2 கோடி ரூபாய்க்குள்ளான பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டியை கோடக் மஹிந்திரா வங்கி அதிகரித்துள்ளது. இதில் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்க போகுது.
சமீபத்தில், தனியார் வங்கிகள், 2 கோடி ரூபாய்க்கும் குறைவான நிலையான வைப்பு முதலீடுகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. அந்த வரிசையில் சில நாட்களுக்கு முன்பு எஸ்பிஐ, ஐசிஐசிஐ என அடுத்தடுத்த வங்கிகள் பிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் வங்கியான எச். டி.எப்.சி வங்கி 2 கோடி ரூபாய்க்கு மேலான டெபாசிட்களின் வட்டி விகிதத்தை உயர்த்தியது. இந்த வட்டி உயர்வு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவித்திருந்தது. இப்போது இந்த வரிசையில் கோடக் மஹிந்திரா வங்கியும் இணைந்துள்ளது.
பாசிப்பருப்பில் கூட தோசை வரும் தெரியுமா? கட்டாயம் ட்ரை பண்ணுங்க!
கோடக் மஹிந்திரா வங்கியின் இந்த வட்டி அதிகரிப்பானது 2 கோடி ரூபாய்க்குள்ளான டெபாசிட்டுகளுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதமானது ஏப்ரல் 12, 2022 முதல் அமலுக்கும் வந்துள்ளது. உள்நாட்டு வாடிக்கையாளர்கள், NRO, NRE இந்த சலுகையை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த வட்டி உயர்வு NRO மற்றும் NRE- மூத்த குடிமக்களுக்கு பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது உயர்த்தப்பட்டுள்ள வட்டி விவரங்களை பார்க்கலாம்.
போஸ்ட் ஆபீஸில் வட்டி கிடைக்க வாடிக்கையாளர்கள் இதை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும்!
கோடக் மஹிந்திரா வங்கியின் பொது மக்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி, வங்கியில் 2 கோடி ரூபாய்க்கு கீழான பிக்சட் டெபாசிட்டுகளில் 7 முதல் 14 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 2.50% வட்டி, 15 முதல் 29 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 2.50% வட்டி, 31 முதல் 45 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 2.75% வட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3% வட்டி 46 முதல் 90 நாட்கள் வரையிலான திட்டங்களுக்கும் பொருந்தும். அடுத்தடுத்த சேமிப்பு நாட்களுக்கான வட்டி உயர்வை முழுமையாக கோடக் மஹிந்திரா வங்கியின் ஆன்லைன் இணயதளத்தில் பார்க்கலாம்.
கோடக் மஹிந்திரா வங்கியின் மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி, வங்கியில் 2 கோடி ரூபாய்க்கு கீழான பிக்சட் டெபாசிட்டுகளில் 7 முதல் 14 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 3% வட்டி, 15 முதல் 29 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 3% வட்டி, 31 முதல் 45 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 3.25% வட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3.25% வட்டி 46 முதல் 90 நாட்கள் வரையிலான திட்டங்களுக்கும் பொருந்தும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank accounts, Fixed Deposit, Savings