வருமான வரி செலுத்தியவர்கள் அதற்கான திருப்பு படிவத்தை (ITR ) பதிவு செய்யும் நேரமிது. ஜூலை 31 க்குள் படிவத்தை பதிவு செய்ய வேண்டும். அப்படிவத்தின் வகைகளையும், யாருக்கு எந்த ITR படிவம் பொருந்தும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ITR-1 படிவம் அல்லது SAHAJ
குடியுரிமை பெற்ற இந்தியர்களாக இருந்து மொத்த வருமானம் அதிகபட்சமாக ரூ.50 லட்சமாக இருக்கலாம்.அதற்கு மேல் உள்ளவர்கள் ITR-1 படிவம் நிரப்ப முடியாது.
ஓய்வூதியம் அல்லது சம்பளம் பெறுபவர்கள், சொந்தமாக ஒரு வீடு மட்டும் வைத்திருந்து அதிலிருந்து வருமானம் பெறுபவராக இருக்கலாம். விவசாயத்திலிருந்து ரூ. 5,000க்கு மிகாமல் வருமானம் பெறுபவர்கள் அல்லது பெற்றவர்கள். லாட்டரி அல்லது குதிரைப் பந்தயங்கள் போன்ற பிற ஆதாரங்களில் இருந்து வெற்றி பெற்ற வருமானம் ரூ.50 லட்சம் வரை இருந்தால் தகுதி பெறுவர்.
ITR 2 படிவம்
வரி செலுத்துபவரின் வருமானம் ரூ.50 லட்சத்திற்கு அதிகமாகவும் 2 கோடிக்கு குறைவாக இருக்க வேண்டும்.
சம்பளம், ஓய்வூதியம் , வீட்டுச் சொத்திலிருந்து கிடைக்கும் வருமானம், லாட்டரி அல்லது குதிரைப் பந்தயம் போன்ற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் ரூ.50 லட்சத்திற்கு அதிகமாக இருக்க வேண்டும். விவசாய வருமானம் ரூ.5,000க்கு மேல் இருந்தால் இப்படிவத்தை நிரப்பலாம்.
உங்கள் வருமான வரிக் கணக்கை சமர்பித்து விட்டீர்களா? கடைசி தேதி எப்போது?
வரி செலுத்துபவர் ஒரு நிறுவனத்தின் இயக்குநராக இருக்கலாம்.
மூலதன ஆதாயத்திலிருந்து கிடைக்கும் வருவாய் 50 லட்சத்திற்கு மேல் இருந்தால், நிதியாண்டில் பட்டியலிடப்படாத ஈக்விட்டி பத்திரங்களில் ஏதேனும் முதலீடுகள் செய்தவர்கள், வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் வெளிநாட்டு வருமானம் மூலம் வருமானம் கிடைக்கிறது என்றால் இப்படிவத்தை நிரப்ப வேண்டும்.
ITR 3 படிவம்
சம்பளம் அல்லது ஓய்வூதியம், வீட்டுச் சொத்து அல்லது பிற வருமான ஆதாரங்களில் இருந்து தனிநபர்கள் மற்றும் இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் ரூ.2 கோடிக்கு மேல் பெற்றால் ITR 3 படிவம் நிரப்ப வேண்டும்
ஒரு வணிகம் அல்லது தொழிலில் இருந்து லாபத்தை உருவாக்கும் தனிநபர்கள், ஒரு நிதியாண்டில் பட்டியலிடப்படாத பங்கு பங்குகளில் ஏதேனும் முதலீடு செய்யதவர்கள், ஒரு நிறுவனத்தில் பங்குதாரராக ,இயக்குநராக இருந்தால் தகுதி பெறுவர்.
ITR 4 படிவம் (சுகம்)
இந்தியாவில் வசிக்கும் தனிநபர்கள், HUFகள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்கள் ஒரு வணிகம் அல்லது தொழிலில் இருந்து 2 கோடிக்கு மேல் வருமானம் பெற்றால், அவர்கள் ITR-4 ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
பட்ஜெட் முக்கியம் மக்களே.. ஆனால் எப்படி பட்ஜெட் போடுவது?
வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டாண்மைகள் (LLPகள்) இந்த வகை ITR படிவத்தைத் தேர்ந்தெடுக்க முடியாது. வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 44ADA, பிரிவு 44AD மற்றும் பிரிவு 44AE ஆகியவற்றின் கீழ் அனுமான வருமானத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்த வரி செலுத்துவோர் இந்தப் படிவத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ITR 5 படிவம்
செயற்கை ஜூரிடிகல் நபர் (AJP), வணிக அறக்கட்டளைகள், திவாலான சொத்து வைத்திருப்பவர்கள், இறந்தவரின் சொத்து வைத்திருப்பவர்கள் , மக்கள் இயக்கங்கள் (AOPs), LLPகள் மற்றும் நிறுவனங்கள் இந்த படிவத்தை நிரப்ப வேண்டும்.
ITR 6 படிவம்
ITR-6 என்பது வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 11 தொடர்பான விதிவிலக்குகளைக் கோராத எந்தவொரு நிறுவனத்திற்கும் பொருந்தும். இந்தப் பிரிவின் கீழ் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் நிறுவனங்கள் அதை மின்னணு முறையில் மட்டுமே செய்ய முடியும்.
ITR 7 படிவம்
பிரிவு 139(4A): அறக்கட்டளை அல்லது மத நோக்கங்களுக்காக செயல்படும் அறக்கட்டளை அல்லது பிற சட்டப்பூர்வக் கடமைகளுக்குச் சொந்தமான சொத்திலிருந்து வருமானம் பெறும் தனிநபர்களால் ITR படிவங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்..
பிரிவு 139(4B): ஒரு அரசியல் கட்சியின் மொத்த வருமானம் அதிகபட்ச தொகையை விட அதிகமாக இருந்தால், இந்த பிரிவின் கீழ் வரும்
பிரிவு 139(4C): அறிவியல் ஆராய்ச்சி சங்கம், மருத்துவமனைகள், மருத்துவ நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், நிதிகள், செய்தி நிறுவனங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களாக இருந்தால் இந்தப் பிரிவின் கீழ் ITR படிவங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ITRஐ தாக்கல் செய்ய தயாரா? அதற்கு முன்னர் நீங்கள் கவனிக்க வேண்டியவை!
பிரிவு 139(4D): கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களுக்கானது.
பிரிவு 139(4E): வணிக அறக்கட்டளைகள் இந்தப் பிரிவின் கீழ் ITR படிவங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.
பிரிவு 139(4F): பிரிவு 115UB இன் கீழ் இருக்கும் முதலீட்டு நிதிகள் மற்றும் வருமானம் அல்லது நஷ்டம் எதையும் அளிக்கத் தேவையில்லை, இந்தப் பிரிவின் கீழ் ITR படிவங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business, Income tax, Personal Finance