கொரோனா காலம் பல பாடங்களை நமக்கு சொல்லிக் கொடுத்து விட்டது. உடல்நலம், சேமிப்பு, இன்சூரன்ஸ், வேலை, வருமானம், தொழில், கடன் என நம்மை ஒரு பதம் பார்த்துவிட்டது. இருந்தாலும், எல்லாவற்றுக்கும் முதலாக பணம் என்ற விஷயம் அனைவரும் ஆட்டங்காட்டும் பொருள் எனலாம். இல்லாதவருக்கும், இருக்கவருக்கும் பணம் என்ன வேண்டுமானாலும் செய்யும்.
சரி. கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை நிலையான வருமான கிடைக்க என்ன வழி இருக்கு சொல்லுங்க.. என்று கேட்பவர்களுக்கு இந்த பதிவு ஒரு துளியேனும் பயனுள்ளதாக இருக்கும்.
கிராமங்களில், நகரங்களை தள்ளி புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் கறவை மாடு வளர்க்கும் எண்ணத்தை கையில் எடுக்கலாம். தினமும் ₹300 முதல் ₹500 வீதம் குறைந்தது சம்பாதிக்க முடியும்.
வேளாண்மை சார்ந்த தொழில்களில் , பெரும்பாலான வேலைவாய்ப்பும், லாபம் தரக்கூடிய தொழிலாக பால் உற்பத்தி விளங்குகிறது. ஆண்டு முழுவதும் பால் உற்பத்தி தொழில் வேலைவாய்ப்பை வழங்குகிறது. சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்களும் பால் உற்பத்தி மூலம் பயனடைகின்றனர்.
சிறிய இடத்தில் கூட 2 மாடு வரை வளர்க்க முடியும். 10 மாடுகள் எனில் சொந்தமாக விவசாயம் நிலம் உள்ள பகுதியில் கொட்டகை அமைத்து வளர்க்கலாம்.
மாடுகளுக்கு இயற்கைத் தீவனமான புற்கள், தழைகள், இலைகள் விவசாய நிலங்களிலேயே கிடைக்கக் கூடியவை. தினமும் மேய்ச்சலுக்கு அழைத்து சென்று மாடுகளுக்கு தீவனமளிக்கலாம்.
கடலை பிண்ணாக்கு, தவிடு, பொட்டு, உணவு கழிவு ஆகியவற்றை தினமும் தீவனமாகக் கொடுத்தால் கூடுதலாக பால் கிடைக்கும். சத்தான உணவு மாடுகளுக்கு வழங்கினால் பால் சுரப்பு அதிகரிக்கும்.
நல்ல நடுத்தரமான பசு மாடு, தினந்தோறும் 10 லிட்டர் பால் தரும். தரத்திற்கு ஏற்ப பால் கூட்டுறவு சங்கம், தனியார் பால் நிறுவனங்கள் ₹25 முதல் ₹35 வரை லிட்டருக்கு தருகின்றன. இதுவே வீடுகள், உணவகங்கள், டீ கடைகளில் ₹40 வரை விலை வைத்து விற்பனை செய்யலாம்.
பசுவின் பால் மட்டுமல்லாது, பால் மூலம் தயிர், நெய், வெண்ணெய் போன்ற பொருட்களை தயாரித்து சந்தைப் படுத்தலாம். இதனால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
அதுமட்டுமல்லாது, மாடுகளின் சாணம், கோமியம் உள்ளிட்டவை நிலத்திற்கு உரங்களாக பயன்படுகின்றன. இவற்றை சேகரித்து தேவைப்படு விவசாயிகளுக்கு விற்பனை செய்து பணம் ஈட்டலாம்.
இதுவே 10 க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து பால் உற்பத்தி செய்தால், முழு நேர தொழிலாக மாதம் பல ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை கூட வருமானம் ஈட்டலாம்
கறவை மாடு வளர்ப்பு மூலம் சுயமாக சம்பாதிக்கும் வாய்ப்பு உருவாவதால், யாரையும் எதிர்பார்த்து இருக்க வேண்டிய அவசியமில்லை. தனியாகவும், கூட்டாகவும் சேர்ந்து தொழில் தொடங்கி நாளொன்று 10 ஆயிரம் கூட வருவாய் ஈட்டலாம். இந்த தொழில் கிராமங்களில் பெண்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. மகளிர் குழு மூலம் வங்கி கடன் பெற்று, கறவை மாடு வளர்க்கலாம். அதுமட்டுமல்லாது அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண் அதிகாரிகளிடம், அரசின் நலத்திட்டங்களை கேட்டு நல்ல லாபகரமான தொழிலாக செய்யலாம்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள லோஹர்வாடா கிராமத்தில் வசிக்கும் ரத்தன் லால் யாதவ் என்பவர் நியூஸ்18 க்கு அளித்த பேட்டியில் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்னர், அவர் 5 பசுக்களுடன் பால் உற்பத்தி செய்து சம்பாதிக்க தொடங்கியதாக கூறினார். இப்போது 80 பசு மாடுகள் உள்ளதாக தெரிவித்த அவர், அதில் 35 மாடுகள் பால் கறந்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அவற்றில் இருந்து ஒரு நாளைக்கு 416 லிட்டர் பால் கறக்கப்படுவதாக தெரிவிக்கும் ரத்தன் லால் யாதவ், ஜெய்ப்பூரில் விற்பதாக தெரிவிக்கிறார். சந்தையில் பாலின் சராசரி விலை லிட்டருக்கு ரூ. 60 என்கிறார். அவர் கணக்குப்படி, ஒரு நாளைக்கு அவரின் மொத்த வருமானம் ரூ. 24,960 ஆகும். அதே நேரத்தில் ஒரு நாளைக்கு மொத்த செலவு சராசரியாக ரூ .14,900 ஆகும். மொத்தம் கூட்டி கழித்து பார்த்தால், ஒரு மாதத்திற்கு அவர் ரூ. 3,01,800 வருவாய் பெறுகிறார்.
மாடு வளர்ப்பு குறித்து அனுபவமிக்க விவசாயிகள் தரும் ஆலோசனைகளை கீழ்காணும் வீடியோக்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இது போன்ற பல்வேறு தொழில் வாய்ப்பு தகவல்களை பெற இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Business Idea, Dairy Farming, Milk Production