Home /News /business /

இந்தியாவின் மிக பெரிய பணக்காரப் பெண்ணான சாவித்ரி ஜிண்டால் பற்றி தெரியுமா?

இந்தியாவின் மிக பெரிய பணக்காரப் பெண்ணான சாவித்ரி ஜிண்டால் பற்றி தெரியுமா?

ஜின்டால் குழுமத்தின் தலைவர்

ஜின்டால் குழுமத்தின் தலைவர்

1950 இல் அஸ்ஸாமின் டின்சுகியாவில் பிறந்த சாவித்ரி ஜிண்டால், தொழில்துறையில் மட்டுமல்லாது அரசியலிலும் களம் கண்டவர் ஆவார்.

    இன்றைய கால கட்டத்தில் பெண்களும் ஆண்களுக்கு நிகராக பல துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். மேலும் சில பெண்கள் ஆண்களை விடவும் பல மடங்கு மேலே உயர்ந்தும் வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரப் பெண்ணான சாவித்ரி ஜிண்டால் மிகவும் போற்றக்கூடிய ஒருவர் ஆவார். இவர் ஒருபோதும் கல்லூரிகளுக்கு சென்று படித்ததில்லை. 2005 ஆண்டில் அவரது கணவர் இறந்த பிறகுதான் அவரது தொழிலை எடுத்து நடத்த தொடங்கினார். இதன் பிறகே இன்று பல கோடிகளுக்கு அதிபதியாக உள்ளார்.

    இவர் OP ஜிண்டால் குழுமத்தின் தலைவராக தற்போது சாவித்ரி ஜிண்டால் பதவி வகித்து வருகிறார். மேலும் இவர் இந்தியாவின் பணக்காரப் பெண்மணி என்கிற இடத்தையும் பிடித்துள்ளார். இரண்டே வருடங்களில் சுமார் $12 பில்லியன் டாலரை சேர்த்துள்ளார். மேலும் இதன் மூலம் $18 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன், ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பணக்காரப் பட்டியலில் உள்ள ஒரே பெண் சாவித்ரி ஜிண்டால் என்பது குறிப்பிடத்தக்கது. சாவித்ரி ஜிண்டால் கடந்த இரண்டு ஆண்டுகளில் தனது சொத்து மதிப்பை மூன்று மடங்கிற்கும் மேலாக உயர்த்தி உள்ளார். சுமார் $4.8 பில்லியன் டாலரில் இருந்து 2022 ஆண்டில் $17.7 பில்லியன் டாலருக்கு உயர்ந்தியுள்ளார்.

    2019 முதல் 2020 வரை, ஜிண்டாலின் சொத்து மதிப்பு 50 சதவிகிதம் சரிந்து இருந்தது. அவரது நிகர மதிப்பு 2018 இல் $8.8 பில்லியனில் இருந்து 2019 இல் $5.9 பில்லியனாகவும், 2020 இல் $4.8 பில்லியனாகவும் குறைந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில், சாவித்ரி ஜிண்டால் தனது சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் அசூர வளர்ச்சியை உருவாக்கி உள்ளார். தனது வயதை ஒரு போதும் கருத்தில் கொள்ளாமல் சாவித்திரி அவர்கள் கடுமையாக உழைத்து இந்த நிலையை அடைந்துள்ளார்.

    அதன்படி, இவரின் தலைமையின் கீழ் இந்நிறுவனம் நான்கு மடங்கு வளர்ச்சியை எட்டியுள்ளது. 2005 ஆம் ஆண்டு ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் இவரது கணவர் ஓம் பிரகாஷ் ஜிண்டால் இறந்த விட்டார். பிறகு சில வருடங்களில் சாவித்திரி தலைமை பொறுப்புக்கு வந்தார். இது குறித்து ஃபோர்ப்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "நாங்கள் வீட்டின் பொறுப்புகளை பார்த்து கொள்கிறோம், ஆண்கள் வெளியில் உள்ள அனைத்தையும் கவனித்துக் கொள்கிறார்கள்" என்று அவர் கூறி இருந்தார்.

    இதையும் படிங்க: கடன் வாங்கிக் குவிக்கும் இளைஞர்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்!

    ஆனால் ஓம் பிரகாஷ் ஜிண்டாலின் மரணம் சாவித்ரி வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது, பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியேறியது மட்டுமல்லாமல், தனது நாட்டின் பணக்காரப் பெண்ணாகவும் உருவாகி உள்ளார். ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இந்தியாவின் பணக்கார பெண்களின் பட்டியலில், கிரண் மஜும்தார் மற்றும் கிரிஷ்னா கோத்ரேஜ் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளனர்.

    1950 இல் அஸ்ஸாமின் டின்சுகியாவில் பிறந்த சாவித்ரி ஜிண்டால், வணிகம் தவிர அரசியலிலும் இறங்கினார். இவரின் கணவரான OP ஜிண்டால் ஹரியானா அரசாங்கத்தில் அமைச்சராகவும், ஹிசார் தொகுதியில் இருந்து ஹரியானா சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்தார். மேலும் சாவித்ரி ஜிண்டால் 2005இல் ஹிசார் தொகுதியில் இருந்து ஹரியானா சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது இவர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Business, Women Empower

    அடுத்த செய்தி