம் 7.00% முதல் ஆரம்பிக்கிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Home Loan, Punjab National Bank

அடுத்த செய்தி