வெளிநாடுவாழ் இந்தியர்கள் முதலீடு செய்ய புதிய நிறுவனத்தை தொடங்கும் கேரளா!

வெளிநாடுவாழ் இந்தியர்கள் முதலீடு செய்ய புதிய நிறுவனத்தை தொடங்கும் கேரளா!

பினராயி விஜயன்

கேரளாவிற்கு வளைகுடா நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிலிருந்து ஆண்டுக்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் அந்நிய செலாவணி வருகிறது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  வெளிநாடுவாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) கேரளாவில் மூதலீடு செய்வதற்கு ஏதுவாக, புதிய முதலீட்டு நிறுவனம் ஒன்றை கேரள அரசு தொடங்க உள்ளது.

  மலையாளிகளில் அதிகமானோர் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பணியாற்றுகின்றனர்.

  இந்நிலையில், 74 சதவீத என்.ஆர்.ஐ மலையாளிகள் மற்றும் 26 சதவீத மாநில அரசு பங்களிப்புடன் முதலீட்டு நிறுவனம் ஒன்றை தொடங்க கேரளா அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

  கேரளாவிற்கு வளைகுடா நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிலிருந்து ஆண்டுக்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் அந்நிய செலாவணீ வருகிறது.

  எனவே வெளிநாடுகளில் உள்ள மலையாளிகள், கேரளாவில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும், அதை பயன்படுத்தி கேரளாவின் கட்டுமான திட்டங்கள் போன்றவற்றை சிறப்பாக செயல்படுத்த என்.ஆர்.கே இன்வஸ்ட்மெண்ட் அண்ட் ஹோல்டிங் நிறுவனம் என்பதை தொடங்க உள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்திலிருந்து ஊடங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

  இந்த முதலீட்டு நிறுவனத்தில் என்.ஆர்.ஐ வணிகர்களின் பங்களிப்பும் இருக்கும். இந்த திட்டமானது சென்ற வருடம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவை புரணமைக்கும் முன்முயற்சியின் கீழ் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

  மேலும் பார்க்க:
  Published by:Tamilarasu J
  First published: