முகப்பு /செய்தி /வணிகம் / மத்திய பட்ஜெட் 2023: முக்கிய அம்சங்கள்..!

மத்திய பட்ஜெட் 2023: முக்கிய அம்சங்கள்..!

நிதியமைச்சர்

நிதியமைச்சர்

Union Budget highlights | நிதியமைச்சர் நிர்மலா நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வரும் நிலையில், பட்ஜெட் அறிவிப்பின் முக்கிய அம்சங்களை பார்ப்போம்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் ஆகும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், மோடி அரசின் கடைசி முழு பட்ஜெட் இதுவே. சாமானியர்களின் நம்பிக்கை, விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

Budget 2023 Live: உடனுக்குடன் தகவல்கள் இங்கே

நிதியமைச்சர் நிர்மலா நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வரும் நிலையில், பட்ஜெட் அறிவிப்பின் முக்கிய அம்சங்களை பார்ப்போம்.

நிதியமைச்சரின் உரை:

இந்தியா சரியான வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பெரிய பொருளாதாரம் கொண்ட நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சி முதலிடத்தில் உள்ளது

9 ஆண்டுகளில் இந்தியாவில் பொருளாதாரம் உலக அளவில் 10ம் இடத்தில் இருந்து 5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாட்டின் வளர்ச்சி 7% -மாக உள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 11.7 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. உஜ்வாலா திட்டத்தின்கீழ் 9.16 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

47.8 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 44.6 கோடி பேருக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது

கிராமப்புறங்களில் வேளாண் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிப்பு. உலகப் பொருளாதார நிலையில் இந்தியாவிற்கு ஒரு சிறப்பான இடத்தை வழங்கும் வகையில் நமக்கு ஜி-20 தலைமைப் பொறுப்பு கிடைத்துள்ளது.

157 புதிய செவிலியர் கல்லூரிகள் உருவாக்கப்படும். 2047 ஆம் ஆண்டிற்குள் ரத்த சோகை நோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புதிதாக 50 உள்நாட்டு விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.

கோவிட் காலத்தில் ஒப்பந்தங்களை நிறைவேற்றாத சிறு, குறு நிறுவனங்களின் 95% டெபாசிட் திருப்பி வழங்கப்படும்

இ-நீதிமன்ற திட்டத்தின் 3-ம் கட்ட பணிகளுக்கு ரூ7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே துறை மேம்பாட்டிற்கு ரூ.2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

புதிய வழித்தட ரயில் திட்டங்களுக்காக ரூ.79,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

5ஜி ஆராய்ச்சி - 100 ஆய்வுக்கூடங்கள்

இந்தியாவில் 5ஜி சேவைகள் குறித்து ஆராய 100 செயலி ஆய்வுக்கூடங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படும்.

நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.

பிரதமர் வீட்டுவசதி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 66 சதவீதம் அதிகரிக்கப்படும். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு தனியார் முதலீடுகள் அனைத்து துறைகளிலும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

விவசாயத்திற்கான திட்டம்

இந்தியாவில் உள்ள 63,000 தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினிமயமாக்க ரூ.2,516 கோடி ஒதுக்கீடு.

விவசாய கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிப்பு.

வேளாண்மையை ஊக்குவிக்க வேளாண் ஊக்குவிப்பு நிதி.

வணிக அடையாள அட்டையாக பான் எண் பயன்படுத்தப்படும்

பிரதமரின் பிரணாம் திட்டம் தொடக்கம்

பிரதமரின் பிரணாம் திட்டத்தில் இயற்கை உரங்கள் பயன்பாடு உறுதி செய்யப்படும்.

3 ஆண்டுகளுக்கு 47 லட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். நகர்ப்புற வளர்ச்சி நிதியம் ஏற்படுத்தப்படும்

வர்த்தகம் புரிதலை எளிமையாக்கும் வகையில் 39,000-க்கும் அதிகமான நடைமுறைகள் நீக்கம். 42 புதிய சட்டங்கள் அறிமுகம். மூலதன முதலீடுகளுக்கான ரூ.10 லட்சம் கோடி வரை 33 சதவீதம் அதிகரிப்பு.

மகளிருக்கான புதிய சிறு சேமிப்பு திட்டம் 2025-ம் ஆண்டு வரை மட்டும் நடைமுறையில் இருக்கும்

740 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளிகளில் 38,800 புதிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மின்சார பரிமாற்றத் துறைக்கு ரூ.35,000 கோடி நிதிஒதுக்கீடு.கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் 500 புதிய திட்டங்களுக்கு அனுமதி.10,000 உயிரி உள்ளீடு மையங்கள் ஏற்படுத்தப்படும்

நிதி பற்றாக்குறை 5.9%

மொத்த ஜிடிபியில் நிதி பற்றாக்குறை 5.9% ஆக இருக்கும்.

வரி குறைப்பு

சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைப்பு

எலக்ட்ரிக் வாகன பேட்டரி மூலப்பொருளுக்கு வரி இல்லை

எலக்ட்ரிக் வாகன பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் -அயன் மூலப்பொருள்களுக்கு வரி இல்லை.

சுற்றுலா திட்டம்

எல்லையோர கிராமங்களில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் கட்டமைப்புத் திட்டங்கள் ஏற்படுத்தப்படும்.மாநில தலைநகர்களிலும் முக்கிய சுற்றுலாத் தலங்களிலும் ஒருங்கிணைந்த வணிக வளாக மையங்கள் ஏற்படுத்தப்படும்

கடலோரத்தில் உப்புத்தன்மை வாய்ந்த பகுதிகளில் அலையாத்தி காடுகளை மிஸ்டி என்ற பெயரில் வளர்க்க திட்டம்

டிவி விலை குறைகிறது

குறிப்பிட்ட சில மொபைல் உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கான சுங்கவரி குறைப்பு

டிவி பேனல்களுக்கான சுங்கவரி 2.5% குறைகிறது. இதனால் டிவி விலை குறையும்

கிளிசரின் கச்சாவுக்கான வரி 7.5%-ல் இருந்து 2.5% ஆக குறைப்பு

ஜவுளி மற்றும் வேளாண் பொருட்களைத் தவிர இதர பொருட்களுக்கான அடிப்படை இறக்குமதி வரி 21 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாகக் குறைப்பு

வெள்ளி பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

சிறு,குறு நிறுவன வருமான வரி உச்சவரம்பில் மாற்றம்

சிறு, குறு நிறுவனங்களுக்கான வருமான வரி உச்ச வரம்பு ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

வருமான வரி

ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வருமான வரி செலுத்த தேவையில்லை.

ரூ. 9 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சம் வரை 15% வருமான வரி செலுத்த வேண்டும்

வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வு

வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 2.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்வு.

ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வருமான வரி செலுத்த தேவையில்லை

வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 2.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்வு.

ரூ. 3 லட்சம் வரை வரி இல்லை

ரூ. 3-6 லட்சம் வரை 5 சதவீதம்

ரூ. 6-9 லட்சம் வரை 10 சதவீதம்

ரூ. 9-12 லட்சம் வரை 15 சதவீதம்

ரூ. 12-15 லட்சம் வரை 20 சதவீதம்

ரூ. 15 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம்

First published:

Tags: Nirmala Sitharaman, Union Budget 2023