ஹோம் /நியூஸ் /வணிகம் /

கர்நாடகாவில் ஊபர், ஓலா ஆட்டோக்களுக்கு திடீர் தடை... காரணம் என்ன? 

கர்நாடகாவில் ஊபர், ஓலா ஆட்டோக்களுக்கு திடீர் தடை... காரணம் என்ன? 

மாதிரி படம்

மாதிரி படம்

கர்நாடகாவில் விதிகளை மீறி செயல்பட்டதாக ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களின் ஆட்டோ சேவைக்கு 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 • News18 India
 • 2 minute read
 • Last Updated :
 • Bangalore, India

  பெங்களூருவில் ஓலா, உபர் மற்றும் ரேபிடோ போன்ற ரைட்-ஹைலிங் தளங்கள் முதல் 2 கி.மீ.க்கு குறைந்தபட்ச ஆட்டோ கட்டணமாக 30 ரூபாயையும், அதன் பிறகு வரக்கூடிய ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 15 ரூபாயையும் மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும் என கர்நாடகா போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட ஓலா, உபர், ரேபிடோ போன்ற நிறுவனங்கள் மக்களிடம் அதிக கட்டணங்களை வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது.

  அதாவது பெங்களூருவில் 2 கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்திற்கு கூட ஓலா, உபர், ரேபிடோ போன்ற நிறுவனங்களின் ஆட்டோக்கள் 100 ரூபாய் ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக ஏராளமான புகார்கள் குவிய ஆரம்பித்தன. இதனையடுத்து கர்நாடக போக்குவரத்து கழகம் ஓலா, உபர், ரேபிடோ நிறுவனங்களின் ஆட்டோ சேவையை மட்டும் உடனடியாக நிறுத்தும் படி உத்தரவிட்டுள்ளது.

  இதுகுறித்து கர்நாடக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அந்தந்த நிறுவனங்கள் தங்கள் ஆட்டோ சேவைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். டாக்சிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது. இந்த உத்தரவுகளை நிறைவேற்றத் தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" எனக்குறிப்பிட்டுள்ளது.

  கர்நாடகா மாநிலத்தின் போக்குவரத்துறை ஆணையரான டி.எச்.எம். குமார் கூறுகையில், “கடந்த இரண்டு, மூன்று நாட்களாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக ஆட்டோ சேவைகளுக்கு இரட்டிப்பு கட்டணம் வசூலிப்பதற்காக ஓலா, ஊபர் போன்ற வாகன சேவை நிறுவனங்கள் மீது புகார்கள் குவிந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

  எனவே 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும் படி ஓலா, ஊபர், ரேபிடோ ஆகியவை நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு கர்நாடகா போக்குவரத்து கழகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விளக்கம் தரும் வரை குறிப்பிட்ட நிறுவனங்கள் 3 நாட்களுக்கு ஆட்டோ சேவையை வழங்க கூடாது என்றும், டாக்சி சேவையை அரசு நிர்ணயித்த கட்டண வரம்புக்குள் இயக்கி கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  இதற்கிடையில், பெங்களூரு ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்கள் சங்கம் (ARDU) நவம்பர் 1 ஆம் தேதிக்குள் Ola, Uber, Rapido உள்ளிட்ட ரைட்-ஹைலிங் ஆப்களுக்குப் போட்டியாக ‘நம்ம யாத்ரி’ என்ற ஆப்பை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தது. கர்நாடகாவின் தொழில்முனைவோரான தொழில்முனைவோர் நந்தன் நிலேகனி ஆதரவு பெற்ற பெக்ன் அறக்கட்டளையுடன் இணைந்து புதிய ஆப் உருவாக்கப்பட உள்ளது.

  Read More: ஒபெக் நாடுகள் எடுத்த முடிவு எதிரொலி : இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு?!

  இதற்கு முன்னதாக பெங்களூரு ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்கள் சங்க தலைவர் ருத்ரசாமி, ஓலா, ஊபர் போன்ற ஆப்கள் பயணிகளிடம் இருந்து 100 ரூபாய் வரை கட்டணம் வசூலித்தாலும், 40 ரூபாயை கமிஷனாக எடுத்துக்கொண்டு 60 ரூபாயை மட்டுமே ஓட்டுநர்களுக்கு வழங்குவதாக குற்றச்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Ban, Ola, Uber