விதிமுறைகளை மீறும் அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள்? விசாரணையை தொடர கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு!

அமேசான்

இது, இந்தியாவில் விரிவடைந்து வரும் ஈ-காமர்ஸ் சந்தையை பாதிக்கும் ஒரு தீர்ப்பாக அமைந்துள்ளது.

  • Share this:
    போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தின் (சிசிஐ) விசாரணைக்கு எதிரான அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்களின் ரிட் மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் வணிக போட்டி எதிர்ப்பு நடைமுறைகள் தொடர்பாக அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு எதிரான போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தின் விசாரணையை தொடரலாம் என கர்நாடகா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேலும், ஏற்கனவே விதித்த இடைக்கால தடை உத்தரவை இரண்டு வாரங்கள் நீட்டிக்க ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் தாக்கல் செய்த மனுவையும் உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் தள்ளுபடி செய்தார். இது, இந்தியாவில் விரிவடைந்து வரும் ஈ-காமர்ஸ் சந்தையை பாதிக்கும் ஒரு தீர்ப்பாக அமைந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதைத்தொடர்ந்து, அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. ஒன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும், இல்லையென்றால், இரண்டு நீதிபதிகள் கொண்டு அமர்வு விசாரணையை கோர வேண்டும்.

    2019ஆம் அக்டோபர் மாதத்தில் தேசிய தலைநகரின் சிறு மற்றும் குறு தொழில் உரிமையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் டெல்லி வியாபாரிகள் சங்கம், போட்டி ஒழுங்குமுறை ஆணையத்திடம் அதிக விலை வைத்து விற்பனை செய்வது, ஸ்மோர்ட்போனளை அறிமுகம் செய்யும்போது விற்பனையாளர்கள் சிலருக்கு மட்டும் விற்பனையில் முன்னுரிமை தருவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக நாட்டின் மிகப்பெரிய இரண்டு இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக முறையீடு செய்திருந்தனர்.

    மேலும் இந்திய சந்தைகளுக்கான விதிகளை மீறி இந்த தளங்களில் பிரத்யேகமாக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது குறித்த பிரச்சினையையும் இது எழுப்பியது. இ-காமர்ஸ் நிறுனங்களோ, சந்தைகளோ, விற்பனையாளர்களை தங்களது தளத்தில் பிரத்தியோகமாக விற்க கட்டாயப்படுத்த முடியாது.

    இதன்காரணமாக வணிக போட்டிச் சட்டம் பிரிவு 3 மற்றும் 4 கீழ் டெல்லி வியாபாரிகள் சங்கம் புகார் மனு தாக்கல் செய்தன. இதைத்தொடர்ந்து, ஜனவரி 2020ல் வழக்கு விசாரணையை மேற்கொள்ள இயக்குனரகத்திற்கு சிசிஐ உத்திரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவுக்கு எதிராக அமேசான் நிறுவனம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சிசிஐயின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

    இதையடுத்து, இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து சிசிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போது, நீதிபதி நாகேஷ்வரா ராவ் இந்த வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என கூறினார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
    Published by:Esakki Raja
    First published: