Home /News /business /

kisan credit card : இந்த கார்டு இருந்தால் போதும் லட்சங்களில் கடன் கிடைக்கும்

kisan credit card : இந்த கார்டு இருந்தால் போதும் லட்சங்களில் கடன் கிடைக்கும்

கிசான் கிரெடிட் கார்டு

கிசான் கிரெடிட் கார்டு

கிசான் கார்டு திட்டத்தில் கால்நடை வளர்ப்பு அல்லது மீன்வளத்துறை 4 சதவீத வட்டி விகிதத்தில் ரூ .2 லட்சம் வரை கடன் பெறலாம்.

    மத்திய அரசால் அறிமுகப்படுத்தபட்ட கிசான் கார்டு திட்டம் விவசாயிகளுக்கு மிகப் பெரிய அளவில் உதவிகரமாக இருக்கிறது.
    இந்த கார்டு மூலம் விவசாயிகள் பல்வேறு சலுகைகளை பெற முடியும். கடன் பெறலாம், மத்திய அரசு தரும் உதவி தொகையை பெறலாம்.அதே நேரம் கடன் பெற்று சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவோருக்குக் கூடுதல் சலுகைகளும் வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். விவாயிகள் பயிரிட, உரம் வாங்க இனி வெளியில் வட்டிக்கெல்லாம் கடன் வாங்க வேண்டாம். கிசான் கார்டு மூலம் அரசிடமே குறைந்த வட்டியில் கடன் பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த திட்டத்தில் கடன் பெறுபவர்களுக்கு மத்திய அரசு 2 சதவீத வட்டிச் சலுகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சேருவதற்கான தகுதி அதாவது யாரெல்லாம் கிசான் கார்டை வாங்க முடியும் என்றால் விவசாயிகள். அவர்களின் குறைந்தபட்ச வயது 18 வயது மற்றும் அதிகபட்ச வயது 75 ஆக இருக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்க இணை விண்ணப்பதாரர் தேவைப்படுவார்கள்.இப்போது இந்த திட்டத்தில் 7 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இதிலும் ஒரு சிறப்பு என்னவென்றால் கடனை குறிப்பிட்ட தேதியில் திருப்பி செலுத்தினால் அப்போது 4 சதவீத வட்டி மட்டுமே பெறப்படும்.

    ரூ. 3 லட்சம் வரை இதில் கடன் பெறலாம். இதற்கான படிகளை இப்போது பார்க்கலாம். கடன் பெற விரும்புவோர் https://pmkisan.gov.in/ சென்று முதலின் கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து அதில் கேட்டப்பட்டுள்ள விவரங்களை நிரப்ப வேண்டும். அதை வங்கியில் சமர்பிக்க வேண்டும். உங்களுக்காக தகுதி படிநிலைகள் அதிகாரிகளால் ஒருமுறை பரிசோதனை செய்யப்பட்டு கடன் வழங்கப்படும். கால்நடை வளர்ப்பவர்கள், மீனவர்கள் கிசான் கடன் அட்டையின் கீழ் விவசாய கடன்களுக்கும் விண்ணப்பிக்கலாம். கால்நடை வளர்ப்பு அல்லது மீன்வளத்துறை 4 சதவீத வட்டி விகிதத்தில் ரூ .2 லட்சம் வரை கடன் பெறலாம்.

    தேவையான ஆவணங்கள்: வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட், ஆதார் கார்டு, டிரைவிங் லைசன்ஸ்

    ஆன்லைனில் இதற்காக விண்ணப்பிக்கலாம். அதை தவிர்த்து எஸ்பிஐ, கூட்டறவு வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் நீங்கள் நேரடியாக விண்ணப்பத்தை பெற்று அதை நிரப்பி சமர்பிக்கலாம். இப்போது எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எப்படி இந்த கிசான் கார்டை வாங்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ttps://sbi.co.in/documents என்ற வெப்சைட் முகவரிக்கு சென்று படிவத்தை பதிவிறக்க செய்து கொள்ள வேண்டும். பின்பு அதை பூர்த்தி செய்து வங்கியில் சென்று கொடுத்தால் விண்ணப்பதாரரின் விவரங்களைச் சரிபார்த்து கிரெடிட் கார்டை வழங்கப்படும்.

    YONO SBI ஆப்பிலும் இதற்கான வசதி உள்ளது. Kisan Credit Card க்கு சென்று விவரங்களை நிரப்பி ஆன்லைனில் சமர்பித்தால் போதும் 1 வாரத்தில் வங்கியில் இருந்து உங்களை தொடர்பு கொள்வார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Loan

    அடுத்த செய்தி