Home /News /business /

குறைந்த வட்டியில் கடன் தரும் கிசான் அட்டை.. நீங்களும் பெற சரியான வாய்ப்பு!

குறைந்த வட்டியில் கடன் தரும் கிசான் அட்டை.. நீங்களும் பெற சரியான வாய்ப்பு!

கிசான் அட்டை

கிசான் அட்டை

விவசாய கடன் அட்டை வழங்கிட சிறப்பு முகாம் 24.04.2022 முதல் 01.05.2022 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.

    பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் வரும் ஒவ்வொரு விவசாய குடும்பமும், தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளில், அரசிடமிருந்து ஆண்டுக்கு ரூ.6,000 பெற வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் பயிர் சாகுபடி, கால்நடை வளர்ப்பு என அனைத்துக்கும் கடன் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஏப்ரல் 24 முதல் முதல் மே1 வரை கிசான் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் தமிழகத்தில் நடைப்பெறுகிறது.

    தங்கள் பெயரில் சாகுபடி நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாய குடும்பங்களும், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள். நாடு முழுவதும் இருக்கும் நலிவடைந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.பி.எம். கிசான் திட்டத்தில் உதவித்தொகை கிடைக்க வேண்டும் என்றால், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விவசாயிகள் முதலில் கிசான் திட்டத்தில் இணைய வேண்டும்.

    Bank Locker : வாடிக்கையாளர்களின் பொருட்கள் தொலைந்தால் வங்கிக்கு 100 மடங்கு அபராதம்!

    ஆதார் அட்டை உள்ளிட்ட மற்ற ஆவணங்களையும் எடுத்துச் சென்று உள்ளூரில் இருக்கும் வேளாண்மை அலுவலகத்தில், கிசான் விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்க முடியும் www.pmkisan என்ற தளத்துக்கு சென்று ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம். PM Kisan App வழியாகவும் உங்கள் விவரத்தை சரிபார்த்துக் கொள்ளலாம். இதுத்தவிர கிசான் அட்டை பெட்டை பெற விரும்பும் உள்ளூர் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    விவசாய கடன் அட்டை வழங்கிட சிறப்பு முகாம் 24.04.2022 முதல் 01.05.2022 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. இதில் பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்கிட உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் 24.04.2022 முதல் 01.05.2022 வரை சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    EPFO : உங்கள் பிஎஃப் கணக்கில் புதிய பேங்க் அக்கவுண்ட்டை சேர்க்க வேண்டுமா? இதை செய்யுங்கள்!

    இந்த முகாம் மூலம் இதுவரை விவசாய கடன் அட்டை பெறாத பிஎம் கிசான் திட்ட பயனாளிகளுக்கு விவசாயக் கடன் அட்டை வழங்கப்படும் . விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகளுக்கு 7 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். மேலும் இக்கடன் பெற்ற விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவுக்குள் முறையாக தவணை தவறாமல் திரும்ப செலுத்தினால் 3 சதவீதம் வரை வட்டி மானியம் பெறலாம். விவசாய கடன் அட்டை இல்லாத விவசாயிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விவசாய கடன் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Govt Scheme, PM Kisan, Tamilnadu

    அடுத்த செய்தி