Home /News /business /

தினமும் ரூ.50 போதும்....ரூ.35 லட்சம் வரை லாபம் பெறலாம் - போஸ்ட் ஆபிசின் அசத்தல் திட்டம்!

தினமும் ரூ.50 போதும்....ரூ.35 லட்சம் வரை லாபம் பெறலாம் - போஸ்ட் ஆபிசின் அசத்தல் திட்டம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Post Office Plan | போஸ்ட் ஆபிசில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடியதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும் திட்டங்களில் ஒன்றாக உள்ளது கிராம சுரக்சா யோஜனா திட்டம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • New Delhi, India
    இன்றைக்கு உள்ள சூழலில் பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்துக் கொள்வதற்கு சேமிப்பு என்பது அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. மக்களும் தங்களுடைய எதிர்காலத் தேவைகளை நிவர்த்தி செய்துக் கொள்வதற்கு வங்கிகள், போஸ்ட் ஆபிசில் ஆர்டி, எப்டி, பிபிஎப், செல்வமகள் போன்ற திட்டங்களில் இணைந்து பயன்பெறுகின்றனர். வங்கிகளை விட தபால் அலுவலகங்களில் சேமிக்கும் பழக்கம் மக்களிடம் உள்ளது.

    அதற்கேற்றால் போல் போஸ்ட் ஆபிசிலும் ஆர்டி, எப்டி, பிபிஎப், செல்வமகள், மாதாந்திர வருமானத் திட்டம், சுகன்யா சம்ரிதி யோஜனா, பென்சன் திட்டம், முதியவர்களுக்கான ஓய்வூதிய திட்டம் என பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் வரும் என்பதால் எவ்வித அச்சமுமின்றி தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களில் இணையலாம். இந்த வரிசையில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய திட்டமாக உள்ளது கிராம சுரக்சா யோஜனா.. என்னென்ன அம்சங்கள் உள்ளது என விரிவாக அறிந்து கொள்வோம்.

    கிராம சுரக்ஷா யோஜனா (Gram Suraksha Yojana) என்றால் என்ன?

    பொதுவாக இந்திய அஞ்சல் துறையில் முதலீடு செய்து மக்களுக்கு முற்றிலும் பாதுகாப்பானது. மக்களும் தங்களுடைய சேமிப்பு பழக்கத்தை இங்கே அதிகரித்துவரும் நிலையில் அனைத்து தரப்பட்ட மக்களுக்காக உள்ள திட்டங்களில் ஒன்றாக உள்ளது கிராம சுரக்சா யோஜனா. குறைந்த முதலீடு தான்.

    ஆனால் அதிக லாபம் பெற முடியும். இத்திட்டத்தை ஆரம்பித்த நபர் ஒரு வேளை இறந்துவிட நேரிட்டால், அவருடைய பணம் அவரது நாமினிக்கு வழங்கப்படும்.

    கிராம சுரக்சா யோஜனா திட்டத்தின் விதிகள்:

    தபால் அலுவலகத்தில் உள்ள இந்த சேமிப்பு திட்டத்தில் இந்திய குடிமக்கள் அனைவரும் முதலீடு செய்யலாம். குறைந்தப்பட்சம் 10 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை முதலீடு செய்துக் கொள்ளலாம்.. குறிப்பாக உங்களுடைய வசதிக்கேற்ப தவணைத் தொயை மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் என டெபாசிட் செய்துக் கொள்ளலாம்.

    இத்திட்டத்தில் சேரும் நபர்கள் மாதந்தோறும் ரூ. 1515 மாதாந்திர பிரீமியமாக செலுத்த வேண்டும். அதாவது ஒரு நாளைக்கு ரூ. 50 நீங்கள் ஒதுக்கி வைத்தால் போதும். இதன் முதிர்வு காலத்தில் நீங்கள் ரூபாய் 31.60 லட்சம் வரை பெற முடியும். ஒரு வேளை நீங்கள் உங்களது பிரீமியம் தொகைக்கான கால அளவை நீட்டிக்கும் போது ரூ. 1411 டெபாசிட் செய்து ரூபாய் 34.60 லட்சம் வரை லாபம் பெறலாம்.

    Read More: அக்டோபரில் உயருமா சேமிப்புத்திட்டங்களின் வட்டி விகிதம்? எவ்வளவு? இதோ முழு விபரம்!

    மேலும் மற்ற சேமிப்புத்திட்டங்களில் உள்ளது போன்று இத்திட்டத்தில் சேர்ந்த 4 ஆண்டுகளுக்குப்பிறகு கடன் வசதி பெறும் அம்சம் உள்ளது. அதே சமயம் நீங்கள் 5 ஆண்டுகளுக்குள் இத்திட்டத்திலிருந்து விலகினாலோ அல்லது சரண்டர் செய்தாலோ எவ்வித போனாசும் உங்களுக்கு வழங்கப்படமாட்டாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

     
    Published by:Srilekha A
    First published:

    Tags: Govt Scheme, Post Office, Savings

    அடுத்த செய்தி